search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banana Leaf Fish"

    கேரளாவில் இந்த வாழை இலை மீன் மசாலா மிகவும் பிரபலம். இன்று இந்த வாழை இலை மீன் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    மீன் துண்டுகள் - 6,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 3,
    தக்காளி - 1,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
    மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.
    நல்லெண்ணெய் - 100 மிலி,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    வாழை இலை - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மீனில் சிறிது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறிய மீனை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழை இலையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு போட்டுக் கிளறவும்.

    நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும்.

    வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான வாழை இலை மீன் மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×