search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rivers"

    • ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆறுகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மெலட்டூர் அணையில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும், தென் பெரம்பூர் அணையில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் என மொத்தம் 1 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடும் நோக்கில் தேசிய மீன்வளம் மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக பிரதான் மந்திரி மத்திய சம்படா யோஜனா திட்டத்தில் ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆறுகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தென்பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் நிரஞ்சன் மற்றும் மெலட்டூர், அகரமாங்குடி பகுதி மீனவர்கள் கணேசன், ரமேஷ், கலைஅமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மீன்வளத்துறை உதவி இயக்குனர் மா சிவக்குமார், மேற்பார்வையில் வெட்டாற்றில் மெலட்டூர் அணையில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும், தென் பெரம்பூர் அணையில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் என மொத்தம் 1 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர் ஆனந்து மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், உள்நாட்டு மீனவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு.
    • பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.இந்த ஆறுகளுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வரும்போதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படாமலும் இருக்க பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ப ட்டு வருகின்றன.

    ஆறுகள் மற்றும் வடிகால்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க திருமருகல் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த மணல் மூட்டையில் அடுக்கி இருப்பதை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை தஞ்சை கீழ் காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, நன்னிலம் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் செங்கவராயன், திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கிய மேரி, திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன், செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
    • ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

    மஞ்சூர்

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையான 210 அடி உயரம் கொண்ட அப்பர் பவானியில் தற்போது 180 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அைண நிரம்பியுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சாண்டி நல்லா அணை தனது முழு கொள்ளளவான 49 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து உள்பட நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

    இதன் காரணமாக குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணைக்கு நீர் வரத்து பெருமளவு அதிகரித்தது.

    அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 89 அடியை எட்டியது. இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மின்வாரிய உயர் அதிகாரிகள் முன்னிலையில் குந்தா அணையின் மதகுகள் திறந்து விடப்பட்டது.

    வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×