என் மலர்tooltip icon

    இந்தியா

    • கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் கட்டிக் கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
    • உங்களுக்கு இது பிப்ரவரி மாதம். திமுகவுக்கு இது மாநாடு மாதம்.

    சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    கலை கல்லூரி சிறப்பாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இன்றைய நாள் பெருமை கொள்ளத்தக்க நாள்.

    கல்லூரியை கட்ட சொன்னால் ஒரு பல்கலைக்கழகத்தையே கட்டியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.

    கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் கட்டிக் கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

    கொளத்தூர் தொகுதிக்கு வந்து உங்களுக்காக உழைப்பதுதான் உற்சாகம். உங்களை வந்து பார்த்தால் பூஸ்ட் ஆகிவிடுவேன்.

    கொளத்தூர் தொகுதி அனைத்து நல்லதிட்டங்களுக்குமான மாடலாக திகழ்கிறது.

    கல்விதான் கடவுள். அதுதான உங்களுக்கு நிறைய கொடுக்கும். அதனால், நன்றாக படியுங்கள்.

    உங்களுக்கு இது பிப்ரவரி மாதம். திமுகவுக்கு இது மாநாடு மாதம்.

    மாணவ, மாணவியர் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது.
    • கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம்.

    சென்னை:

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்த ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜூனராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினரிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்த பிறகு பேச்சுவார்த்தையின் முடிவுகளை தெரிவிக்கிறோம். சொந்தம் எப்போதும் தொடர் கதை தான். அது முடிவில்லாதது. அதனால் தொடரும். மேல்சபை எம்.பி. சீட் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம். அவர்கள் தகவல் கொடுத்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.

    தொகுதிகள் பட்டியலை இன்னும் அவர்களிடம் கொடுக்கவில்லை. போட்டியிட்ட தொகுதிகளை குறைக்குமாறு எங்களிடம் சொல்லவில்லை. நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார். 

    • சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
    • தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது.

    நெல்லை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தை மலை மீது ஏற்ற முடியவில்லை. இந்த விவகாரம் முருக பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் காரணமாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியும் வீடுகள் முன்பும், பொது இடங்களிலும் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொகுதி பங்கீடு மின்னல் வேகமா? முயல் வேகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க. கூட்டணியின் பேச்சுவார்த்தை சினிமா படத்தில் சொன்னது போல வாமா மின்னல் என வந்த வேகத்தில் போய்விடும்.

    தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துகள் மறைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் தி.மு.க.விற்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பிரதமரை கொலை செய்வேன் என சொன்னவர் இதுவரை கைது செய்யப்படாத நிலை இருந்து வருகிறது. தி.மு.க. பாரபட்சமான ஆட்சியை நடத்தி வருகிறது. பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.

    பாரதிய ஜனதாவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவேன் என டி.டி.வி தினகரன் சொல்லி வந்ததாக கேட்கிறீர்கள். பா.ஜ.க., அ.தி.மு.க 2 கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளது.

    எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார்கள். பலமுனை போட்டி தமிழகத்தில் நிலவி வருகிறது. தி.மு.க.விற்கு எதிராக பலமான போட்டி இல்லை என முதலமைச்சர் சொல்லி வருகிறார். அதனை மக்கள் தான் சொல்ல வேண்டும் என்றார்.

    • குமரி மாவட்டத்தில் முடிவற்ற பல்வேறு திட்டங்களையும் திறந்து வைக்கிறார்.
    • நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை (24-ந் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படும் அவர், காலை 10 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலமாக பகல் 11 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவருக்கு கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் சீரோ பாயிண்ட் பகுதியில் குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு வரை 'ரோடுஷோ' மூலம் பொதுமக்களை சந்திக்கிறார்.

    அதன் பிறகு பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ரூ.1 கோடியே 46 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். பின்னர் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு புத்தளம் அருகே உள்ள கல்லடி விளை வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் படைப்பகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார். அதன் பிறகு மாலை 6.30 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா வருகிறார். அங்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் இரவில் நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் (25-ந் தேதி) காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் முடிவற்ற பல்வேறு திட்டங்களையும் திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அவரது வருகையை அடுத்து முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் வந்து செல்ல வசதியாக தனி பாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நலத்திட்ட உதவிகள் வாங்க வரும் பயனாளிகள் வாகனங்களை நிறுத்த வசதியாக பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை அடுத்து நாகர்கோவில் நகரில் 2 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருகை தந்துள்ளனர். கண்கார்டியா பள்ளி மைதானம் மற்றும் கல்லடி விளை, கன்னியாகுமரி பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளுக்குள் என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
    • தமிழ்நாட்டில் 2026 தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயான தேர்தல்.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

    அப்போது அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- திராவிட மாடல் ஆட்சி பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:-

    என் பேச்சில் தெளிவாக சொல்லி உள்ளேன். மதசார் பின்மை, சோசலிசம் பாசிசத்தை எதிர்க்கணும் இதுதான் திராவிட மாடல். எல்லோருக்கும் எல்லாம் என்ற எங்கள் கொள்கையை வழிவகுத்து கொண்டு எங்களது திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்.

    கேள்வி:-பா.ஜ.க. அந்த மாடலை பின்பற்றவில்லை என்று சொல்கிறீர்களா? அவர்களது கூட்டணி கட்சி கூட திராவிட மாடல்தான் பண்ணுவதாக கூறுகிறார் களே?

    பதில்:- நிச்சயமாக இல்லை. அதை உறுதியாக சொல்கிறேன். பயன்படுத்தி கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

    போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளுக்குள் என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    கேள்வி:- பலமுனை போட்டி களத்தில் இருக்கிறது என்கிறார்கள்? நீங்கள் பலமுனை போட்டியாக பார்க்கிறீர்களா? அப்படி வந்தாலும் அது உங்களுக்கு சாதகமா? எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-நிச்சயமாக பல முனை போட்டி இருக்கலாம். ஆனால் பலம் பொருந்திய போட்டியாக இல்லை அது.

    கேள்வி:- பிரதமர் மோடி 3 முறை இந்த மாதம் வரப்போகிறார். பா.ஜ.க. ரொம்ப தீவிரமாக இருக்கிறது தமிழ்நாட்டில் அவர்கள் கூட்டணியை வெற்றி பெற வைப்பதற்கு? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- நான் அடிக்கடி சொல்வதுதான் பிரதமர் அடிக்கடி வர வேண்டும். அமித்ஷா அடிக்கடி வர வேண்டும். இந்த கவர்னரை மாற்றக் கூடாது. இதுவே எங்களுக்கு பெரிய பிரசாரம்.

    கேள்வி:- மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தி ருக்கிறீர்கள். இது மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது. இதை உங்களது கடமை என்று நினைக்கிறீர்களா? அல்லது தேர்தலுக்கான விளையாட்டா?

    பதில்:-தொடக்கத்திலேயே இதற்கு நான் விளக்கம் கொடுத்தேன். இதற்கு மேல் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    கேள்வி:- இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று மணிசங்கர் அய்யர், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலரும் சொல்கிறார்களே? அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ஏற்பீர்களா?

    பதில்:- தலைவர் கலைஞர் ஏற்கனவே ஒரு முறை சொல்லி இருக்கிறார். என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்.

    கேள்வி:- சட்டசபை தேர்தல் வெற்றி எப்படி அமையும்?

    பதில்:- தமிழ்நாட்டில் 2026 தேர்தல் என்பது ஜன நாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயான தேர்தல். என்.டி.ஏ.-தமிழ்நாடு இடையேயான தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த ஆண்டு ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக்கையும் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்தில் வைத்து நாளை வெட்டுகிறார்.
    • நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நாளை காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக கட்சி அலுவலகத்திற்கு வருகை தருகிறார்.

    அப்போது அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மறைந்த அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைக்கிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளின் போது எத்தனையாவது பிறந்தநாள் என்பதை குறிக்கும் வகையில் கேக் தயாரிக்கப்பட்டு தலைமை கழகத்தில் வைத்து வெட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக்கையும் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்தில் வைத்து நாளை வெட்டுகிறார். இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்படுகின்றன. நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    அ.தி.மு.க. சார்பில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.2000 வழங்கப்படும், ஆண்களுக்கும் இலவசமாக பேருந்து பயணம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நாளை முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் எதுவும் முடிவடையாத நிலையில் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் உறுதியாகி இருப்பதாகவும் அது தொடர்பான விவரங்களையே எடப்பாடி பழனிசாமி நாளை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    • சகோதரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
    • தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மனிஷ் குமார் (27), மஞ்சீத் குமார் (25). அண்ணன்-தம்பியான இருவரும் அதே கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    அப்போது திருமண வரவேற்பு விழாவில் திடீரென உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சகோதரர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சகோதரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் சொத்து பிரச்சனை தொடர்பான முன்பகை காரணமாக சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி எல்லார்க்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.
    • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு எந்தளவு ஓரவஞ்சனையுடன் அணுகுகிறது என்பதை சொல்ல தேவையில்லை.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் TOWN HALL CHENNAI நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * மத்திய பா.ஜ.க. அரசானது ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சிக்கும் மதிப்பு அளிக்கவில்லை.

    * மக்களிடையே விதைக்கப்படும் நல்ல கருத்துகள் தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

    * பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி எல்லார்க்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.

    * எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு எந்தளவு ஓரவஞ்சனையுடன் அணுகுகிறது என்பதை சொல்ல தேவையில்லை.

    * வளர்ச்சியை தமிழ்நாடு முன்னெடுத்துள்ளது. செயற்கை நிதிச்சுமையை தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்துகிறது.

    * நாட்டில் 11.9 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலம் சாதிக்க முடியாத ஒன்று என்றார்.

    • “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.
    • முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து கூறியிருப்பதாவது:-

    சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று "கந்த சஷ்டி கவசம்" பாடி முருகனை போற்றுவோம்.

    அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம் என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக வருகிற 2-ந்தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    • காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் விலகி, த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
    • ஓ.பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன்பு சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

    ஊட்டி:

    தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.

    இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேனி தொகுதியில் போட்டியிட்டார்.

    கடந்த முறை தனியாக போட்டியிட்ட பா.ஜ.க இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் ஓ.பி.எஸ்.சையும் சேர்த்து கொள்ள முயற்சிகள் நடந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.

    இதனால் தற்போது அரசியல் களத்தில் ஓ.பி.எஸ். தனியாக நிற்கிறார். ஓ.பி.எஸ். தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தவொரு நிலையான முடிவையும் எடுக்காததால் அவருடன் பயணித்த மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.

    மேலும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் விலகி, த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால் ஓபிஎஸ் இதுவரை தெளிவான முடிவு எடுக்கவில்லை.

    இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் பேசி வருகின்றனர்.

    அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன்பு சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அந்த சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அவர், தி.மு.க அரசையும், முதலமைச்சரையும் பாராட்டி பேசினார். இதனால் அவர் தி.மு.க. கூட்டணிக்கு நெருங்கி வருவதாக பார்க்கப்படுகிறது.

    ஓ.பி.எஸ்.சின் இந்த முடிவுக்கு அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட செயலாளர் பாரதியார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பந்தலூர், கூடலூர் பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்றால் அவருடன் நிர்வாகிகள் நாங்கள் யாரும் செல்லமாட்டோம். ஓ.பி.எஸ்., தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் நாங்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் அணியை விட்டு வெளியேறுவோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    இதுதொடர்பாக நீலகிரியை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறியதாவது:-

    சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது எங்களிடம் ஒரு படிவம் வழங்கப்பட்டு, அதில் தி.மு.க.விற்கு செல்வதா? அல்லது வேறு கட்சிக்கு செல்வதா? என 2 விருப்பங்கள் கேட்கப்பட்டன.

    அப்போதே நாங்கள் தி.மு.க. என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு என்று குறிப்பிட்டோம். மேலும் 88 மாவட்ட செயலாளர்களில் 11 பேர் மட்டுமே தி.மு.க.வுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாக வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த நாங்கள் விஜயின் த.வெ.கவுக்கு செல்வதை தவி வேறு வழியில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ் கூறியிருந்தார், இந்த நிலையில் தை முடிந்து மாசி தொடங்கிவிட்டது. ஆனாலும் அவரால் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காமல் குழம்பியபடியே இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    • தங்கத்துக்குப்போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்குப்போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

    18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-02-2026- ஒரு கிராம் ரூ.290

    21-02-2026- ஒரு கிராம் ரூ.290

    20-02-2026- ஒரு கிராம் ரூ.270

    19-02-2026- ஒரு கிராம் ரூ.270

    18-02-2026- ஒரு கிராம் ரூ.260

    • போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது.
    • முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

    இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக, சதுர்த்தியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று, அருள்மிகு முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

    அதே போல வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்!

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

    வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×