கள்ளக்குறிச்சி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல்

சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே வீ.பா ளை யம் கிரா மத்தைச் சேர்ந்த வர் சுரேஷ் (வயது 46) விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடூர் கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மற்றும் வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்த மாயவேல் மகன் தமிழரசன் (20) ஆகியோர் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சுரேஷ் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் குடிபோதையில் சுரேஷ் வீட்டிற்கு சென்று நீ மாடூர் காரனுக்குத்தான் ஆதரவாக பேசினாய் எனக்கூறி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து தன் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கையை கிழித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மேலும் இவர் மீது கேரள மாநிலத்தில் அடிதடி சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com