என் மலர்
நீங்கள் தேடியது "சட்டமன்ற தேர்தல்"
- மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள்.
- கணக்கெடுப்புகள் அனைத்தும் சொல்வது 60 சதவீதம் மக்கள் தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றுதான்.
"தேமுதிக சேரும் கூட்டணியே வெற்றி பெறும்" என்றும், சரியான நேரத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அவர்களை பாஜகவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம் என தேமுதிக குறித்து கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக இரு கட்சிகளிடையே இழுபறி நீடிப்பது உறுதியாகியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு தொடர்பான கேள்விக்கு,
"விபி-ஜி ராம்-ஜி என்பது கிராம்பபுற வேலைவாய்ப்பு திட்டம் என்பதன் தமிழ் அர்த்தம்தான். அப்படி இல்லையெனில் இந்தி தெரிந்தவர்களிடம் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்." என பதிலளித்தார்.
தொடர்ந்து தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு,
"தேமுதிகவுடன் பாஜக தலைமையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள். நல்லபடியாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்
பாஜக தானே எங்கள் கூட்டணி. சாப்பாட்டில் காய்கறி, கூட்டு வைப்பது போலத்தான் இது. யார் பேசினாலும் எங்களுடன்தானே கூட்டணி. எங்களிடம் அன்பாக இருப்பவர்களை நாங்கள் அழைத்திருப்போம். பாஜகவிடம் அன்பாக உள்ளவர்களிடம் அவர்கள் பேசுகிறார்கள். எங்களை நம்பி சிலர் வருவார்கள், அவர்களை நம்பி சிலர் வருவார்கள். பாஜக அழைத்தாலும் அதிமுக தலைமையில் இருக்கிற தே.ஜ. கூட்டணிக்குதானே வருவார்கள்" என பதிலளித்தார்.
சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அதாவது சிலர் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அங்கே பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். ஆனால் முடிவு இந்த கூட்டணிக்கு சாதகமாகத்தான் வரும். டெல்லி சென்று கூட்டணியை பேசி முடித்தது எடப்பாடி பழனிசாமி தான். அமித்ஷா வந்து இங்கு அறிவித்தார். எங்கள் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். தலைமை அதிமுகதான்." என தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர்,
"நாடு முழுவதும் ஆயிரம் கட்சிகள் உள்ளன. எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்கிறோம். கடந்த தேர்தலில் மகளிருக்கு ரூ.1500 தருகிறோம் எனக்கூறினோம், திமுக ரூ.1000 தருவதாக கூறியது. அது எடுபட்டுவிட்டது. அதனால்தான் இந்த முறை ரூ.2000 என முன்கூட்டியே அறிவித்துவிட்டோம். வேண்டுமானால் நீங்களும் (திமுக) அறிவித்துக்கொள்ளுங்கள்.
மத்திய அரசு, மற்ற அமைப்புகள், எங்களது தனிப்பட்ட கணக்கெடுப்புகள் அனைத்தும் சொல்வது 60 சதவீதம் மக்கள் தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றுதான். பாஜக அகில இந்திய கட்சி. அதிமுக தலைமையில் இயங்குகிறோம் என சொல்லிவிட்டார்கள்." என தெரிவித்தார்.
- டிசம்பர் 19ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
- பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் 'சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்' (Special Intensive Revision) நிறைவடையும் நிலையில் உள்ளன.
இதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட அட்டவணையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
டிசம்பர் 19 - ஜனவரி 18 வரை பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பிப்ரவரி 10 வரை, பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான சரிபார்ப்பு மற்றும் தீர்வு காணும் பணிகள் நடைபெறும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்யக்கோரி பெறப்பட்ட 34.75 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் பிப். 10ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் 90% நிறைவுபெற்றது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 17 அன்று அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
- தி.மு.க.மீது எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் முரணும் இல்லை.
- காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு முன்மாதிரியான கட்சி.
மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நூறு நாள் வேலை திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
தி.மு.க. இது தொடர்பாக போராட்டத்தை அறிவித்து உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு தினங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும். தி.மு.க.மீது எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் முரணும் இல்லை.
சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். கூட்டணி குறித்து மாவட்ட தலைவர்கள் அல்லது நிர்வாகிகள் பேசுவது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிரானது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு முன்மாதிரியான கட்சி. தங்களது ஆசையை நிர்வாகிகள் வெளிப்படுத்துவதில் தவறில்லை.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். பிரதமர் என்டி.ஏ. கூட்டணி என்று கூறுகிறார். மோடி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா பேசி வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தால் பா.ஜ.க.வினர் இதுபோல பேச முடியுமா?
காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது.
- இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து பிரசாரத்தை தொடங்க கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு தி.மு.க. கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு கட்சியினருடனும் இந்த குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் விரைவில் பேச்சு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
கூட்டணி தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து பிரசாரத்தை தொடங்க கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கூட்டணியில் இணைய தே.மு.தி.க. விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
- 'விசில்' சின்னம் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்று கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 'விசில்' சின்னம் மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ""உடனே எங்களுக்கு விசில் தேவையில்லை. எங்களிடம் உள்ள குக்கரிலேயே விசில் உள்ளது" என்று தவெகவின் விசில் சின்னதை கிண்டல் செய்து பேசினார்.
- விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- முதல்முறையாக தவெக தேர்தலை சந்திக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
எந்தக்கட்சிக்கும் இல்லாத அளவுக்கு நிர்வாக ரீதியாக 128 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை த.வெ.க. அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அதேபோல், வார்டு பகுதி செயலாளர்களையும் நியமித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.விற்கு இணையான நிர்வாக கட்டமைப்பை த.வெ.க. உருவாகி வருகிறது.
இந்நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. த.வெ.க. ஒரு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், 234 தொகுதிகளிலும் போட்டியிட ஏதுவாக 'பொதுச் சின்னம்' கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
கட்சித் தலைமை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சுமார் 10 விருப்பச் சின்னங்கள் வழங்கப்பட்டிருந்தது. அதில் விசில், ஆட்டோ, மட்டைப்பந்து , மடிக்கணினி, கப்பல், மைக்ரோஃபோன் போன்றவை முக்கியமாக இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதில் தவெக தரப்பில் விசில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
விஜய்யின் ரசிகர்களுக்காகவும், மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்பதாலும், 'விசில்' சின்னம் தவெகவின் முதன்மைத் தேர்வாக அமைந்ததாக கூறப்படுகிறது.
- கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சென்னை அடையாறில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை:
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று தே.மு.தி.க.வுடன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் டி.டி.வி.தினகரன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
சென்னை அடையாறில் காலை 10 மணிக்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணியில் இணைய டி.டி.வி.தினகரன் முடிவெடுத்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் பியூஸ்கோயலை டி.டி.வி. தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை 2 கட்சிகளுடனும் கூட்டணி உறுதி செய்யப்பட்டால் அந்த கட்சிகளின் தலைவர்கள் 23-ந்தேதி நடக்கும் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்பார்கள்.
கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடனே, எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் என்பது குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
பியூஸ்கோயல் முன்னிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்.
- சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசார குழுவை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரக் குழு விவரம்:
1. N.ஆனந்த்
2. ஆதவ் அர்ஜுனா B.A.
3. K.A.செங்கோட்டையன்
4. A.பார்த்திபன்
5. B.ராஜ்குமார் DME
6. K.V.விஜய் தாமு
7. S.P.செல்வம் DCE
8. K. பிச்சைரத்தினம் கரிகாலன்
9. M.செரவு மைதின் (எ) நியாஸ்
10. J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed.
மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை காலை 9 மணிக்கு இபிஎஸ்-ஐ சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நாளை காலை 9 மணிக்கு இபிஎஸ்-ஐ சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி 23ம் தேதி அன்று என்டிஏ கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
- 26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது.
- அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. இந்த பட்டியல் தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அ.தி.மு.க. தலைமையிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது. அந்த தொகுதிகளில் 20 முதல் 40 சதவீதம் வரையில் பா.ஜ.க. கட்சிக்கு வாக்குகள் கிடைத்து உள்ளன.
அதனை மையமாக வைத்தே சென்னை முதல் குமரி வரை 50 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோளிங்கர், மத்திய சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, வடசென்னையில் கொளத்தூர், தென்சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன.
கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், தர்மபுரி தொகுதியில் பாலக்கோடு, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம், ஈரோட்டில் பவானி, கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் இதில் அடங்கி உள்ளன.
கரூரில் குளித்தலை, கிருஷ்ணகிரியில் ஓசூர், தளி, மதுரையில் மதுரை தெற்கு, நாமக்கல்லில் ராசிபுரம், நீலகிரியில் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளும் பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கிணத்துகடவு, தொண்டா முத்தூர், வால்பாறை, ராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி, தென்காசி எம்.பி. தொகுதியில் தென்காசி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போடி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட ஒட்டபிடாரம், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வேலூரில் ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் அது தொடர்பான பட்டியலை தனியாகவும் பா.ஜ.க. கட்சி தயாரித்து வைத்துள்ளது.
மொத்தமாக அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மீதம் உள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கும் அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி 50 தொகுதிகளில் களம் இறங்கும் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அமித்ஷா வியூகம் வகுத்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
வருகிற 15-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி இருப்பது அ.தி.மு.க.வை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
- சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர்.
- காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.
இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர். காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் விஜய் வேறுதேதியில் பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி
டிசம்பர் 4-ந் தேதிக்கு பதில் வேறு தேதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்குமாறு விஜய் தரப்புக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் கார்த்திகை தீபம், ஜெயலலிதா நினைவு தினம், பாபர் மசூதி இடிப்பு தினம் வரிசையாக உள்ளதால் வேறு தேதியில் பிரச்சாரம் மெற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
- கரூரில் நடந்த பெரும் துயர சம்பவத்தில் இருந்து தலைவர் இன்னும் மீளாமல் இருக்கிறார்.
- சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு எங்களது விருப்பத்தை விஜய்யிடம் தெரிவித்தோம்.
சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.
இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது, கரூரில் நடந்த பெரும் துயர சம்பவத்தில் இருந்து தலைவர் இன்னும் மீளாமல் இருக்கிறார்.
சென்னையில் நடந்த கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு எங்களது விருப்பத்தை விஜய்யிடம் தெரிவித்தோம். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் எப்போது பிரசாரத்தை தொடங்குவார் என்பதை கட்சி தலைமையும்,
பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். கட்சி தலைமை அறிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்.
எந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது? அதற்கான போலீஸ் அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில நிர்வாகிகள் சேலத்திற்கு வந்து ஆலோசனை வழங்குவார்கள். அதற்கான தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்றனர்.
இந்த நிலையில், சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர். காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் மீண்டும் பிரசாரத்தை எப்போது தொடங்குவார் என்று அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.






