search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fish Fry"

    • பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
    • இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே நெடுமானூரில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது இந்த மீன்கள் வளர்ந்து பெரியதாகி விட்ட நிலையில், மீன்களை பிடித்து கிராம மக்களுக்கு வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. பின்னர் அதன்படி ஏரியில் மீன்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட மீன்களை 1300 குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 2½ கிலோ மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

    • கடந்த 2017-ம் ஆண்டு கேரள கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 58 வகை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
    • 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில கடல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீன்கள் வரத்து குறைந்தது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு கேரள கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 58 வகை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் பலன்களை ஆய்வு செய்ய நிவுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் கடுமையான தடையை அமல்படுத்தியதன் மூலம் கேரள மாநிலத்தின் மீன்வரத்து கடந்த நிதியாண்டில் 6.9லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

    ஆகவே மீன்படி தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதையடுத்து 58 வகை மீன் குஞ்சுகள் பிடிப்பதற்கான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.   

    • மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
    • அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு வளர்க்கப்படும் மீன்கள் உரிமம் பெற்ற மீன வர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .

    இதற்காக அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    6 லட்சம் மீன் குஞ்சுகள்

    நடப்பாண்டில் முதல்கட்ட மாக அணை யின் நீர்த்தேக்க பகுதியான மாசிலாப் பாளையம் காவிரியாற்றில் மீன்வளத்துறை சார்பில் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதில் ரோகு 4.5 லட்சமும், மிர்கால் 1.5 லட்சம் மீன் குஞ்சுகளும் விடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் கோகுல ரமணன் ஆர்.டி.ஓ. தணிகாசலம், சதாசிவம்

    எம்.எல்.ஏ. (பா.ம.க.) மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மின் நிலைய பராமரிப்புக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
    • காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த செக்கானூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கதவனை மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன. இதனைக் கண்ட அந்த கிராம மக்கள் மீன்குஞ்சுகளை குவியலாக அள்ளிச் சென்றனர். ஒரு சிலர் மீன் குஞ்சுகளை ஆற்றங்கரையில் உள்ள பாறைகளில் காய வைத்து கருவாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    • ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆறுகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மெலட்டூர் அணையில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும், தென் பெரம்பூர் அணையில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் என மொத்தம் 1 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடும் நோக்கில் தேசிய மீன்வளம் மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக பிரதான் மந்திரி மத்திய சம்படா யோஜனா திட்டத்தில் ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆறுகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தென்பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் நிரஞ்சன் மற்றும் மெலட்டூர், அகரமாங்குடி பகுதி மீனவர்கள் கணேசன், ரமேஷ், கலைஅமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மீன்வளத்துறை உதவி இயக்குனர் மா சிவக்குமார், மேற்பார்வையில் வெட்டாற்றில் மெலட்டூர் அணையில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளும், தென் பெரம்பூர் அணையில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் என மொத்தம் 1 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர் ஆனந்து மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், உள்நாட்டு மீனவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். நாளை சன்டே ஸ்பெஷலாக காராசாரமான முறையில் மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முள் இல்லாத மீன் - அரை கிலோ
    தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    சின்ன வெங்காயம் - 10
    இஞ்சி - 2 இன்ச்
    பூண்டு - 6 பற்கள்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிது
    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    சுத்தம் செய்த மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,

    சன்டே ஸ்பெஷல் ஸ்பைசி மீன் வறுவல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீன், தேங்காய் சேர்த்து சூப்பரான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வஞ்சிர மீன் - 250 கிராம்
    சோளமாவு - 2 ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
    எலுமிச்சை பழம் - பாதி
    மிளகு பொடி - 1 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    தேங்காய் துருவல் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை:

    இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.

    அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் இந்த வாழை இலை மீன் மசாலா மிகவும் பிரபலம். இன்று இந்த வாழை இலை மீன் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    மீன் துண்டுகள் - 6,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 3,
    தக்காளி - 1,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
    மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.
    நல்லெண்ணெய் - 100 மிலி,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    வாழை இலை - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மீனில் சிறிது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறிய மீனை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழை இலையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு போட்டுக் கிளறவும்.

    நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும்.

    வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான வாழை இலை மீன் மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீனை வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்பினால், கறிவேப்பிலை மீன் வறுவலை செய்து சுவையுங்கள். இதை வறுவலை செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் (Pomfret Fish) - 1 பெரிய கையளவு
    தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    கறிவேப்பிலை - 1 கையளவு
    மிளகு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2-3
    பூண்டு - 4 பற்கள்
    பச்சை மிளகாய் - 3-4
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 3-4 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு அதனுடன் அரைத்த மசாலாவை மீனில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீனை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஓரே மாதிரியான அசைவ உணவை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு புதிதாக ஏதாவது சாப்பிடத் தோன்றும். அப்படிப்பட்டவர்களுக்கான காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    மீன் - 500 கிராம்
    மிளகுத்தூள் - 1 கரண்டி
    உப்பு - தேவைக்கு
    ஏலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
    எண்ணெய் - பொரிப்பதற்கு



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும்.

    மீனில் எலுமிச்சம் சாற்றை ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசறி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

    ஓட்டாத கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் போட்டு காய்ந்ததும் தனித்தனியாக மீனை அடுக்கவும்.

    பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சுவையான காரமான மிளகு மீன் வறுவல் ரெசிபி தயார்.!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேளராவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். இன்று சூப்பரான இந்த வாழை இலை மீன் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன்  - அரை கிலோ
    சின்ன வெங்காயம்  - 10
    மிளகாய் பொடி  - ஒரு ஸ்பூன்
    கரம்மசாலா பொடி   - 2 ஸ்பூன்
    பூண்டு   - 4
    இஞ்சி - சிறிது
    புதினா, கொத்தமல்லி இலை - சிறிது
    கறிவேப்பிலை  - 2 ஆர்க்கு
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்   - 2 ஸ்பூன்



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

    சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

    வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழைஇலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான வாழை இலை மீன் வறுவல் ரெடி.

    குறிப்பு - மீனை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சோத்து கலந்து 5 நிமிடம் தோசை கல்லில் போட்டு வறுத்து அதன் பின்னர் மசாலா சேர்த்து செய்யலாம். மீனை தோசை கல்லில் போட்டு வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்தும் செய்யலாம். டயட்டில் இருப்பவர்கள். வயதானவர்கள் இவ்வாறு செய்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×