என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ganesha statue"
- விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.
- விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.
பொன்னேரி:
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகின்றன. பொன்னேரி பகுதியில் கிருஷ்ணாபுரம் வெள்ளோடை ஆண்டார்குப்பம், ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.
பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 15 அடி வரை பல வண்ணங்களில் பலமுக விநாயகர், சிங்க முக விநாயகர், யானை முக விநாயகர், எருது விநாயகர், எலி அன்னம் விநாயகர், விளக்கு விநாயகர் , யானை புலி விநாயகர் என விதவிதமாக தயாராகி வருகின்றன.
இவை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இப்போதே ஏராளமானோர் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளுக்கு முன்பணம் செலுத்தி உள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலக்காமலும், நீரில் எளிதில் கரையக்கூடிய வகையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பொன்னேரியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது, விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
தினமும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மீஞ்சூர், பொன்னேரி, பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் கேட்டு முன்பதிவு செய்து உள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றார்.
- விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
- 300 ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. இந்த சிலைகளை பாலவாக்கம், திருவான்மியூர், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதியில் கரைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. இதற்காக ராட்சத கிரேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட போது கொண்டுவரப்பட்ட மாலை, பூஜை பொருட்கள், மரக்கட்டைகள், வாழை இலைகள், கயிறு, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் கடற்கரைகளில் குவிந்து கிடந்தன. இதனை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். மொத்தம் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டு 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி குப்பை கிடங்கு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
- விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலூர்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வருகிற வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
ஆய்வு
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள காத்தாக்கண்டர் கடைவீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் திருவள்ளுவர் சாலை, பழைய பைபாஸ் சாலை, சந்தை பகுதி, பஸ் நிலையம் மற்றும் அண்ணா சாலை, காவிரி சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
600 போலீசார் பாதுகாப்பு
விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலை மையில் சுமார் 600- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தெரிவித்தார்.
- வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
- முன்னதாக ஏற்காடு செல்வ விநாயகர் கோவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 8 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை வைத்து பிரசாதம் படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முன்னதாக ஏற்காடு செல்வ விநாயகர் கோவில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல ஏற்காடு லாங்கில்பேட்டை முத்துமாரியம்மன் கோவில், ஜெரினாகாடு பெரியமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
- சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை.
- போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் 3.5 அடி கொண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
அதன் பிறகு இந்த விநாயகர் சிலையை பொதுமக்கள் இரவு ஊர்வலமாக எடுத்து வந்து ஆப்பக்கூடல் தண்ணீர் டேங்க் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கி கரைத்து உள்ளனர்.
இந்த விநாயகர் சிலையை கரைக்க அந்தியூர் தாலுகா, வேம்பத்தி பொதிய மூப்பனூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் சங்கர் (18) என்பவரும், அவருடன் மேகநாதன், தம்பிராஜ், வேங்கைராஜ், ராஜா, ரமேஷ் உள்ளிட்ட நண்பர்களும் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சிலையை கரைத்து விட்டு பொதுமக்கள் கரையேறிய நிலையில் சங்கர் மட்டும் காணவில்லை. உடன் வந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி பார்த்து உள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் சங்கர் கிடைக்காததால் பவானி ஆற்றில் நீரில் மூழ்கி இருக்கலாம்? என்று கருதி உடன் வந்தவர்கள் ஆப்பக்கூடல் போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தன் பேரில் இரவு முழுவதும் சங்கரை தேடியுள்ளனர்.
பின்னர் இன்று காலை முதல் ஆப்பக்கூடல், பெருந்துறை, கவுந்தப்பாடி வழியாக செல்லும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் சங்கரை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விநாயகர் சிலைகளை ஆற்றங்கரையில் இறங்கி கரைக்கும் போது பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர்.
- மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட முஸ்லீகள் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களான மாலை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த ராசுவீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலை மற்றும் பூஜை பொருட்களை அவர்கள் வழங்கினார்கள். மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது ரியாஸ், நதிம், அஷ்ரப், ஏஜாஸ், ஜாபர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 312 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
- இந்து முன்னணி மாவட்ட தலைவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 312 சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இன்று காலை கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனைத்து விநாயகர் கோவில்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கோவில், மண்டபம், தேவிபட்டினம், கீழக்கரை சக்தி விநாயகர் கோவில், ஏர்வாடி வெட்டமனை, தொத்தன் மகன்வாடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
உலக நன்மை வேண்டியும் கல்வி, குடும்பம், திருமண தடை ஆகியவைகள் நீங்கி சிறப்படைய கூட்டுப்பிராத்தனையும் கோவில்களில் நடந்தது. தொடர்ந்து இன்றும் நாளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
ராமநாதபுரம் போலீஸ் சப் டிவிசனில்-65, பரமக் குடி-67, கமுதி-17, ராமேசு வரம்-103, கீழக்கரை 35, திருவாடானை-14, முது குளத்தூர் போலீஸ் சப் டிவிசனில் 11 என மாவட் டத்தில் மொத்தம் 312 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் 3 அடி முதல் 9 அடி உயரம் வரையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாலை யிலேயே வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர். பின்னர் விநாய கருக்கு உகந்த சுண்டல், கொழுக்கட்டை, கடலை, பொங்கல் அவல், பொரி போன்ற பொருட்களை வைத்து படைய லிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை உத்தரவின்படி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நேற்று மாலை முதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராம மூர்த்தி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்ஏற்பாடு பணிகளை செய்து வருகிறார்.
பின்னர் அவர் கூறுகையில், நாளை 19-ந்தேதி ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன், மண்டபம், பரமக்குடியில் ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் 20-ந்தேதி தேவிபட்டினம், திருப்புல்லாணி, ஏர்வாடி, சாயல்குடி, திருப்பாலைக் குடி ஆகிய பகுதிகளில் ஊர்வலம் நடைபெறும் என்றார்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் விநாயகர் சிலை விற்பனை மும்முரம் நடந்தது.
- பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.
ராமேசுவரம்
நாடு முழுவதிலும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று சிலையை வைத்து வழிபாடு நடத்தி நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த நிலையில், ராமேசுவரத்தில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்திடும் வகையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வைக்கப் பட்டுள்ளது. இதில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வியாபாரிகள் செந்தில் மற்றும் ராமன் ஆகியோர் 800 விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய கொண்டு வந்து பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.
கண்மாய் மணல் மூலம் தயாரிக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கும் போது மீன்களுக்கும், நீரின் தன்மை மாசுபடாமல் இருக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். வீடுகளில் வழிபாடு செய்திடும் வகையில் பல வர்ணங்களில் சிறிய அளவி லான சிலைகள் விற்ப னைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
- அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.
- தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் விமரிசையாக நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், மஞ்சூர், எமரால்டு, இத்தலார், காத்தாடி மட்டம், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் 30 சிலைகள் என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதுதவிர பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. ஊட்டியில் இந்து முன்னணி சார்பில் வருகிற 20-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்படுகிறது. அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஊட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது பதட்டமாக கண்டறியப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளி மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடந்தது. தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்றடைந்தது.
அதேபோல காந்தலிலும் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பில் ஆயுதம் ஏந்திய போலீசார் பங்கேற்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்த ராஜன், டி.எஸ்.பி.க்கள் யசோதா, விஜயலட்சுமி மற்றும் காவல்துறை உயர்அ திகாரிகள் கலந்து கொண்டனர்.
- விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுவதாக அவர்கள் புகார் கூறினர்.
- மறியலுக்கு முயன்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
நெல்லை:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவையொட்டி ரசாயன கலப்பு கொண்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க ஐகோர்ட்டும், பசுமை தீர்ப்பாயமும் தடை விதித்துள்ளது.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு கூடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பாளை சீவலப்பேரி ரோடு கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் செய்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள் ரசாயன கலப்பு இருப்பதாக கூறி, அங்கு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து தகரம் வைத்து அந்த கூடத்தை அடைத்து அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதற்கு நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். வழிபடுவதற்காக செய்யப்பட்ட சிலைகளை விற்பனைக்கு வழங்காமல் தடுத்து, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுவதாக அவர்கள் புகார் கூறினர்.
மேலும் தயாரித்து வைத்துள்ள சிலைகளை விற்பனைக்கு வழங்க கோரி நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்டத் தலைவர் தயா சங்கர் தலைமையில் இன்று வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நாகராஜன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி அங்கு பாளை உதவி கமிஷனர் பிரதீப் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்ந்து பா.ஜ.க.வினர் சாலை மறியலுக்கு முயற்சி செய்தனர். அப்போது அவர்களிடம் உதவி கமிஷனர் மற்றும் பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியலுக்கு அனுமதி கிடையாது, மீறி மறியலுக்கு முயன்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் மாவட்ட தலைவர் தயாசங்கர் கூறுகையில், இந்த ஆண்டு 180 சிலைகள் தயாரிக்கப்பட்டு கிருபா நகர் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளுக்கு நாங்கள் முன்பணமும் கொடுத்துவிட்டோம். எனவே இந்த ஆண்டு மட்டும் அந்த சிலைகளை எங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி கரைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு மட்டுமாவது அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அவர்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் பேசி இறுதி முடிவை அறிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இறுதி முடிவு தெரியும்வரை இங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி பாரதிய ஜனதா கட்சியினர் அங்கேயே அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
- அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜீத் வலியுறுத்தினார்.
- அரசின் அறிவுரையின்படி பொது மக்கள் கடைபிடித்திடல் வேண்டும்.
சிவகங்கை
முதலமைச்சரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டு தல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
அதில், கீழ்கண்ட நடைமுறைகளை அரசின் அறிவுரையின்படி பொது மக்கள் கடைபிடித்திடல் வேண்டும்.
களிமண்ணால் செய்யப் பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவை யற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட் களால் மட்டுமே செய்யப் பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப் படுகிறது.
சிலைகளின் ஆபர ணங்கள் தயாரிப்ப தற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப் படலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட் களை பயன்படுத்த கண்டிப் பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணை வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சு களை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
மேலும், விநாயகர் சிலைகளை சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சிவகங்கை தெப்பக்குளம், மானாமதுரை, ஆலங்ககுளம், இளை யான்குடி சாலை கிராமம் டேங்க், சிவன்கோவில் ஊரணி, சிலம்பனி ஊரணி, சிங்கம்புணரி ஊரணி இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா டும்படி பொதுமக்கள் கொண்டாடிட வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகி யோர்களை அணுகலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
- மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மக்க ளாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி நீர் ஆதாரத்தை தருகிறது.
நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே, பொது மக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது.
* களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் (பி.ஒ.பி.), பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
* சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
* ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
* சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தகுந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
* சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்.
* விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்