என் மலர்

  நீங்கள் தேடியது "Water bodies"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.
  • பெயிண்ட் பூசப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

  விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்ற பின் அந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும். சிலைகளின் உயரம் மற்றும் அவை வைக்கப்பட வேண்டிய மேடை போன்றவற்றின் அளவு அந்த இடத்தின் அமைப்பாளரால் குறிப்பிடப்பட வேண்டும்.

  சிலை வைக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விழா ஏற்பாட்டாளர்கள் குழாய் வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை செய்யப்படும் நேரங்களில் முறையே 2 மணிநேரம் மட்டுமே ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்.ஒவ்வொரு சிலையையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் நியமனம் செய்வார்கள்.

  ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் செய்ய வேண்டும். அனைத்து ஊர்வலங்களும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மத ரீதியான பகுதிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

  களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்து செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வேதிப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் பயன்படுத்தக் கூடாது.

  மேலும், பெயிண்ட் பூசப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது. சிலைகள் நிறுவப்படும் பந்தல் கட்டுமானத்தை எளிதில் தீப்பற்றும் வகையிலான பொருட்களை கொண்டு செய்வதை தவிர்க்க வேண்டும். வழிபாடு இடத்தின் அருகில் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லாததையும் உறுதி செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளன.
  • குளங்களில் கரையோரத்திலுள்ள கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுகள் நேரடியாக கலந்து குளத்து நீரை மாசுபடுத்துகிறது.

  உடுமலை :

  உடுமலையில் ஏழு குளம் பாசனம் மற்றும் பி.ஏ.பி., தளி கால்வாய், உடுமலை கால்வாய், பிரதான கால்வாய் முக்கிய நீராதாரங்களாக உள்ளன.கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளன.

  இத்தகைய நீராதாரங்களை பாதுகாத்து பராமரிப்பதில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் நீர்நிலைகள் மாசடைந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.குறிப்பாக ஏழு குளங்களில் கரையோரத்திலுள்ள கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுகள் நேரடியாக கலந்து குளத்து நீரை மாசுபடுத்துகிறது.மேலும் கிராமங்களிலுள்ள பிற குளங்கள் அனைத்தும் குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டு குப்பை, கட்டிட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் என குப்பை கொட்டும் இடமாக மாற்றப்படுகிறது.

  அதே போல் தளி கால்வாய், உடுமலை கால்வாயின் வழியோரத்திலுள்ள தளி பேரூராட்சி, பள்ளபாளையம், ஜல்லிபட்டி, போடிபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சிகளில்குடியிருப்புகளிலிருந்து நேரடியாக கழிவு நீர் கால்வாயில் கலக்கிறது.மேலும் கால்வாய் கரையில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதால் குப்பை கழிவுகளும் பாசன கால்வாயில் நேரடியாக கலந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

  தளி பேரூராட்சியிலிருந்து கழிவுகள், குப்பை மற்றும் சாக்கடை கழிவுகள் மற்றும் வழியோர குடியிருப்புகளின் கழிவுகளும் தளி கால்வாயில் நேரடியாக கலக்கிறது.இக்கால்வாய் வழியாக 7 குளங்களுக்கு நீர் செல்வதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. வாய்க்காலில் அதிக அளவு சேறும், சகதியும் படிந்து துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுகிறது.

  பாசன நீருடன்கழிவு நீரும் கலந்து குளங்களில் தேங்குவது மற்றும் விவசாயம், குடிநீருக்கும் பயன்படுத்தும் போது, மக்களும் பாதிக்கின்றனர். ஜல்லிபட்டி ஊராட்சி கழிவுநீர் மற்றும் குப்பை, இறைச்சிக்கழிவுகள், தென்பூதிநத்தம், அம்மாபட்டி குளத்தில் நேரடியாக கலக்கப்படுகிறது. போடிபட்டி ஊராட்சி மற்றும் குடியிருப்புகளிலிருந்து, ஒட்டுக்குளத்தில் சாக்கடைக்கழிவுகள் கலப்பதோடு, குப்பை, கழிவுகள் கொட்டப்படுகிறது.பள்ளபாளையம் ஊராட்சிப்பகுதியிலிருந்து செங்குளத்தில் இதே போல், கழிவுகள் கலக்கிறது.

  எனவே, தளி கால்வாய் மற்றும் ஏழு குளங்கள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் தளி கால்வாய் வழியோரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளும், உடுமலை கால்வாய், பூலாங்கிணர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் வழியோரத்தில், நீர் நிலைகளை மாசுபடுத்தும் வகையில் அமைந்துள்ள கழிவு நீர் கலக்கும் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பை கொட்டும் மையங்களை அகற்ற வேண்டும்.உடுமலை பகுதிகளின் பாசனம், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரங்களாக உள்ள நீர் நிலைகளை காக்க, உரிய நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, நிதி ஒதுக்கீடு செய்து நீர்நிலைகள் மாசடைவதை தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

  ×