என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஜேடர்பாளையம் அருகே சிறுமி பலாத்காரம்
Byமாலை மலர்30 May 2022 3:36 PM IST (Updated: 30 May 2022 3:36 PM IST)
ஜேடர்பாளையம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வெளியில் செல்வதாக கூறி சென்றார். அங்கிருந்து திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறுமியை தேடிப்பார்த்தனர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாக்கண்ணு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமியை ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தி பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×