என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய காட்சி.
மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு
- திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைபணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , மங்கலம் ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம்:
தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைபணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளிபரிசை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான முகமதுஇத்ரீஸ், ராதாநந்தகுமார்,ராஜாபரமேஸ்வரன்,ரபிதீன்,பால்ராஜ்,அர்ஜூனன்,மங்கலம் ஊராட்சி செயலாளர் நாகராஜ் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , மங்கலம் ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






