என் மலர்
இந்தியா

VIDEO: அசைவம் விற்கக்கூடாது.. KFCக்குள் புகுந்து இந்துத்துவா கும்பல் அட்டூழியம் - உணவகம் மூடல்
- மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.
- யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியபாத்தில் இந்திராபுரம் பகுதியில் KFC உணவக கிளை இயங்கி வந்தத. இந்நிலையில் நேற்று இந்த கடைக்குள் திடீரென காவிக்கொடியுடன் இந்து ரக்ஷா தளம் கும்பல் புகுந்தது.
ஷ்ரவன் மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) அசைவ உணவு விற்கக்கூடாது என அங்குள்ள ஊழியர்களை கும்பல் மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சைவம் மட்டுமே என்று வலுக்கட்டாயமாக கடையின் முன் போர்டை நிறுவியுள்ளது. ஆனால் தங்கள் உணவகத்திற்கு அசைவம் சாப்பிடவே மக்கள் வருகிறார்கள் என்றும் இதனால் தங்களுக்கு நஷ்டம் தான் என கடையை மூடுவதாக உணவக மேலாளர் தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை கும்பல் நடத்தியுள்ளது. அதில் உள்ளே புகுந்து மிரட்டல் விடுத்து கும்பல் அத்துமீறியுள்ளதால் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.






