search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வீட்டுக்காவலை தவிர்க்க காங்கிரஸ் அலுவலகத்தில் உறங்கிய ஒய்.எஸ்.சர்மிளா
    X

    வீட்டுக்காவலை தவிர்க்க காங்கிரஸ் அலுவலகத்தில் உறங்கிய ஒய்.எஸ்.சர்மிளா

    • முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை.
    • நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கிறார்கள்.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில் இன்று ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி தலைமையில் மாநில அரசின் தலைமை செயலக அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டத்தை தடுக்க முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் இருந்து வெளியே வராதபடி வீட்டு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் வீட்டுக்காவலை தவிர்க்கும் முயற்சியாக ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் படுத்து உறங்கினார்.


    இதுகுறித்து விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் ஒய்.எஸ்.ஷர்மிளா கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்கள், வேலையில்லாதோர் மற்றும் மாணவர்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்து விட்டார். வேலையற்றோர் சார்பாக நாங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், எங்களை வீட்டுக் காவலில் வைக்க முயற்சி செய்வது கண்டிக்கதக்கது. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை இல்லையா? இது வெட்கக்கேடானது. ஒரு பெண்ணாக நான் வீட்டுக் காவலை தவிர்க்க காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் பயங்கரவாதிகளா அல்லது சமூக விரோதிகளா? எங்களை ஏன் தடுக்கப் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×