என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Drinks"
- செல்களுக்கு ஆக்ஸிஜனை அளிப்பதில் உதவுவதோடு, காலையில் உங்கள் சோம்பலைப் போக்கவும் உதவுகின்றன.
- இஞ்சி தசை வலி மற்றும் வேதனையையும் குறைக்கிறது.
முதல் முக்கிய காலை பழக்கம், எழுந்தவுடன் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான பானங்களையும் உங்கள் தினசரி காலையில் இணைத்துக் கொள்ளலாம்.
காலையில் நீங்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்களின் ஒரு பட்டியல் இதோ...
ஜீரா நீர்
ஜீரா அல்லது சீரக விதைகள் செரிமானத்தை விரைவுபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன.இது செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுவதற்கும், செரிமான செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் உதவுகிறது. இதன் மூலம் வயிற்றுப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஜீரா நீர் ஒரு பெரிய எனர்ஜி பூஸ்டர். எனவே காலையில் உங்கள் எனர்ஜியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் மந்தத்தை நீக்குகிறது.
எப்படிச் செய்வது: ஒரு கப் தண்ணீருக்கு 1 டீஸ்பூன் ஜீரா சேர்த்து கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஓம நீர்
அஜ்வெய்ன்(ஓமம்) அல்லது கரோம் விதைகள் இரைப்பைக் குடல் வலி நீக்கும் பண்புள்ள தைமாலைக் கொண்டுள்ளன. இந்த தைமால் செரிமானத்தை மேம்படுத்துகின்ற அத்தியாவசிய எண்ணெய், அமிலத்தன்மை நீக்கம் மற்றும் எடை இழப்புகளை ஊக்குவிக்கிறது. கரோம் விதைகளில் இருக்கும் தைமோல் வயிற்றில் இரைப்பைச் சாறுகளை சுரக்க வைக்கிறது, இதனால் செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.
எப்படி செய்வது: அரை டீஸ்பூன் அஜ்வெய்ன் விதைகளை 1 கப் தண்ணீரில் கலந்து, கொதிக்க வைக்கவும். அது குளிர்ச்சியடைந்தவுடன், வடிகட்டி குடிக்கலாம்.
இன்பியூஸ்ட் நீர்
நீங்கள் வெற்று நீரைக் குடிக்க சலித்துப்போகும் போதெல்லாம், ஏன் மூலிகைகள், ஆப்பிள் சைடர் வினிகர், வெள்ளரிக்காய் அல்லது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்ற பழங்களை தண்ணீரின் சுவையை அதிகரிக்க அதனுடன் சேர்க்க முயற்சி செய்யக்கூடாது? எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு நோயெதிர்ப்பு அதிகரிக்கும் வைட்டமின் சி- யைக் கொண்டுள்ளன. ஆப்பிள் சீடர் வினிகர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. வெள்ளரிக்காய் உங்கள் உடலில் நீரேற்றத்திற்கு உதவுகிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது, மற்றும் துளசி அல்லது புதினா போன்ற மூலிகைகள் ஆன்டி பயோடிக், ஆன்டி - பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
எப்படிச் செய்ய வேண்டும்: ஒரு ஜக்கில் தண்ணீரை ஊற்றி, மேலே உள்ள பொருட்களில் ஒன்றினை அதனுள் சேர்க்கவும். சுவையூட்டுவதற்காக 2 முதல் 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
காலையில் உங்கள் நேரத்தை காப்பாற்றிக் கொள்ள, மேலுள்ள கலவையை இரவில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, காலையில் தண்ணீரில் இருந்து மூலப்பொருளை நீக்கி குடிக்க வேண்டும்.
தேங்காய் நீர்
காலையில் வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீர் குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்துகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்பிற்கும் உதவுகிறது. தேங்காய் நீர், பல வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்கள் உட்பட கனிமங்களால் நிறைந்தது. இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கத் தேவையான முக்கியமான இரண்டு எலக்ட்ரோலைட்களான சோடியம் மற்றும் பொட்டாசியதைக் கொண்டுள்ளது.
காய்கறி சாறு
இயற்கை ஜுஸ்களை குடித்தல் உங்கள் உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. காய்கறிகளை ஜுஸ் வடிவத்தில் எடுத்துக் கொள்ளும்போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலால் எளிதாக உறிஞ்சப்படுகின்றன. பச்சை இலை காய்கறிகள், அதாவது கீரை மற்றும் காலே போன்றவை உடலின் ஆற்றல் மட்டங்களை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில், அவை உங்கள் செல்களுக்கு ஆக்ஸிஜனை அளிப்பதில் உதவுவதோடு, காலையில் உங்கள் சோம்பலைப் போக்கவும் உதவுகின்றன.
எப்படி செய்ய வேண்டும்: நீங்கள் பயன்படுத்துகிற காய்கறிகளை பொடிப் பொடியாக வெட்டி சிறிது நீர் அல்லது தேங்காய் நீரைச் சேர்த்து ப்ளண்டரில் போட்டு அரைக்கவும்.
அலோவேரா (கற்றாழை) ஜூஸ்
அலோவேரா சாறு, இரைப்பை அழற்சி நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க் குறிக்கும் உதவுகிறது. இது செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு ஆகியவற்றைச் சமாளிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது.
எப்படி செய்ய வேண்டும்: கற்றாழையை கிழித்து அதிலிருந்து வெள்ளை ஜெல்லை பிரித்தெடுக்கவும். 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை எடுத்து ப்ளண்டரில் போடவும்.அதில் 3 கப் தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும்.
இஞ்சித் தேநீர்
இஞ்சித் தேநீரை காலையில் எடுத்துக்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசௌகரியம் ஆகியவற்றைக் குறைக்கும், ஏனெனில் இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. மேலும், இஞ்சி தசை வலி மற்றும் வேதனையையும் குறைக்கிறது. மேலும் காலை உடற்பயிற்சிக்குப் பிறகு நீங்கள் அதைக் குடிப்பதால் நல்ல பயனடைவீர்கள்.
எப்படி செய்ய வேண்டும்: உரித்து நறுக்கிய இஞ்சியை ஒரு கப் தண்ணீரில் சேர்க்கவும். கொதிக்க வைத்து 1 எலுமிச்சையின் சாறைச் சேர்க்கவும். பிறகு அதை வடிகட்டிக் குடிக்கவும்.
தக்காளி ஜூஸ்
உங்கள் காலையை சிறப்பாகத் தொடங்க மற்றொரு சிறந்த வழி தக்காளிச் சாறு. தக்காளி, 95 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டிருக்கும். அது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கும். மேலும் இது உங்கள் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது, அதிக அளவிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தொற்றுக்களை அழித்து நோயெதிர்ப்பு அமைப்பைப் பலப்படுத்துகிறது ஒரு பெரிய நச்சுநீக்கி பானமாக செயல்படுகிறது.
எப்படி செய்வது: பிளெண்டரில் 1 துண்டு தக்காளி மற்றும் 3 கப் தண்ணீரை சேர்க்கவும். ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறைச் சேர்த்து மென்மையான கலவை வரும் வரை அரைக்கவும்.
மேற்கண்ட இந்த பானங்களை காலையில் அருந்தி வர உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.
- குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது நல்லது.
- குழந்தைகளுக்கு நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.
பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது பெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்புச் சத்தும் குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.
குழந்தைகளிடம் வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மண்பானை தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உடல்உஷ்ணத்தை தவிர்க்கலாம்.
உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம். வெயில் மதியம் 1 முதல் மாலை 4 மணிவரை அதிக பாதிப்பை தரும். இந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால், சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.
குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளையும் குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
- பானகம் உடலின் களைப்பை நீக்கி, புதுத்தெம்பை ஏற்படுத்தும்.
- வெல்லத்தை தூளாக்கி தண்ணீரை ஊற்றி கரைக்கவும்.
பானகம் என்பது இனிப்பு, புளிப்பு சுவை கலந்த பானம். கோடை காலத்தில் இந்த பானகம், உடலின் களைப்பை நீக்கி, புதுத்தெம்பை ஏற்படுத்தும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கோடை வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும் பானகம் தயாரிக்கும் முறையை விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை பழம் - 1
வெல்லம் - தேவையான அளவு
சுக்கு - சிறிதளவு
ஏலக்காய் - சிறிதளவு
பச்சை கற்பூரம் - சிறிதளவு
செய்முறை:
* வெல்லத்தை தூளாக்கி தண்ணீரை ஊற்றி கரைக்கவும். கரைந்த பின் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்.
* அதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய் தூளை சேர்க்கவும். கலந்து விட்டு பச்சை கற்பூரம் சிறிதளவு சேர்க்கவும்.
* பின்னர் அதனுடன் எலுமிச்சை பழச்சாறை கொட்டையை இல்லாமல் சேர்த்து நன்கு கலக்கினால் பானகம் தயார்.
- ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
- தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர், கோழி பிரியாணியுடன் ரூ.500 வரை வழங்கப்படுகிறது.
பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு இரவு நேரங்களில் மது விருந்து அளிக்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கர்னூல் அருகே உள்ள எமிங்கனூரில் பிரசாரம் செய்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்ட னர்.
ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களை அழைத்து வந்த ஒவ்வொருவருக்கும் தலா ஒரு குவாட்டர் மது பாட்டில், கோழி பிரியாணி பொட்டலம் மற்றும் ரூ.300 முதல் 500 வரை பணம் வழங்க தொடங்கினர்.
கூட்டத்தில் இதனை அவர்கள் பகிங்கரமாக வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இதனை வாங்கிய குடிமகன்கள் உற்சாகமடைந்தனர்.அவர்களில் சிலர் மது குடிக்க தொடங்கினர்.
இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்