என் மலர்
நீங்கள் தேடியது "Jaganmohan reddy"
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்த விஜயம்மா தனது மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தெலுங்கானாவில் களம் இறங்குகிறார்.
- இதற்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில முதலமைச்சராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளையொட்டி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குண்டூரில் உள்ள நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று காலை கடப்பாவில் இருந்து புலிவேந்தலாவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயம்மா மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் ஒரே ஹெலிகாப்டரில் சென்று ராஜசேகர் ரெட்டி விபத்தில் இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது ஒருவருடன் ஒருவர் பேசாமல் இறுக்கமாக இருந்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பிறகு தனது தந்தை இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து விமானம் மூலம் வந்து ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவர் தாயார் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கூட்டத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.
ஜெகன்மோகன் ரெட்டி ஜெயிலில் இருந்த போது அவருக்காக நானும் எனது மகள் சர்மிளாவும் பாத யாத்திரை சென்று ஆதரவு திரட்டினோம். ஆட்சிக்கு வந்த பிறகு ஜெகன்மோகன் அவரது தங்கைக்கு எந்த பதவியும் தராமல் ஒதுக்கி வைத்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த ஷர்மிளா தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதியதாக கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக அவருடன் சேர்ந்து தெலுங்கானாவில் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளோம். எனவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.
தங்கையின் திருமணத்தின் போது அவருக்கு செய்யவேண்டிய அனைத்தும் செய்து விட்டோம். தங்கை என்பதற்காக அவருக்கு கட்சிப் பதவி தர இயலாது என்றார்.
இதையடுத்து கட்சி கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்த விஜயம்மா தனது மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தெலுங்கானாவில் களம் இறங்குகிறார்.
இதற்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
- ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவருடைய சகோதரிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய தாயாரை கட்டிப்பிடித்து அவரது முடிவை அங்கீகரித்தார்.
விஜயவாடா :
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.மாநாட்டில், அவருடைய தாயாரும், கட்சியின் கவுரவ தலைவருமான ஒய்.எஸ்.விஜயலட்சுமி உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:-
என் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரியாகவும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். அதே சமயத்தில், என் மகள் சர்மிளா, தெலுங்கானாவில் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார். என் மகளை ஆதரிக்குமாறு என் மனசாட்சி சொல்கிறது. அவளுக்கு என் ஆதரவு தேவைப்படுவதால், அவளை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன்.
அதனால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருப்பது சர்ச்சையை உருவாக்கும் என்பதால், கட்சியில் இருந்தும், கவுரவ தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இந்த நிலைமையை நான் எதிர்பார்க்கவில்லை. என்னை மன்னியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது அறிவிப்பை கேட்டவுடன், தொண்டர்கள், ''வேண்டாம், வேண்டாம்'' என்று கூச்சலிட்டனர். இருப்பினும், ஜெகன்மோகன் ரெட்டி, தன்னுடைய தாயாரை கட்டிப்பிடித்து அவரது முடிவை அங்கீகரித்தார். ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவருடைய சகோதரிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருடைய தாயார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் 8000 பள்ளிகளை மூடுவதற்கு அரசு தயாராக உள்ளது.
- முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது மகளை பாரீசில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அன்னம்மையா மாவட்டம் மதன பள்ளியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து வருகிறது.
குறிப்பாக ஆங்கில வழிக் கல்வி மிகவும் மோசமடைந்து உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டுகின்றனர்.
அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் 8000 பள்ளிகளை மூடுவதற்கு அரசு தயாராக உள்ளது. ஆனால் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தனது மகளை பாரீசில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்.
ஆந்திராவில் புதிது புதிதாக மதுபான ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மதுபான ஆலைகளில் தயாரிக்கும் மதுவில் விஷத்தன்மை அதிகம் உள்ளதால் மது அருந்தும் ஏராளமானோர் இறந்து வருகின்றனர்.
தனியார் பரிசோதனை மையத்தில் அரசு விற்கும் மதுபானங்கள் அதிக அளவு விஷத்தன்மை உள்ளதாக தெரிவித்துள்ளது. இருந்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறார். ஆந்திராவில் பிறக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவர் மீதும் ஜெகன்மோகன் ரெட்டி ரூ.7 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
தற்போது ஆந்திர மாநில அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இலங்கையை போல் ஆந்திராவையும் ஜெகன்மோகன் ரெட்டி மாற்றி வருகிறார்.
இதனை தட்டிக் கேட்கும் தெலுங்கு தேச கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர். அமராவதியில் தலைமைச் செயலகம் அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை தலைமை செயலகம் கட்டாமல் தவிர்த்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே படம் ஆந்திராவிலும் வருகிற 31-ந்தேதி தெலுங்கில் வெளியாகி உள்ளது. அதுகுறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐதராபாத் வந்த நடிகர் சூர்யா ஆந்திரா அரசியல் குறித்து நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ‘‘யாத்ரா’’ என்ற சினிமா படம் வெளியிடப்பட்டது. இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய அரசியல் போராட்டம், பாதயாத்திரை, சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை வைத்து யாத்ரா-2 படம் தயாரிக்க உள்ளதாகவும் அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது குறித்து நிருபர்கள் கேட்டனர், அதற்கு சூர்யா பதில் கூறும்போது, ‘‘யாத்ரா’’ படத்திற்கு நல்ல டீம் அமைந்தது. மாபெரும் வெற்றியும் பெற்றது. ‘‘யாத்ரா-2’’ குறித்து இன்னும் யாரும் என்னோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கதை அனைவரையும் கவரும் விதமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் சந்தேகமே இல்லை என்றார்.
ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நகரி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார்.
இதில், ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷ் 76,818 வாக்குகள் பெற்றார். எனவே, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார்.

அவருக்கு மின்சாரத்துறை வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ரோஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
ஆந்திராவில் நடந்த பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி நாளை ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கிறார். இதையொட்டி இவர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
விஜயவாடாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த ஜெகன்மோகன் ரெட்டியை சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா, திருமலை - திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அங்கிருந்து காரில் ஜெகன்மோகன் ரெட்டி ரேணிகுண்டா- தரக்கம்பாடி சாலை வழியாக அலிபிரி சென்று திருமலைக்கு வந்தார்.
ஜெகன்மோகன் ரெட்டி வருகையையொட்டி வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கட்சியினர் பல முக்கிய சந்திப்புகளில் வரவேற்பு அளித்தனர்.
நேற்று இரவு 7 மணியளவில் திருமலைக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டியை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ்சில் தங்கிய ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை 7 மணியளவில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.
அவருடன் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிலர் உடன் வந்தனர்.

கடந்த ஆண்டில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் பாதயாத்திரை சென்றார். திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு தான் தனது பாதயாத்திரையை தொடங்கினார்.
பாதயாத்திரை நிறைவடைந்த பிறகு திருமலைக்கு வந்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையோடு வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
ஆந்திர முதல்-மந்திரியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 2-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் காளிபாக்கம் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
நடிகை ரோஜாவை சந்தித்து தொண்டர்களும், தலைவர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நகரி தேசம்மா தாயார் கோவிலுக்கு சென்ற ரோஜா அம்மனை தரிசித்தார். அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.
பின்னர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
மாதம் ஒரு முறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால்தான் மனநிறைவு ஏற்படும். கடவுளின் ஆசியாலும், தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவாலும் 2-வது முறையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இனி நல்ல காலம் பிறந்து விட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை மீண்டும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்கும் நிகழ்ச்சி 30-ந்தேதி விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி நகராட்சி விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணியளவில் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி சினிவாசராஜீ, டாலர் சேஷாத்திரி, பொக்காஷம் கிளார்க் குருராஜாராவ் ஆகியோர் விஜயவாடாவில் உள்ள தாடப்பள்ளியில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டியின் வீட்டிற்கு நேரில் சென்றனர்.
ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேவஸ்தானம் சார்பில் சேஷ வஸ்த்திரம் போர்த்தி கவுரவித்தனர். அவருக்கு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.
ஜெகன்மோகன் ரெட்டியின் கையில் மஞ்சள் கயிறு கட்டினர். முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கும் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வாழ்த்து வழங்கினர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நவீன் பட்நாயக்குக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
“ஒடிசாவின் முதல்-மந்திரியாக 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன் பட்நாயக்குக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நவீன் பட்நாயக்கின் அரசியல் தலைமை பண்புகள் மற்றும் அனுபவத்தால் ஒடிசா மாநிலம் மிகுந்த செழிப்படையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பான செயல்திறன் அளித்த என்னுடைய நண்பரும், ஆந்திர முதல்-மந்திரியுமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியை பாராட்டுகிறேன். முதல்-மந்திரியாக பொறுப்பு வகிக்கும் வெற்றிகரமான காலத்தில் ஆந்திர மாநிலத்தை தென் இந்தியாவில் சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.