பகண்டை கூட்ரோடு அருகேமாத்திரை தயாரித்து விற்பனை செய்த மெடிக்கல் உரிமையாளர்

மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர்.
மெடிக்கலில் ஆய்வு செய்த அதிகாரிகளை படத்தில் காணலாம்.
மெடிக்கலில் ஆய்வு செய்த அதிகாரிகளை படத்தில் காணலாம்.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே இளையனார்குப்பம் உள்ளது. இங்கு செல்லக்கோட்டி (வயது 45) என்பவர் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். அங்குள்ள நோயாளிகளுக்கு, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருத்து கொடுப்பது, ஊசி போடுவது என அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வந்துள்ளார்.

மேலும், ஒரு சில நோயாளிகளுக்கு அவரே மாத்திரை தயாரித்தும் வழங்கி வந்துள்ளார். இது குறித்து சங்கராபுரம் தாசில்தார் குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு தாசில்தார் குமரன் விரைந்து சென்றார்.அங்கிருந்த மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர். மேலும், மாத்திரை, மருந்து தயாரித்த மெடிக்கல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com