.
.

தொழிலாளி விஷம் குடித்து சாவு

மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் ஜே.கே.கே. சுந்தரம் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 46). தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். 

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com