search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakal news"

    இலங்கை அகதிகள் முகாமில் பீர் பாட்டிலால் குத்தி வாலிபர் உயிரிழந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜனின் மனைவி வனிதா கணவரிடம்  கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  இதனால் மனமுடைந்த ராஜன் கடந்த 1-ந் தேதி அதிக அளவில் மது அருந்திவிட்டு மது பாட்டிலை உடைத்து  கழுத்தில் குத்தி உள்ளார். 

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த  ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றிய சேலம் வாலிபர் மீது தாக்குதல் பெற்றோர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
    குமாரபாளையம்:

    சேலம் தாதகாபட்டி சண்முகா நகரை  சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 29). இவருக்கும், கனகா என்பவருக்கும் திருமணமாகி, கனகா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் சிரஞ்சீவி  குமாரபாளையத்தை சேர்ந்த வினோதா (19) என்ற  பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது சிரஞ்சீவியின் தாயார் மற்றும் சித்திக்கு தெரியும் என கூறப்படுகிறது.

    கடந்த 27-ந்தேதி சிரஞ்சீவி தனது  கள்ளக்காதலி வினோதாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை, பாண்டிச்சேரி, நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் சுற்றி வந்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த  வினோதாவின் உறவினர்கள் அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம்  நம்பியூர் என்ற இடத்தில்  இருவரும் தங்கியிருந்தபோது, வினோதாவின் பெற்றோர், அண்ணன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் அங்கு சென்று 2 பேரையும்  குமாரபாளையத்துக்கு அழைத்து வந்தனர். 

    அப்போது வழியில்  சேலம்-கோவை புறவழிச்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரியில் டீ குடித்து விட்டு வினோதாவின் உறவினர்கள், சிரஞ்சீவியிடம் ஏற்கனவே உனக்கு திருமணம் ஆகி விட்டது. அப்படி இருக்கையில் எதற்கு வினோதாவை காதல் வலையில் மயக்கி அவருடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறாய்? என கேள்வி கேட்டு  சரமாரியாக தாக்கினர். 

    இதனால் உயிருக்கு  பயந்து சிரஞ்சீவி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது  புறவழிச்சாலையில் வாகனம் வருவதை கவனிக்காமல்  சாலையை  கடந்தபோது  அவர் மீது  வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சிரஞ்சீவி படுகாயம் அடைந்தார்.   ஈரோடு  அரசு ஆஸ்பத்திரியில்  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார், பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும்  இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும்.  நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

    தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில்  நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

    பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும்  பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது  2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.

    எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.

     பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ்  இயக்கப்படுகிறது.

    இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.
    குமாரபாளையம் அருகே பலாப்பழம் ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்து விபத்தானது.
    குமாரபாளையம்:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, இளையத்தடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 45). டெம்போ உரிமையாளர். இவர் நெய்வேலியிலிருந்து பலாப்பழங்கள் லோடு ஏற்றி வந்தார்.

    அதிகாலை 2 மணி–அளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு கல்லூரி அருகே வரும் போது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பழங்கள் சேதமானது. டெம்போவை ஓட்டிவந்த செல்வம் படுகாயம் அடைந்தார். இவர் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து குமார–பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கிறார்கள்.
    ஜேடர்பாளையம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த  17 வயது சிறுமி வெளியில் செல்வதாக கூறி சென்றார். அங்கிருந்து திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில்  சிறுமியை தேடிப்பார்த்தனர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாக்கண்ணு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமியை  ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த   17 வயது சிறுவன் கடத்தி  பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.  

    இதையடுத்து அவரை போலீசார்  போக்சோ சட்டத்தில் கைது செய்து  நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    வேலகவுண்டன்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன் பட்டி அருகே இளநகர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 50) .பெயிண்டர். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.  

    இதில் மூத்த மகள் நளினியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசக்கல்பட்டி இளங்கோநகர் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தைகள் இல்லை .இந்நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் நாளினி இருந்து உள்ளார். 

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கி–ழமை சுந்தரத்தின் உறவினர் பெருமாள் இறந்ததின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நளினியும், ரகுபதியும் சொந்த ஊரில் இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சுந்தரத்தின் மனைவி வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்தது.  

    கதவை தட்டியும் திறக்காததால்  சந்தேகம் அடைந்த தாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மகள் நளினி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு கதறி அழுதார்.  அக்கம்பக்கத்தினரை அழைத்து நளினி உடலை மீட்டனர். 

     இதுகுறித்து சுந்தரம் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    பரமத்திவேலூர் பகுதியில் கல் குவாரிகளை ஆய்வு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள நல்லூர், குன்னமலை, மணியனூர் உள்ளிட்ட பல்வேறு  ஊராட்சி பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. 

    இந்த கல் குவாரிகளில் இருந்து அரளைக்கல், சம்பட்டி கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. அதேபோல் கிரைனைட் கற்களும் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த கற்களை பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பல்வேறு ரகமான கிரானைட் கற்கள் தயார் செய்யப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
     
    இந்நிலையில் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் அரசு அனுமதிக்கப்பட்டுள்ள ஆழத்திற்கு அதிகமாக பல கல்குவாரிகள் செயல்படுவதாகவும், மேலும் அனுமதி பெறாமலும் கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரி களையும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட குழுவினர்  ஆய்வு செய்து கல்குவாரி யின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை சோதனை செய்ய வேண்டும்.  இந்த கல் குவாரிகளில் திடீர் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
    பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதால் என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும் .கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் கல்குவாரியில் இதுபோன்று கற்களை வெட்டி எடுத்துக் கொண்டு வரும்போது பாறைகள் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்திவேலூர் தாலுகா பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குமாரபாளையம் அருகே தொழிலாளியை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே சானார்பாளையத்தில் வசிப்பவர் மாரிமுத்து(வயது 50) கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்  ராஜசேகரன்( 43).

     மாரிமுத்து, ராஜசேகரனுக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார்.  பின்னர் அதை  மாரிமுத்து  திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த  ராஜசேகரன் தகாத வார்த்தையால் பேசி மது பாட்டிலை உடைத்து  மாரிமுத்துவை நெற்றி, பின் தலை, இடது நெஞ்சு, ஆகிய இடங்களில் குத்தியதாக தெரிகிறது. 

    இதில் மாரிமுத்து பலத்த காயம் ஏற்பட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார்  ராஜசேகரனை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
    ×