search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏமாற்றிய"

    ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றிய சேலம் வாலிபர் மீது தாக்குதல் பெற்றோர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
    குமாரபாளையம்:

    சேலம் தாதகாபட்டி சண்முகா நகரை  சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 29). இவருக்கும், கனகா என்பவருக்கும் திருமணமாகி, கனகா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் சிரஞ்சீவி  குமாரபாளையத்தை சேர்ந்த வினோதா (19) என்ற  பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது சிரஞ்சீவியின் தாயார் மற்றும் சித்திக்கு தெரியும் என கூறப்படுகிறது.

    கடந்த 27-ந்தேதி சிரஞ்சீவி தனது  கள்ளக்காதலி வினோதாவுடன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை, பாண்டிச்சேரி, நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் சுற்றி வந்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த  வினோதாவின் உறவினர்கள் அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம்  நம்பியூர் என்ற இடத்தில்  இருவரும் தங்கியிருந்தபோது, வினோதாவின் பெற்றோர், அண்ணன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் அங்கு சென்று 2 பேரையும்  குமாரபாளையத்துக்கு அழைத்து வந்தனர். 

    அப்போது வழியில்  சேலம்-கோவை புறவழிச்சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரியில் டீ குடித்து விட்டு வினோதாவின் உறவினர்கள், சிரஞ்சீவியிடம் ஏற்கனவே உனக்கு திருமணம் ஆகி விட்டது. அப்படி இருக்கையில் எதற்கு வினோதாவை காதல் வலையில் மயக்கி அவருடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறாய்? என கேள்வி கேட்டு  சரமாரியாக தாக்கினர். 

    இதனால் உயிருக்கு  பயந்து சிரஞ்சீவி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது  புறவழிச்சாலையில் வாகனம் வருவதை கவனிக்காமல்  சாலையை  கடந்தபோது  அவர் மீது  வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சிரஞ்சீவி படுகாயம் அடைந்தார்.   ஈரோடு  அரசு ஆஸ்பத்திரியில்  அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார், பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×