search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்  விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும்போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
    X

    கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும்போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

    • போக்கு வரத்தை ஒழுங்கு படுத்துதல் முறையாக கடை பிடிக்க வேண்டும்.
    • ஒலி பெருக்கி உரிமம் அனுமதி பெற வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வின்போது, பொது அமைதி, பொது பாதுகாப்பு, போக்கு வரத்தை ஒழுங்கு படுத்துதல் முறையாக கடை பிடிக்க வேண்டும். விநா யகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப் பாளரும் பரிந்துரைக்கப் பட்ட படிவத்தில் முறையே வருவாய் கோட்டாட்சியர், துணை கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சிலை நிறுவும் இடத்தின் நில உரிமையாளரின் சம்மத கடிதம், சிலை நிறுவும் இடம் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைகள் அல்லது சம்பந்தப்பட்ட துறையிடம் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும்.

    ஒலி பெருக்கி பயன் படுத்தும் உரிமமானது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அலுவலரிடமிருந்து ஒலி பெருக்கி உரிமம் அனுமதி பெற வேண்டும். ஒலி பெருக்கியினை பயன் படுத்தும்போது ஒலியின் அளவு பரிந்துரைக்கப்பட்ட டெசிபல் அளவு வரம்பினை மிகாமல் பயன்படுத்த வேண்டும். சிலை அமைப்பா ளர்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டு மானத்திற்கு பயன்படுத்து வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தற்காலிக கட்ட மைப்புக்கள் பந்தல்களில் எளிதில் உள்ளே நுழையவும், வெளியேறும் வழிகளை அமைத்தல் மிக அவசியம். தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளிடமிருந்து தடை யில்லா சான்று பெற்று சிலையை நிறுவ வேண்டும். மின்சாரம் வழங்குவதற்கான ஆதாரத்தைக் குறிக்கும் கடிதம் மற்றும் மின்சாரம் தற்காலிகமாக வழங்கப்பட்ட தற்கான ஆதாரம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×