உளுந்தூர்பேட்டை அருகே முன்பக்க டயர் வெடித்ததால் கவிழ்ந்த ஆம்னி பஸ்: 10 பேர் படுகாயம்

விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே முன்பக்க டயர் வெடித்ததால் கவிழ்ந்த ஆம்னி பஸ்: 10 பேர் படுகாயம்
Published on

உளுந்தூர்பேட்டை:

சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் கிராமம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 40 பேரில் 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.

விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும், கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த பஸ்சினை சாலையோரமாக தூக்கி வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com