search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்எஸ் சர்மிளா"

    • முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை.
    • நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கிறார்கள்.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில் இன்று ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி தலைமையில் மாநில அரசின் தலைமை செயலக அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்தை தடுக்க முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் இருந்து வெளியே வராதபடி வீட்டு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் வீட்டுக்காவலை தவிர்க்கும் முயற்சியாக ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் படுத்து உறங்கினார்.


    இதுகுறித்து விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் ஒய்.எஸ்.ஷர்மிளா கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்கள், வேலையில்லாதோர் மற்றும் மாணவர்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்து விட்டார். வேலையற்றோர் சார்பாக நாங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், எங்களை வீட்டுக் காவலில் வைக்க முயற்சி செய்வது கண்டிக்கதக்கது. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை இல்லையா? இது வெட்கக்கேடானது. ஒரு பெண்ணாக நான் வீட்டுக் காவலை தவிர்க்க காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கியவர்.
    • ஆந்திர மாநில தேர்தல், மக்களவை தேர்தலை கணக்கில் கொண்டு காங்கிரஸ் கட்சி அவரை இணைக்கிறது.

    ஆந்திர மாநில முதல்வராகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த ஒரு மாதத்திற்குள், இணைய இருக்கிறார்.

    வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரானவர்கள், அக்கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்கள் தங்களுடைய கட்சியில் இணையலாம் என காங்கிரஸ் நம்புகிறது.

    • ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா டெல்லியில் ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
    • தெலுங்கானா முதல் மந்திரிக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.சர்மிளா கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பாசனத்திட்டமான கேஎல்சி அல்லது காலீஸ்வரம் மேல்நோக்கு பாசனத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதை வெளிச்சத்திற்கு கொண்டுவர டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இந்த திட்டத்தில் நடைபெற்றிருக்கும் மிகப்பெரிய ஊழலையும், இந்த விவகாரத்தில் எங்களின் இரண்டாண்டு கால போராட்டத்தையும் இந்த பேரணி வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இந்தத் திட்டத்திற்கான மதிப்பு ரூ. 38,500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது ரூ.1.20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், இதன்மூலம் 1.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று அமைச்சர் நியாயப்படுத்துகிறார். இந்த திட்டம் ஒரு மாபெரும் தோல்வி என்பதையே இது காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பாசனத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி வரும் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, இதைக் கண்டித்து டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது போலீசார் சர்மிளாவையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்தனர். கைதாகி வாகனத்தில் ஏறும்போது அவரும், தொண்டர்களும், கேசிஆர் (தெலுங்கானா முதல் மந்திரி கே.சந்திரசேகரராவ்) டவுன் டவுன் என முழக்கங்களை எழுப்பினர்.

    • ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ஆவார்.
    • இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

    ஐதராபாத் :

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ஆவார். இவர் தெலுங்கானா மாநிலத்தில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

    இவர் பெண்கள் தினத்தையொட்டி, மாநிலத்தில் பெண்கள் மீது நடந்து வருகிற தாக்குதல்களைக் கண்டித்து ஐதராபாத் நகரில் டேங்க் பண்ட் பகுதியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

    அவர் அதன்படி, ராணி ருத்ரமா தேவி மற்றும் சக்காளி அய்லம்மா சிலைகளுக்கு மரியாதை செய்து விட்டு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×