search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women self help groups"

    • மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்பகுதிகளில் 3,482 குழுக்களில் 41,283 உறுப்பினர்கள் உள்ளனர்.
    • ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.2,440.98 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1095 குழுக்களில் 11,446 உறுப்பினர்களும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 647 குழுக்களில் 6303 உறுப்பினர்களும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் 813 குழுக்களில் 8228 உறுப்பினர்களும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 499 குழுக்களில் 5440 உறுப்பினர்களும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 484 குழுக்களில் 4996 உறுப்பினர்களும், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 1091 குழுக்களில் 11,051 உறுப்பினர்களும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 623 குழுக்களில் 6217 உறுப்பினர்களும்,

    ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 900 குழுக்களில் 9099 உறுப்பினர்களும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 584 குழுக்களில் 6120 உறுப்பினர்களும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 562 குழுக்களில் 5692 உறுப்பினர்களும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 561 குழுக்களில் 5595 உறுப்பினர்களும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 572 குழுக்களில் 6100 உறுப்பினர்களும், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 466 குழுக்களில் 4830 உறுப்பினர்களும், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 661 குழுக்களில் 7085 உறுப்பினர்களும் என ஊரகப் பகுதிகளில் மொத்தம் 9558 குழுக்களில் 98,202 உறுப்பினர்கள் உள்ளனர்.

    மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்பகுதிகளில் 3,482 குழுக்களில் 41,283 உறுப்பினர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆக மொத்தம் 13,040 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அதில் 1,39,485 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 236 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.35 லட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 465 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.69 லட்சம், 2023-2024-ஆம் ஆண்டில் அக்டோபர்-2023 வரை 188 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.28 லட்சம் என மொத்தம் ரூ.1.32 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 1,538 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.9.91 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 1,315 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.19.72 கோடி, 2023-2024-ஆம் ஆண்டில் அக்டோபர்-2023 வரை 389 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.01 கோடி என மொத்தம் ரூ.34.64 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 18,548 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.976.94 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 11,631 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.621.16 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 5,474 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.388.87 கோடி என மொத்தம் ரூ.1,986.97 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல் நகர்ப்புற பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 633 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.63 லட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 652 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.65 லட்சம் என மொத்தம் ரூ.1.29 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 328 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.15.28 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 3,148 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.207.40 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 3,911 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.194.08 கோடி என மொத்தம் ரூ.416.77 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-22 முதல் 31.10.2023 வரை ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.2,440.98 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்களில் பயனடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழக அரசுக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

    • அரசு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த போது பெண்கள் சிலர் அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்து கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கூறினர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உடன்குடி மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்யாது ஏன்? மீண்டும் அவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் கடன் பெற்றதாக வும், அதில் ஒரு சில குழுக்க ளுக்கு தள்ளுபடி செய்ய வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உடன்குடி யில் நடந்த ஒரு அரசு விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வந்தார். அரசு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த போது பெண்கள் சிலர் அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்து கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கூறினர். மனுவை வாங்கி படித்த அமைச்சர் உடனடியாக செல்போன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உடன்குடி மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்யாது ஏன்? மீண்டும் அவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

    கோரிக்கை மனு கொடு த்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அமைச்சர் பேசி யதை பார்த்து, கோரி க்கை மனு கொடுத்த பெ ண்கள் அமைச்சருக்கு பாரா ட்டும், நன்றியும் தெரி வித்த னர். அப்போது கட்சி நிர்வா கிகள் மற்றும் அரசு அதி காரிகள் உடன் இருந்தனர்.

    • மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்கப்படவுள்ளது.
    • தோ்வு செய்யப்படும் குழுவுக்கு உணவகம் நடத்த 11 மாத காலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க தகுதியான மகளிா் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்கப்படவுள்ளது.

    இதில் விண்ணப்பிக்க சிறுதானிய உணவகத்தில் வேறு பொருள்களை விற்பனை செய்யக்கூடாது.வேறு எந்த பணிகளிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஈடுபடக்கூடாது. சிறுதானிய உணவகத்தை தோ்வு செய்யப்பட்ட குழு மட்டுமே நிா்வகிக்க வேண்டும். வேறு எந்த குழுவுக்கோ, தனி நபா்களுக்கோ அல்லது வேறு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கோ வழங்கக்கூடாது.

    சிறு தானிய உணவகத்தில் விற்பனை பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மட்டுமே நியமனம் செய்து கொள்ள வேண்டும். தோ்வு செய்யப்படும் குழுவுக்கு உணவகம் நடத்த 11 மாத காலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு சுழற்சி, விற்பனை மற்றும் திறன் அடிப்படையில் தொடா்ந்து 2 முறை அனுமதி வழங்கப்படும். தோ்வு செய்யப்படும் மகளிா் சுய உதவிக்குழு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துடன் விதிமுறைகளுக்குள்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

    ஆகவே மேற்கண்ட விதிமுறைகளின்படி தகுதியான நபா்களின் விண்ணப்பங்களை திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், அறை எண் 305, மாவட்ட கலெக்டர் அலுவலகம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஜூன் 27 -ந் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971149, 94440-94162 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினர்.
    • 862 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.50.54 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.

    தென்காசி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் உதவி கடன் உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் இ.சி.ஈஸ்வரன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடனுதவிகளை பயனாளி களுக்கு வழங்கினர்.

    தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, 541 ஊரக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிகடன் இணைப்பு தொகை ரூ.38.02 கோடி மதிப்பிலும், 125 நகர்புறம் மகளிர் சுய உதவிக்குழுக்கான தொகை ரூ.11.03 கோடி மதிப்பிலும், 163 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சமுதாய முதலீட்டு நிதி மூலம் ரூ.1.07 கோடி மதிப்பிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 13 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இணை மானியம் தொகை ரூ.29 லட்சம் மதிப்பிலும், 8 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய திறன் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ரூ.5 லட்சம் மதிப்பிலும், 12 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய பண்ணை பள்ளிகள் அமைப்பதற்காக தொகை ரூ.8 லட்சம் மதிப்பிலும், என மொத்தம் 862 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.50.54 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) குருநாதன், மாவட்ட தொழில் மைய மேலாளார் மாரியம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணு வர்தன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சேக் அப்துல்லா (தென்காசி), சுப்பம்மாள் (கடையநல்லூர்), காவேரி சீனித்துரை (கீழப்பாவூர்) மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    செந்துறை:

    நத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகுடி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் பொது இடங்கள், பள்ளி, ஊராட்சி அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பொது கழிவறை மற்றும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் சரவணன், உதவி திட்ட அலுவலர் தேன்ராஜ், வட்டார இயக்க மேலாளர் விஜயலட்சுமி, கணக்காளர் விஜயலட்சுமி, சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர் ராதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொது இடங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றவும்,

    மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சுத்தம் செய்த தேதியை குறிப்பிடுமாறும், பொது இடங்களில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளையும், ஊராட்சி ஒன்றிய தலைவரையும் அறிவுறுத்தினர்.

    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர்கள் கிருஷ்ணன், முனியாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் கோகிலவாணி வீரராகவன், ஊராட்சி செயலர் வீரபாண்டி, பணித்தள பொறுப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவி 5 குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

    கொடைரோடு:

    அம்மையநாயக்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவி 5 குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி கொடைரோட்டில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் (பொறுப்பு) பழனிச்சாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சவுந்திரபாண்டியன், தி.மு.க பேரூர் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடன் உதவி வழங்கினர்.

    5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.நிர்வாகிகள் வண்ணக்கிளி, வாசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
    • சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும்.

    தாராபுரம்:

    தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சு.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியனின் தற்காலிகப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்வது உள்ளிட்ட நிலுவைக்கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாகப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மண்டல அளவில் வரும் ஜூலை 22 ந்தேதி தர்ணாவும், சென்னையில் வரும் ஆகஸ்ட் 16 ந்தேதி முதல் ஆகஸ்ட் 19 ந்தேதி வரையில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.

    சத்துணவு திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், இந்தத் திட்டத்தின் மகளிா் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்தாமல் சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்டத்தலைவா் ஞானசேகரன், மாநில துணைத்தலைவா்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.36½ லட்சம் கடனுதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கான மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டிற்கான செயல் திட்டம் தயாரிப்பது குறித்து ஜமுனா மரத்தூரில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு என பல்வேறு துறைகளின் மூலமாக ஜவ்வாது மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்கு தேவை யான விரிவான செயல் திட்டங்கள் குறித்து எடுத் துரைக்கப்பட்டது.

    மேலும் கலெக்டர், பள்ளிக் கல்வித்துறை, வனத்துறை பள்ளிகள், பழங்குடியினர் நலன் மற்றும் ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஜவ்வாது மலையில் தொழில் வளர்ச்சி கொண்டு வருவதற்கான திட்டங்கள், தேன் பதப்படுத் தும் அலகு, விவசாயத்தின் வளர்ச்சி, மினி விளையாட்டு அரங்கம், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார்.

    பின்னர் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலமாக ரூ.22 லட்சத்து 39 ஆயிரத்திற்கான கடனுதவியும், மகளிர் திட்டம் மூலமாக 15 குழுக்களுக்கு ரூ.14 லட்சத்து 20 ஆயிரத்திற்கான கடனுதவி யும் கலெக்டர் வழங்கினார்.

    இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    ×