search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    2 கடைக்கு சீல், 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது32), அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் (62), பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (30), சங்கரபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வடசிறுள்ளூர் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (28), சங்கராபுரத்தை சேர்ந்த ஹரிஷ் (19), திருநாவலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மடப்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (27), கெடிலம் கிராமத்தை சேர்ந்த ராமன் (62), திருநாவலூர் பகுதியை சேர்ந்த சுகுமார் (44), தியாகதுருகம் பகுதியை சேர்ந்த விக்ரம் (37), திருநாவலூரை சேர்ந்த வெங்கடேசன் (45), மணலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்தியந்தல் கிராமத்தை சேர்ந்த நதியா (36), சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (70), கதிரவணன் (60) ஆகியோர் அவர்களது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இவர்களிடமிருந்து சுமார் 15 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த 13 நபர்கள் மீதும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 9 கைது செய்யப்பட்டனர். 2 கடைகளுக்கு வருவாய் துறையினரால் மூலம் சீல் வைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மொபைல் கடை வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது பட்டப்பகலில் மோட்டர் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வீ.பா ளை யம் கிரா மத்தைச் சேர்ந்த வர் சுரேஷ் (வயது 46) விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடூர் கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மற்றும் வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்த மாயவேல் மகன் தமிழரசன் (20) ஆகியோர் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சுரேஷ் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் குடிபோதையில் சுரேஷ் வீட்டிற்கு சென்று நீ மாடூர் காரனுக்குத்தான் ஆதரவாக பேசினாய் எனக்கூறி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து தன் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கையை கிழித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மேலும் இவர் மீது கேரள மாநிலத்தில் அடிதடி சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை பல்வேறு மருத்துவ காரணங்களால் செய்ய இயலாத போது அவர்களின் கணவர்கள் இந்த எளிய கருத்தடை சிகிச்சை முறையை மேற்கொண்டு பயன்பெறலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை குறித்த வாகன பிரச்சாரத்தை திருநாவலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். செல்வி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ அலுவலர் அசுவினி, வட்டார புள்ளியியலாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் முருகன், கவியரசரன், கோபிநாத், பகுதி சுகாதார செவிலியர் மின்னல் கொடி, செவிலியர்கள் சரண்யா, சரசு, சுஜிதா, மருந்தாளுனர் ராமன், ஆய்வக நுட்பனர் ராதிகா, புவனேஸ்வரி, கிராம சுகாதார செவிலியர்கள் சரண்யா, ஸ்ரீதேவி, ஆரோக்கியமேரி, கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை பல்வேறு மருத்துவ காரணங்களால் செய்ய இயலாத போது அவர்களின் கணவர்கள் இந்த எளிய கருத்தடை சிகிச்சை முறையை மேற்கொண்டு பயன்பெறலாம்.ஆண்டு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது என்று வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாய கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவரது வீட்டில் எறும்பு திண்ணி புகுந்துள்ளது. இதை பார்த்த பெருமாள் சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு அலுவலர் ரமேஷ் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எறும்பு திண்ணியை உயிருடன் பிடித்தனர். பின் அதனை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் பிடிக்கப்பட்ட எறும்பு திண்ணியை பார்ப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பலர் வந்து பார்த்து சென்றனர்.

    • வருகிற 1-ந்தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
    • முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கி, பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலையில் காலி யாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிப்பணி யிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்புநிலையத்தால் அறிவிப்புவெளியிடப் பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தகுதியானவிண்ணப்ப தாரர்களிடமிருந்துஎன்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற 1-ந்தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

    இதற்கான எழுத்துத் தேர்வு வருகின்ற 24-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைகள்ளக்குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலை யத்தால் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு12, 10 மற்றும் கூட்டுறவுபயிற்சி ஆகும். புனே வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக் கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவு கள் நிலுவையில் இருப்ப வர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்க ளில் 2023-2024-ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ள வர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்தி யதற்கான ரசீதினை கள்ளக் குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க லாம். இத் தகவலை கள்ளக் குறிச்சி மாவட்ட கலெக்டர்ஷ்ரவன் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார்.
    • 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்குகள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டி யல் மேற்பார்வையாளரும், தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையருமான வள்ளலார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற் பார்வையாளர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் கடந்த 5.01.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 18 வயது (01.01.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பியவர்க ளின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி, இவ்வரைவு வாக்கா ளர் பட்டியலில் 27.10.2023 ன்படி உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச்சா வடிகளில், 2,86,422 வாக்கா ளர்களும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடிகளில், 2,64,572 வாக்காளர்களும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சா வடிகளில், 2,62,896 வாக்கா ளர்களும், கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி யில் 332 வாக்குச்சாவடி களில், 2,76,131 வாக்காளர்க ளும் என மொத்தம் 1,274 வாக்குச்சாவடி மையங்க ளில் 10,90,021 வாக்காளர்கள் தற்போது வாக்காளர் பட்டி யலில் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக கிராமங்கள் மற்றும் கல்வராயன்மலை பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் விழிப்பு ணர்வு பணிகளை மேற்கொண்டு எந்த ஒரு வாக்காளரும் விடுபடா வண்ணம் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனி தாசில்தார் (தேர்தல்) பசுபதி, அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    28-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் படி ரூ.2,500 நிறுத்தியதை கண்டிப்பது, சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களுக்கு பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டிப்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 7-ந் தேதி தாலுக்கா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்திலும், 19-ந் தேதி ஒரு நாள் விடுப்பு போராட்டத்திலும், 28-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணன் (வயது 38) கூலி வேலை செய்து வருகிறார். இவர் சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று மீண்டும் சேலம் செல்ல சின்ன சேலம் ஆவின் பாலகம் எதிரே உள்ள சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த லாரி மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தி யநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டும் மனுவாக பெறுவதற்கும், ஒவ்வொரு மாதத்திலும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி களுடான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதேபோல்இக்கூட்டத்தில் விவசாயிகள் கரும்பு லாரிகளில் கொண்டு செல்லு ம்போது வழித்தடங்களில்

    மின்கம்பங்கள் மோதாமல் இருப்பதற்கு ஏதுவாக மின்கம்பிகளை உயர்த்திடவும், விளை நிலங்களில்பயிர்களை அதிகமாக சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை சுடு வதற்கு விவசாயிகளுக்கு ஆணையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கள்களில் பயிர்கடன்களில் விதை உரம் மற்றும் இதரஇடுபொருட்கள் வழங்குவதற்கு பதிலாக பணமாக வழங்கிடவும், கறவை மாடுகள் வளர்ப்ப தற்கு தேசியவங்கிகள் மூலம் கடன் வழங்கிடவும் கோரிக்கை வைத்தனர்.விவசாய நிலங்களில் கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்திடவேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரம், தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா, மேலாண்மை இயக்குநர் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை முருகேசன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்பார்வைப் பொறியாளர்(பொறுப்பு) கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கண்காணிப்பு பொறி யாளர் தமிழ்நாடு மின்சார வாரியம்(பொறுப்பு)கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவ சாயிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் கிராமம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.

    அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 40 பேரில் 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும், கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த பஸ்சினை சாலையோரமாக தூக்கி வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே இளையனார்குப்பம் உள்ளது. இங்கு செல்லக்கோட்டி (வயது 45) என்பவர் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். அங்குள்ள நோயாளிகளுக்கு, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருத்து கொடுப்பது, ஊசி போடுவது என அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வந்துள்ளார்.

    மேலும், ஒரு சில நோயாளிகளுக்கு அவரே மாத்திரை தயாரித்தும் வழங்கி வந்துள்ளார். இது குறித்து சங்கராபுரம் தாசில்தார் குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு தாசில்தார் குமரன் விரைந்து சென்றார்.அங்கிருந்த மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர். மேலும், மாத்திரை, மருந்து தயாரித்த மெடிக்கல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×