search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வராயன்மலை"

    • மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார்.
    • 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்குகள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டி யல் மேற்பார்வையாளரும், தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையருமான வள்ளலார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற் பார்வையாளர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் கடந்த 5.01.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 18 வயது (01.01.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பியவர்க ளின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி, இவ்வரைவு வாக்கா ளர் பட்டியலில் 27.10.2023 ன்படி உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச்சா வடிகளில், 2,86,422 வாக்கா ளர்களும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடிகளில், 2,64,572 வாக்காளர்களும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சா வடிகளில், 2,62,896 வாக்கா ளர்களும், கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி யில் 332 வாக்குச்சாவடி களில், 2,76,131 வாக்காளர்க ளும் என மொத்தம் 1,274 வாக்குச்சாவடி மையங்க ளில் 10,90,021 வாக்காளர்கள் தற்போது வாக்காளர் பட்டி யலில் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக கிராமங்கள் மற்றும் கல்வராயன்மலை பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் விழிப்பு ணர்வு பணிகளை மேற்கொண்டு எந்த ஒரு வாக்காளரும் விடுபடா வண்ணம் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனி தாசில்தார் (தேர்தல்) பசுபதி, அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சமூக விரோதிகளின் கூடாரமான கல்வராயன்மலை மாறி வருகிறது.
    • எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோதிகள் தொடர்ந்து இந்த மலையில் சாராயம் காய்ச்சுவதை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தில் கல்வராயன் மலை உள்ளது. இந்த மலை சுமார் 2,000 சதுர பரப்பளவு கொண்டது. 171 மலை கிராமங்களை கொண்ட 75,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் இங்கு வசிக்கின்றனர். மேலும் இந்த மலை அடர்ந்த வனப் பகுதிகளைக் கொண்டது. சேலம், தர்மபுரி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி இவர்களை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்கிறது.இந்த கல்வராயன் மலையில் வனவிலங்குகள் இல்லை. மேலும் இது உயரம் குறைவான மலையாக உள்ளது. ஆனால் மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் சமூக விரோதிகளுக்கு உகந்த மலையாக உள்ளது.

    சமூக விரோதிகள் அதிகமாக இங்கு இருப்பதால் சாதாரண பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு வர அச்சப்படுகின்றனர். இதனால் சமூக விரோதிகள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகள் மிகவும் எளிதாக சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருள்களை கொண்டு செல்கின்றனர். பின்னர் அவர்கள் கல்வராயன் மலையில் நீரோடை ஓரமாக கள்ளச்சாராயம் காய்சுகின்றனர்.இங்கு காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள மாவட்டங்கள், பல்வேறு இடங்களுக்கு விற்பனை ஆகிறது.

    இதனை தடுக்க கச்சிராய பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இவரது சோதனையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் லிட்டர் சாராய ஊறல் கொட்டி அளிக்கப்பட்டது. மேலும் 150 -க்கு மேற்பட்ட கள்ளச்சார வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இருந்த போதிலும் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் போலீசார் தரப்பில் எடுத்து வருகின்றனர். மேலும் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோதிகள் தொடர்ந்து இந்த மலையில் சாராயம் காய்ச்சுவதை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியை சேர்ந்த மதுவிலக்கு போலீசார் உடனடியாக இதில் தலையிட்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் கல்வராயன் மலையை சமூக விரோதிகளின் அவர்களின் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    • சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்
    • கள்ளக்குறிச்சி மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கீழ்நிலவூர் கிராமத்தை சேர்த்த சுதாகர் (வயது 22). லாரி கிளீனர். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ம் தேதி சுதாகர் வீட்டில் இரு தரப்பினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட பிறகு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததார்.

    இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமியை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று காண்பித்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அங்கு குழந்தைக்கு விட்டமின் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    அதன்பிறகு சிறுமியை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமி கர்ப்பமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மருத்துவ நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று குழந்தைத் திருமணத் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுதாகரை கைது செய்துள்ளனர்.

    ×