என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Meningitis"
- பருவமழை காலங்களில் காய்ச்சல், சளி வழக்கமானது தான்.
- மூளைக்காயச்சலை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் குணமாக்கி விடலாம்.
சென்னை:
சென்னையில் பருவமழை அவ்வப்போது பெய்வதால் காய்ச்சல் அறிகுறியுடன் ஏராளமான குழந்தைகள் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்படு கிறார்கள்.
அவ்வாறு அழைத்து செல்லபபடும் குழந்தைகளில் பல குழந்தைகள் வாந்தி, கழுத்து வலி, மாறுபட்ட மன நிலைகளுடன் காணப்பட்டன.
இந்த அறிகுறியுடன் காணப்பட்ட குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள். தொடர்ந்து அழுகிறார்கள். இந்த மாதிரி குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுபற்றி சூரியா மருத்துவமனையின் குழந்தைகள் நல மூத்த மருத்துவர் டாக்டர் தீபாஸ்ஹரிகரன் கூறியதாவது:-
பருவமழை காலங்களில் காய்ச்சல், சளி வழக்கமானது தான். ஆனால் காய்ச்சல் வந்ததும் மருந்து கொடுத்தும் 48 மணி நேரத்துக்கும் மேலாக காய்ச்சல் நீடித்தாலோ, குழந்தைகள் சோர்ந்து போனாலோ உடனே மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
காய்ச்சல் வந்தாலும் அது 103 டிகிரி அளவுக்கு நெருப்பாக கொதிப்பது, சமாதானப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருப்பது, கொஞ்சம் கூட பால் குடிக்க முடியாமல் சோர்ந்து இருப்பது, 6 முறைக்கு மேல் வாந்தி, பேதி ஏற்படுவது, இருமும்போது முச்சு வாங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
மூளைக்காயச்சலை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் குணமாக்கி விடலாம். பள்ளிகள் திறந்ததும் யாராவது ஓரு குழந்தைக்கு காய்ச்சல் காணப்பட்டாலும் மற்றவர்களுக்கு எளிதாக பரவிவிடும்.
குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகளையும் பொதுவாக குழந்தைகள் 4 வயதாகும் போது 4-வது பூஸ்டர் ஊசியை பலர் போடாமல் இருந்து விடுகிறார்கள். அது தவறு.
அதிமாக சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக காய்ச்சல், சளி இருக்கும் குழந்தைகள் கை, குட்டையை வைத்து இருமுவதற்கு பழக்கி கொடுக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவும் சொல்லித்தர வேண்டும் என்றார்.
- நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
- நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அண்மை காலங்களில் கேரளாவில் 4 பேர் மூளைக்காய்ச்சல் நோயினால் இறந்து இருக்கிறார்கள். இந்த மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து வலி, மன குழப்பம், பிரமைகள் போன்ற சிந்தனைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இந்த அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நோயில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் மாசுபட்ட அழுக்கு நீரீல் குளிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.
தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரமாக உள்ளதா என்று உறுதி செய்யப்பட வேண்டும்.
பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.
நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வெளியூர் பயணம் மற்றும் சந்தேகத்திற்குரிய நோயின் அறிகுறிகளின் கண்டறிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வலிப்பு நோய் ஏற்பட்டவரை உடனே ஒரு பக்கமாக திருப்பிவிட வேண்டும்.
- சிறிது நேரம் ஓய்வெடுக்க விடவேண்டும்.
மூளை மற்றும் நரம்பு செல்களில் இயற்கையாக தகவல் பரிமாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது, இயற்கையாக அவற்றுக்கு இடையே இயல்பாக மிகச்சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது அதிக அழுத்தத்தினாலோ, திடீரென்று மூளைக்கு கட்டுப்பாடில்லாத அளவுக்கு அதிகமான மின் தூண்டுதல்கள், கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து, மின் தொல்லையை மூளையில் ஏற்படுத்துகிறது. இது மூளையிலுள்ள நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குப் பாய்கின்றன.
இந்த நேரத்தில் உடல் உறுப்புகளின் செயல்பாடு மாறுபட்டு, கை மற்றும் கால்கள் கட்டுப்பாடில்லாமல் இழுக்கத் தொடங்குகின்றன. இதைத்தான் வலிப்பு நோய் என்கிறோம்.
வலிப்பின் போது வாயில் சேரும் எச்சில் நுரை, தொண்டையை அடைத்துக் கொண்டால் சுவாசம் தடைபடும். இது உயிருக்கு ஆபத்தானது. எனவே வலிப்பு நோய் ஏற்பட்டவரை உடனே ஒரு பக்கமாக திருப்பிவிட வேண்டும். வலிப்பு அடங்கும் வரை காத்திருந்து, பின் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, ஆசுவாசப்படுத்த வேண்டும்.
அவரை சிறிது நேரம் ஓய்வெடுக்க விடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து குடிக்க தண்ணீர் கொடுக்க வேண்டும். அவரைச் சுற்றி நாற்காலி, டேபிள் மற்றும் காயத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள் ஏதாவது இருப்பின் அப்புறப்படுத்த வேண்டும்.
முதல் முறை வலிப்பு வந்தவராக இருந்தால், அவரது குடும்ப டாக்டரை உடனடியாகப் பார்க்கச் சொல்லவும். அடிக்கடி வலிப்பு வருபவராக இருந்தால், வலிப்பு மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிடுகிறாரா என்று விசாரிக்க வேண்டும். வலிப்பு சில நொடிகளில், அதிகபட்சமாக ஓரிரு நிமிடங்களில் நின்றுவிடும்.
அந்த நேரத்தில் அவரது கையில் இரும்புத் துண்டையோ, சாவிக் கொத்தையோ கொடுப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. ஆனால் இரும்பை கையில் கொடுத்ததனால் தான் வலிப்பு நின்றுவிட்டது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். இந்த சமயத்தில் கையில் கொடுக்கப்படும் இரும்புக் கம்பி, சாவி முதலியவைகளின் கூரான பகுதி, வலிப்பு வந்தவரின் உடலில் எங்காவது குத்தி காயத்தை உண்டுபண்ணி விட்டால், மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்ல வேண்டிவரும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டு மானாலும் வலிப்பு வரும். பெரும்பாலான வலிப்புகளை தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மூளைக் காய்ச்சல், மூளைக்கட்டி, மூளையில் ரத்தக் கசிவு, சில போதை மருந்துகள் உபயோகித்தல், சரியான தூக்கம் இல்லாமை. சில வலி போக்கும் மருந்துகள், ரத்தத்தில் சோடியம் குறைந்து விடுதல் இவைகள் எல்லாம் வலிப்பை உண்டாக்கலாம்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிக அளவில் போய்விட்டால் வலிப்பு வரலாம். இதை பிள்ளைக் காய்ச்சல் வலிப்பு என்று சொல்வார்கள். காய்ச்சலை உடனே கட்டுப்படுத்தினால், வலிப்பு சரியாகிவிடும். வலிப்பு நோயை பொறுத்தவரை மருத்துவரின் உதவியின்றி, வீட்டிலேயே சிகிச்சை செய்து கொள்வது நல்லதல்ல. மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.
- விலங்குகளின் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்
- வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு உறுதிமொழி
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் செல்வி தலைமை தாங்கி விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினார். அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் தற்காலத்தில் கொள்வது குறித்து விளக்கி பேசினார்.
பின்னர் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதி மொழியை வாசித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதி திலகம், துணை முதல்வர் கவுரி வெலிங்கண்ட்லா, குடியிருப்பு மருத்துவர் இன்பராஜ் மற்றும் சமூக மருத்துவ துறை டாக்டர் பாலாஜி, மணிமேகலை, நர்சுகள்,தூய்மை பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
காய்ச்சல் இருந்தால் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்க்கான லெப்டோஸ்பைரோசிஸ் , ஸ்கரப்டைபஸ் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். நாய் , பூனை போன்ற விலங்குகள் கடிக்கும்போது வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொள்ள வேண்டும் .
கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு கொசுவலை மற்றும் கொசுவிரட்டிகளை உபயோகப்படுத்த வேண்டும்.
வீட்டிலும் மற்றம் சுற்றுப்புறத்திலும் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளின் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
ஸ்கரப்டைபஸ் மற்றும் குரங்குகாய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளும் பொருட்டு தகுந்த பாதுகாப்பின்றி காடுகளில் நுழைவதையும், தகுந்த பாதுகாப்பின்றி புதர் மற்றும் புல்வெளிகளில் ஓய்வு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்