ஜெகன்மோகன் ரெட்டி பிள்ளைகள் மீது சத்தியம் செய்ய வேண்டும்: சர்மிளா ஆவேசம்

அதானியிடம் லஞ்சம் பற்றி நேரடியாக பேசியதற்கும் ஆதாரங்கள் உள்ளன. லஞ்சம் வாங்குவதற்காகத்தான் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி பிள்ளைகள் மீது சத்தியம் செய்ய வேண்டும்: சர்மிளா ஆவேசம்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அதானி நிறுவனத்தில் இருந்து போடப்பட்ட சூரிய சக்தி மின் ஒப்பந்தங்களை ரத்து செய்யக்கோரி கவர்னர் அப்துல் நசீரிடம் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சர்மிளா மனு அளித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜெகன் மோகன் ரெட்டி நன்கொடை வாங்கியதற்கும் அதானியிடம் லஞ்சம் பற்றி நேரடியாக பேசியதற்கும் ஆதாரங்கள் உள்ளன. லஞ்சம் வாங்குவதற்காகத்தான் ஜெகன் மோகன் ரெட்டி இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

அவர் ஊழல் செய்யவில்லை என்றால் தனது பிள்ளைகள் மீது சத்தியம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அதானிக்கும் மோடிக்கும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பயப்படுவதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com