என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "non-vegetarian"

    • மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.
    • யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியபாத்தில் இந்திராபுரம் பகுதியில் KFC உணவக கிளை இயங்கி வந்தத. இந்நிலையில் நேற்று இந்த கடைக்குள் திடீரென காவிக்கொடியுடன் இந்து ரக்ஷா தளம் கும்பல் புகுந்தது.

    ஷ்ரவன் மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) அசைவ உணவு விற்கக்கூடாது என அங்குள்ள ஊழியர்களை கும்பல் மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

    சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    சைவம் மட்டுமே என்று வலுக்கட்டாயமாக கடையின் முன் போர்டை நிறுவியுள்ளது. ஆனால் தங்கள் உணவகத்திற்கு அசைவம் சாப்பிடவே மக்கள் வருகிறார்கள் என்றும் இதனால் தங்களுக்கு நஷ்டம் தான் என கடையை மூடுவதாக உணவக மேலாளர் தெரிவித்தார்.

    இதேபோல் மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.

    மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை கும்பல் நடத்தியுள்ளது. அதில் உள்ளே புகுந்து மிரட்டல் விடுத்து கும்பல் அத்துமீறியுள்ளதால் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    • சென்னையில் இருந்து பல் நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
    • வந்தே பாரத் ரெயிலில் அசைவ உணவு நீக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுவதாக பயணிகள் புகார் கூறினர்..

    இந்நிலையில், வந்தே பாரத் ரெயில்களில் காலை உணவில் அசைவ உணவு நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரெயில்களில் மூன்று வேளையும் அசைவ உணவு வழங்கப்படுவதாக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

    • மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுகிறது.
    • இது குறித்து தெற்கு ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது தொடர்பாக தெற்கு ரெயில்வே மற்றும் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தெற்கு ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.
    • ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    கடல் நண்டு - 5

    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- தேவையான அளவு

    பிரிஞ்சி இலை - 1

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    தக்காளி - 2

    வெங்காயம் - 1

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி- தேவையான அளவு


    செய்முறை:

    * முதலில் நண்டை கழுவி இடித்து தனியாக தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.

    * இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.

    * அதில் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு இடித்து போட்டாலும் சரி பேஸ்ட் போட்டாலும் உங்கள் வசதிக்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும்.

    * பின்பு அதில் கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இப்போது அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.

    * பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனை மூடி வைத்து கொதிக்கவிடவும்.

    * இது அனைத்தும் நன்கு வெந்தவுடன் ஒரு சூப் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

    • புனிதமான கோவிலில் மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
    • கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி நகர பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து கோவில் உள்ளது. இக்கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் தீபாவளி பண்டிகையொட்டி நிர்வாகத்திடம், துணி மணிகள், பட்டாசுகள் கேட்டனர்.

    அவர்களை மகிழ்ச்சி படுத்த நினைத்த கோவில் நிர்வாகம், மட்டன், சிக்கன் பிரியாணி மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது.

    புனிதமான கோவிலில் மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கியது தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு ஆதாரத்துடன் புகார் சென்றது.

    இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் விசாரிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அக்கோவிலில் இருந்த சில பொருட்களும் களவாடப்பட்டு யாருக்கும் தெரியாமல் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறியதற்கு அவர் பாசமாக வளர்த்த நாய் இறந்ததே காரணம். #DMKLeader #Karunanidhi #BlackDog
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி அசைவ பிரியராக இருந்தார். தினமும் அவரது உணவில் ஏதாவது அசைவ உணவு இருக்கும்.

    அந்த அளவுக்கு அசைவ உணவை விரும்பி சாப்பிட்டு வந்தார். திடீரென்று கருணாநிதி அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறினார். அதற்கு அவர் பாசமாக வளர்த்த நாய் இறந்ததே காரணமாகும்.

    கருணாநிதி, தொண்டர்கள் மீது மட்டுமல்ல வளர்ப்பு பிராணிகள் மீதும் அதிக பாசம் வைத்திருந்தார். வீட்டில் நிறைய நாய்களை வளர்த்து வந்தார்.

    கருப்பு நிறம் கொண்ட நாய் மீது கருணாநிதி அதிக பிரியம் செலுத்தி வந்தார். அவர் என்ன உணவு சாப்பிடுகிறாறோ அதை அந்த நாய்க்கும் கொடுப்பார். அவரிடம் நாய் துள்ளி குதித்து மடியில் ஏறி விளையாடும்.

    அந்த நாய் திடீர் என்று இறந்து விட்டது. இதனால் கருணாநிதி துயரம் அடைந்தார். அதன் பிறகு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சைவ உணவுக்கு மாறினார்.


    இதுகுறித்து கனிமொழி கூறுகையில், “கருப்பு நாய் மீது அதிகம் பாசம் வைத்திருந்த கலைஞர் அது இறந்ததால் சோகம் அடைந்தார். அதன் உடலை ஆலிவர் சாலையில் இருந்த வீட்டின் பின்புறம் புதைத்தோம். அது நினைவாக ஒரு மரக்கன்று நட்டு வைத்தோம்.

    நாய் திடீரென்று இறந்தது கலைஞரை மிகவும் பாதித்தது. அதனால் அவர் அசைவ உணவு சாப்பிடுவதை 2 ஆண்டுகள் நிறுத்தி விட்டார். மருத்துவ காரணங்களுக்காக அசைவ உணவு சாப்பிட டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள்” என்றார்.

    கவிஞர் இளையபாரதி கூறுகையில், “ஒருமுறை ராஜாத்தி அம்மாள் கீழே கிடந்த உலர் திராட்சையை மிதித்து வழுக்கி விழுந்து காலில் காயம் அடைந்தார். அன்று முதல் அந்த கருப்பு நிற நாய் உலர்திராட்சையை வீசினாலும் சாப்பிடாது. அந்த அளவுக்கு பாசத்துடன் இருந்தது” என்றார். #DMKLeader #Karunanidhi
    ×