மேலப்பாளையம் அருகே நீர்நிலை பகுதியில் இறந்து கிடந்த 20 நாய்கள்

நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் காணவில்லை என கூறப்படுகிறது.மேலக் கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன.
மேலப்பாளையம் அருகே நீர்நிலை பகுதியில் இறந்து கிடந்த 20 நாய்கள்
Published on

நெல்லை:

மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலக் கருங்குளம் பகுதி. இங்கு விவசாய தோட்டங்கள் அதிகம் இருப்பதால் இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் காணவில்லை என கூறப்படுகிறது.

இறந்து கிடந்த 20 நாய்கள்

இந்நிலையில் இன்று காலையில் மேலக் கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இவற்றில் பல நாய்கள் நீர்நிலைகளின் அருகே இறந்து கிடக்கிறது.

எனவே அந்த நீர்நிலைகளில் விஷம் கலக்கப்பட்டு அதை குடித்ததால் நாய்கள் இறந்ததா? அப்படி என்றால் அந்த நீரை மற்ற விலங்குகள் குடித்து அசம்பாவித சம்பவம் நிகழும் முன்பாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்க வேண்டும், இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

X

Maalai Malar
www.maalaimalar.com