என் மலர்tooltip icon

    இந்தியா

    • உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்து செய்தது.
    • பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டது.

    இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 4 நாட்களாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது.

    உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.

    இதைதொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது.

    டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டது.

    இந்நிலையில், இண்டிகோ விமான சேவைகள் வரும் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்.10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் சரியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சுமார் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.
    • அடுத்த மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.

    வாடா ரமேஷ் எப்படிடா இருக்கே?

    நான் நல்லா இருக்கேன் சுரேஷ். நீ எப்படி இருக்கே?

    நான் இந்த வாரம் வெளிநாட்டுக்கு போகப் போறேண்டா. நீ எங்கேயும் போகலையாடா ரமேஷ்.

    இல்லைடா சுரேஷ். நான் இந்தியாவை விட்டு தாண்டலைடா.

    ஆமா, நீ தான் ஒரு செய்தி சேனல் ஆச்சே. எங்க இந்த ஆண்டு நடந்த முக்கியான செய்திகளை சுருக்கமா சொல்லு கேட்போம்.

    எனக்கு தெரிந்ததைச் சொல்றேன். கேட்டுக்கோ.

    முதல்ல ஜனவரியில் நடந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி பத்தி சொல்றேன்.

    மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

    யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட விழாதான் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா.


    கும்பமேளாவில் சில வகைகள் உள்ளன. ஆர்த் கும்பமேளா 6 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். பூர்ண கும்பமேளா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மகா கும்பமேளா ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இது 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவதுதான் மகா கும்பமேளா.

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 13-ம் தேதி தொடங்கியது.

    45 நாட்கள் கோலாகலமாக நடந்த மகா கும்பமேளா பிர்ப்ரவரி 26-ம் தேதியுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

    உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

    பிரயாக்ராஜ் மாவட்டம் சார்பில் ரூ.2,100 கோடியும், உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஜனவரி 29-ம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.

    கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.


    கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அப்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.

    இனி அடுத்த மகா கும்பமேளா 2169-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என கூறினான் சுரேஷ்.

    பரவால்லடா, இவ்வளவு தகவல் சொல்லுவேன்னு நான் நினைக்கலடா. உண்மையிலேயே நீ ஒரு மினி செய்தி சேனல் தாண்டா.

    என் மூஞ்சிக்கு நேரா என்னைப் புகழாதடா, எனக்கு பிடிக்காது ஓகேவா என பேச்சை நிறைவு செய்தான்.

    • முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஹூமாயூன் கபீரரை ‘சஸ்பெண்டு’ செய்தது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள பரத்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹூமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.

    இதைதொடர்ந்து அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'சஸ்பெண்டு' செய்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.

    இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு ஹூமாயின் கபீர் மேற்குவங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டுவது அரசியலமைப்புக்கு முரணானது எதுவும் இல்லை. வழிபாட்டு தலத்தை கட்டுவது அரசியலமைப்பு உரிமை. பாபர் மசூதி கட்டப்படும்.

    33 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் இதயங்களில் ஒரு ஆழமான காயம் ஏற்பட்டது. தற்போது அந்த காயத்துக்கு ஒரு சிறிய தைலம் பூசுகிறோம்.

    பாபர் மசூதி கட்ட அடிக்கல் நாட்டப்போவதாக அறிவித்த போது எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. இந்த நாட்டில் 40 கோடி முஸ்லிம்களும், மேற்கு வங்காளத்தில் 4 கோடி முஸ்லிம்களும் உள்ளனர். இங்கே ஒரு மசூதியை கட்ட முடியாதா? பாபர் மசூதி எனது திட்டம் மட்டுமல்ல. மாநில நிர்வாகமும், திரிணாமுல் காங்கிரசும் இதில் ஈடுபட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வார விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
    • ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    வார விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்படுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.30 அடியாக உள்ளது.
    • சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 43.50 அடியாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. 40 அடி உயர பாறையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.

    ஏற்கனவே அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக அருவிப்பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகள், பாதைகள், பாதுகாப்பு தடுப்புகள் சேதமடைந்து சுற்றுலாப்பயணிகள் அருவிப்பகுதிக்கு செல்வதற்கும் அருவியில் குளிப்பதற்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடை 50ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு அருவியின் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.70 அடியாக உள்ளது. 1033 கனஅடி நீர் வருகிற நிலையில் 1600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 6798 மி. கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 63.94 அடியாக உள்ளது. 1759 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1419 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4398 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.30 அடியாக உள்ளது. 81 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் 119 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 43.50 அடியாக உள்ளது. 21 கன அடி நீர் வருகிற நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 

    • சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது.
    • சுய விளம்பரத்தில் திளைக்கும் பொம்மை முதல்வர் இதை எப்போது தான் உணரப் போகிறாரோ?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டில் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே தெளிவாக உணர்த்துகின்றன.

    * கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் தாக்கப்பட்ட +2 மாணவர் பரிதாபாமாக உயிரிழப்பு,

    * மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எடை தராசால் அடித்து காய்கறி கடைக்காரர் கொலை,

    * தென்காசியில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிப் படுகொலை,

    * சேலம் தோப்பூர் பகுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞரின் தலையை தேடும் போலீசார்,

    * நாகர்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து திருட முயற்சி,

    என தொடர்ச்சியாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு தான் வளர வேண்டும். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு தான் அதிகரித்து வருகிறது. கொலை வரை நீண்டுள்ள இந்த மோதல் வெறியை கட்டுப்படுத்தத் தவறியதற்கு பொம்மை முதல்வரின் அரசு வெட்கப்பட வேண்டும்.

    விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே பகல், இரவென எந்த நேரத்திலும் துளி கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத் தான் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது. சுய விளம்பரத்தில் திளைக்கும் பொம்மை முதல்வர் இதை எப்போது தான் உணரப் போகிறாரோ?

    ஆட்சியில் இருக்கப் போகும் நான்கு மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 



    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

    பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    9-ந்தேதி வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • நயினார் நாகேந்திரன் மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன நியாயம் உள்ளது.
    • சட்டத்தின் ஆட்சி முதலமைச்சரால் நடத்தி வரப்படுகிறது.

    நெல்லை:

    சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சொல்வதற்கு யு.ஜி.சி.க்கு அதிகாரம் கிடையாது. பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை மட்டுமே யு.ஜி.சி. வழங்க முடியும். அதனை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை. மாநிலத்தால் இயங்கும் பல்கலைக்கழகத்தின் முழு உரிமை.

    உச்சநீதிமன்றம் யு.ஜி.சி. உத்தரவிடும் அதிகாரம் கிடையாது என தெளிவாக சொல்லிவிட்டது. பல்கலைக்கழகத்திற்கு மானியம் கொடுப்பதுதான் அவர்களது பணி. ஆனால் அதனை விட்டு மீதி பணிகளை யு.ஜி.சி. செய்கிறது. மத்திய அரசின் ஏவலர்களாக சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை இருந்த நிலையில் இப்போது தேர்தல் ஆணையமும், யு.ஜி.சி.யும் வந்து விட்டது.

    பா.ஜ.க.வின் மாநில தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரனின் ஒரு முகம் மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னொரு முகம் அவரிடம் இருப்பதை நேற்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காட்டி உள்ளார். அதனை நயினார் நாகேந்திரன் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

    மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரெயில் தேவை. அதை சொல்வதை விட்டுவிட்டு நயினார் நாகேந்திரன் மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன நியாயம் உள்ளது. அமைதியாக உள்ள இடத்தில் தான் கலவரம் செய்ய முடியும்.

    அறுபடை வீட்டில் ஒரு இடத்தில் மட்டும் தான் சிக்கந்தர் தர்கா உள்ளது. மற்ற இடத்தில் இது போன்ற எந்த விவகாரமும் இல்லை. சிக்கந்தர் தர்கா இருப்பதால் சண்டையை உருவாக்க நினைப்பதால் அமைதியாக இருக்கும் தமிழகத்தை, கலவர பூமியாக மாற்ற நினைத்தால் அது நடக்காது.

    சட்டத்தின் ஆட்சி முதலமைச்சரால் நடத்தி வரப்படுகிறது. எந்த சலசலப்புக்கும் தமிழக அரசு அஞ்சாது. இந்தியாவின் வழிகாட்டி தமிழகம் தான். இந்த ஆட்சி தொடரும். திராவிட ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பெரியார் அண்ணா, கலைஞர், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் என வழி வழியாக ஆட்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றார். 

    • மேலூர் வட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
    • உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மதுரை:

    மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

    * மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும்.

    * மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான, மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி இருக்கின்ற 4 மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்கு வாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில், இப்போது இருக்கின்ற பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

    * மதுரை கிழக்கு வட்டத்தில் இருக்கின்ற உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    * மேலூர் வட்டத்தில் இருக்கின்ற கேசம்பட்டி கிராமம்-பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

    மேலும், மேலூர் வட்டம் சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

    * மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கின்ற கொடி மங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

    இவை உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    • கடந்த கால அவல ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டது தி.மு.க. அரசு.
    • 4.54 லட்சம் பேர் மதுரையில் மகளிர் உரிமை தொகை திட்டம் பெறுகின்றனர்.

    ஊத்தங்குடி:

    மதுரை மாவட்டம் ஊத்தங்குடியில் 63,698 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னனை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் மதுரை.

    * திருச்செந்தூர் வேல் விவகாரத்தில் நீதி கேட்டு கலைஞர் நடை பயணத்தை தொடங்கிய மண் மதுரை.

    * மதுரையை அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் நிகழ்ச்சி இது.

    * அரசு விழாவா? மாநாடா? என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடைபெறும் நிகழ்ச்சி இது.

    * கடவுளின் பெயரை பயன்படுத்தி வெறுப்பை விதைப்பவர்களுக்கு பதிலடி அளிப்பவர் பிடிஆர்.

    * கடந்த கால அவல ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டது தி.மு.க. அரசு.

    * 4.54 லட்சம் பேர் மதுரையில் மகளிர் உரிமை தொகை திட்டம் பெறுகின்றனர்.

    * புதுமை பெண் திட்டத்தில் 63,400 மதுரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    * மதுரை மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 31,000 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்.

    * மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 8.60 லட்சம் பேர் மதுரையில் பயன்பெற்றுள்ளனர்.

    * நம்மை காக்க 48 திட்டத்தில் மதுரையில் மட்டும் 16 ஆயிரம் பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.

    * நான் முதல்வன் திட்டத்தில் மட்டும் மதுரையை சேர்ந்த 1.17 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

    * முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் மூலம் 2 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

    * மதுரையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது.

    * முதலமைச்சரின் முகவரி திட்டத்தில் 3.25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    * என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கின்றனர்.

    * எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அதனை தி.மு.க. அரசு முறியடிக்கும்.

    * தி.மு.க. வளர்ச்சி அரசியலை முன்னெடுக்க, எதிர்க்கட்சிகள் வேறு எதோ அரசியலை முன்னெடுக்கின்றன.

    * 10 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் இன்னும் மதுரைக்கு வரவில்லை.

    * மதுரையில் நடந்த கீழடி அகழாய்வை நிறுத்த முயன்றது மத்திய பா.ஜ.க. அரசு.

    * தமிழ்நாட்டிற்கு நிதியை கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது.

    * மத்திய அரசு தமிழ் மீது வெறுப்புடன் நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

    • ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை.
    • தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும்.

    திருப்பூர்:

    அ.ம.மு.க., பொது ச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் உள்ளவர்கள் த.வெ.க.வில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள் தங்களை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும். சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தூங்கிக்கொண்டு இருப்பவர்கள், தூங்குவது போல நடிப்பவர்கள் ஒருங்கிணைவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

    பதவி ஆசை, சுயலாபத்திற்காக பிரித்து விட்டார்கள். அவர்களாக திருந்த வேண்டும். அல்லது அவர்களை யாராவது எழுப்ப வேண்டும். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என பா.ஜ.க., தலைவர்கள் முயற்சி செய்தார்கள். இப்போதும் செய்கிறார்கள்.

    ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை. மற்ற கட்சியில் இருந்து வந்து கூட்டணிக்காக பேசுவதை தவறாக நினைக்கவில்லை. அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க., அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாகவும் நான் நினைக்கவில்லை. இது நட்பு ரீதியானது.

    53 ஆண்டாக அ.தி.மு.க.வில் இருந்த செங்கோட்டையன் ஒற்றுமையை வலியுறுத்தி முயற்சி எடுத்தார். அது பிடிக்காமல் கட்சியை விட்டு நீக்கினால் வீட்டில் போர்வை போர்த்தி உறங்க முடியாது. தேனீ போன்று சுறுசுறுப்பானவர். அவர் கோபத்தில் த.வெ.க.வுக்கு சென்றிருக்கமாட்டார். சிந்தித்து நிதானமாகவே முடிவெடுத்திருப்பார்.

    செல்லூர் ராஜூ காமெடியாக ஏதாவது பேசுவார். இலை உதிர்ந்தால் பிரச்சனை இல்லை. விழுதுகளாக உள்ளவர்கள் சென்றது அவருக்கு புரியவில்லை. 16-ந்தேதி ஈரோடு விஜய் பிரசாரத்திற்கு வழிமுறைகளை பின்பற்றினால் அனுமதி வழங்குவார்கள்.

    தமிழகம் அமைதி பூங்கா. இங்கு சாதியை கடந்து மதத்தை கடந்து வாழ்ந்து வருகிறோம். மத நல்லிணக்கம் அடிப்படையானது. பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மூலம் எல்லோரும் சமம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    கடவுளின் பெயரையோ மதத்தின் பெயரையோ சாதியின் பெயரையோ கூறி தேவையற்ற பிரச்சனைகள் கலவரங்கள் உருவாகாமல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் பொறுப்போடு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இதனை அரசும் நீதிமன்றமும் சரியாக செய்வார்கள் என நினைக்கிறேன்.

    தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும். நான் சொன்னதை புரிந்து கொள்ளாமல் தினகரன் 5-வது அணி அமைப்பார் என பேசினார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தமிழகத்தில் 4 முனை போட்டி தான் இருக்கும். வெற்றியை நோக்கி எங்கள் கூட்டணி அணிவகுக்கும்.

    சீமான் தனித்துப்போட்டியிடுவார். தி.மு.க., அ.தி.மு.க., விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளதாக எனக்கு செய்திகள் வருகிறது. நான் யாருடன் செல்கிறேன் என இதுவரை முடிவு எடுக்கவில்லை.

    கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றனர். இறுதி வடிவம் அடைந்த பிறகு உறுதியாக தெரிவிக்கிறேன். எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நட்பு ரீதியாக பேசி உடன்பாடு எட்டப்படும். அ.ம.மு.க., இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும். அ.ம.மு.க.வில் தேர்தலுக்காக அனைத்து நிலை உறுப்பினர்களையும் தயார்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். 

    • முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.
    • தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.

    மதுரையில் 'தமிழ்நாடு வளர்ச்சி' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    * ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டியது அவசரம் என உணர்ந்தோம்.

    * உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்தேன்.

    * தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களின் பங்கு மிகவும் முக்கியம்.

    * பரவலான வளர்ச்சி என்பதை எங்களது செயல்கள் மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறோம்.

    * முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கினோம்.

    * புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80 சதவீத முதலீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.

    * மாநிலத்தில் பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்த பின்னரே முதலீடு செய்வது குறித்து முடிவு செய்வர்.

    * மதுரையை எப்போதும் விழிப்புடன் இருக்கும் மண் என்றுதான் கூறவேண்டும்.

    * கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே எனது ஆசை.

    * இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி எழுத வேண்டும்.

    * தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.

    * தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    * விருதுநகரில் உருவாகி வரும் ஜவுளி பூங்காவால் 1 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை.

    * தென்தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமாக மதுரை மாறி வருகிறது என்றார். 

    ×