search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி"

    • இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
    • பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள்.

    முசிறி:

    என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். அவரது 61-வது நாள் நடைபயண யாத்திரை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்றது. முசிறி புதிய பேருந்து நிலையத்தில் நடைபயணம் தொடங்கப்பட்டு முசிறி-துறையூர் பிரிவு சாலை வழியாக முசிறி கைகாட்டியில் முடிவடைந்தது.

    வழியில் அண்ணாமலை முசிறி பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் பட்டியல் அணி சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 6 பெண்களுக்கு தையல் எந்திரத்தை வழங்கினார்.

    தமிழகத்தில் நியாய விலை கடையில் வழங்கும் அரிசிக்கு மத்திய அரசு கிலோ விற்கும் 32 ரூபாய் வழங்குகிறது. தமிழக அரசு 2 ரூபாய் வழங்குகிறது. தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகள் கிசான் அட்டை பெற்று விவசாய கடன் பெற்று வருகின்றனர்.

    இயற்கை விவசாயத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. ஆவின் பாலில் நடக்கும் ஊழலை பா.ஜ.க. கண்டிக்கிறது. ஆவினிலிருந்து வரும் பால் தரக் குறைவாக உள்ளது. 2022-ம் ஆண்டு ஒரு நாளுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 38 லட்சமாக உள்ளது, 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.

    தமிழகத்தில் அரசே காவிரி மணலை திருடுகிறது. இந்திய துணை கண்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 467 கோடி ரூபாய்க்கு 2 நாட்களில் மதுபானம் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாராயத்திற்கு சிறப்பிடம் பெற்றது தமிழகம்.

    விஞ்ஞான முறையில் ஊழல் செய்து கொண்டிருப்பவர்கள் தி.மு.க.வினர். பாரதிய ஜனதா கட்சியின் கனவு பெரிது, பெரிய ஊர்கள் வளர்கிறது, சின்ன ஊர்கள் தேய்கிறது, கிராமங்கள் முன்னேற வேண்டும். விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை, மையமாகக் கொண்டு அரசியல் நடத்துவோம், இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

    பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நல்லாட்சி அமைவதற்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார்.
    • தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற பல்வேறு வகையான காய்கள் பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தைகள் சிவப்பாக பிறக்க குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்த குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான். அடுத்து இந்தியாவில் நமது காஷ்மீர் மாநிலம் ஆகும். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ குறைந்த அளவில் உள்ளதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கிலோ வெளிநாட்டில் இருந்து வாங்கும் நிலை உள்ளது. தற்பொழுது இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மேல் மலை கிராமமான கவுஞ்சி மற்றும் பூண்டி மலை கிராமங்களில் மூர்த்தி என்ற விவசாயி கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்தார். 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் குங்குமப்பூ பயிரிட்டு சாகுபடி செய்தார்.

    இது குறித்து அவர் கூறும்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான பயிற்சி மற்றும் அறிவுரைகளின்படி தனது முயற்சியை தொடர்ந்ததாக தெரிவித்தார். மேலும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக குங்குமப்பூ பயிரிட கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மற்றும் குளிர் முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.4 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் குங்குமப்பூ சாகுபடிக்கு 55 நாட்கள் முதல் 60 நாட்கள் போதுமானது. 15 கிலோ குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி தற்பொழுது அதனை 40 கிலோவாக உருவாக்கி உள்ளேன். தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இந்த புது முயற்சியை மற்ற விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார். 

    • வரும் 29-ம் தேதி சென்னையில் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தஞ்சாவூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்,

    மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மணி தலைமையில் மாநில தலைவர் பழனியப்பன், விவசாய சங்க நிர்வாகிகள் சுந்தர விமல்நாதன் உள்பட ஏராளமான விவசாயிகள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 29-ம் தேதி சென்னையில் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • புதிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டாலும் அதனை சுற்றி உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் முட்புதர்களாக கிடந்தன.
    • விவசாயிகள் போன்று தினந்தோறும் தோட்டத்தை பார்வையிட்டு கீரைகள், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழகம்-ஆந்திரா எல்லையில் ஆர்.கே.பேட்டை அருகே உள்ளது பொதட்டூர்பேட்டை. மாவட்ட எல்லையின் கடைசி போலீஸ்நிலையம் இங்கு அமைந்து உள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதட்டூர் போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டாலும் அதனை சுற்றி உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் முட்புதர்களாக கிடந்தன.

    இதனை பயன் உள்ளதாக மாற்ற திட்டமிட்ட போலீசார் அந்த நிலத்தை சீரமைத்து முள்வேலி அமைத்து உள்ளனர். மேலும் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

    இந்த தோட்டத்தில் துளசி, கற்பூரவள்ளி, சிறியாநங்கை, பாகற்காய் , அருகம்புல், ஓமவல்லி, ஆடாதொடை, தூதுவளை, எலுமிச்சை, கருந்துளசி, வாழை, முருங்கை, வள்ளிக்கிழங்கு, கொய்யா, மாமரம், தென்னை மரம், முசுமுசுக்கை, கீழாநெல்லி, வெண்டைக்காய், கத்தரி போன்ற பல்வேறு வகையான மூலிகை, காய்கறி செடிகளையும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொன்னாங்கண்ணி, பசலை, முளைக்கீரை, மணத்தக்காளி, வல்லாரை போன்ற பலவகைக் கீரைகளையும் வளர்த்து வருகின்றனர். இதனால் தற்போது பொதட்டூர் பேட்டை போலீஸ்நிலையத்தை சுற்றிலும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவின் மேற்பார்வையில் போலீசார் தங்களது அன்றாட கடமைகளுடன் இந்த காய்கறி, மூலிகை தோட்டத்தையும் சிறப்பாக கவனித்து வருகிறார்கள். விவசாயிகள் போன்று தினந்தோறும் தோட்டத்தை பார்வையிட்டு கீரைகள், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

    போலீசாரின் இந்த முயற்சிக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், திருத்தணி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் ஆகியோர் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரை பாராட்டி உள்ளனர்.

    இதனால் இந்த போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்கவும், விசாரணைக்கு வருபவர்களும் தங்கள் பிரச்சினைகளை மறந்து, அந்தத் தோட்டத்தை ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். மேலும், தங்களுக்குத் தேவையான மூலிகைகளை அனுமதிபெற்று பறித்துச்செல்கின்றனர்.

    • ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
    • போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை வேலம்பட்டி நடுவீதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜூ(வயது 33) விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு வேலம்பட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில், ராஜூ அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று ஆடுகளுக்கு தழைகளை சேகரித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதுடன் ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் காயமடைந்த ராஜூ மயங்கி விழுந்தார்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அவர், தனது உறவினர் மகன் ராமன் என்பவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனடியாக ராமன் சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவை மீட்டு, காரில் ஏற்றிச்சென்று வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக காரிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த டாக்டர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் கரியகோவில் போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ராஜூவை துப்பாக்கியில் சுட்ட நபரை வனப்பகுதியில் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அய்யப்பன் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
    • பெருக வாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49) விவசாயி.

    சம்பவத்தன்று அய்யப்பன் அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை வழிமறித்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து பெருக வாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட 2-வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி, வன்கொ டுமை சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டபட்ட அய்யப்னுக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை எனவும் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்றத்துறை வக்கீல் அர்ச்சுனன் வாதாடினார்.

    • தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை
    • தக்கலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள சடையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 53), விவசாயி.

    இவரது உறவினர் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறு வன டிரைவர் சுரேஷ் கிண்டல் செய்து உள்ளார். இதனை மோகன்தாஸ் தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று மோகன் தாஸ் தோட்டத்தில் இருந்த போது, சுபாஷ் அங்கு வந்தார். அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த சுபாஷ், மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த மோகன் தாசை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்த புரம் தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகன்தாஸ் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி கீதா, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தக்கலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தலைமறைவாக உள்ள சுபாசை பிடிக்க தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய விசார ணையில் சுபாஷ், கேரளா விற்கு தப்பி சென்றிருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளனர்.

    • ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது.
    • தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

    மனு தாக்கலின் போது அவர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் பி.ஏ. பட்டதாரி, நான் ஒரு விவசாயி. ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.

    தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.17.83 கோடியும், தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    பிரிக்கப்படாத தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.

    ரூ.17 கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ஆண்டு வருமானம் 1.60 கோடி எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

    • மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
    • சாலையோர மரத்தில் மோதி மாணவர் பலியானார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் குமார் (50) விவசாயி.

    இவர் நேற்று தனது உறவினருடைய வயலில் வேலை பார்த்து ள்ளார்.

    பின்னர் அருகில் உள்ள விஜயராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் இருந்த பம்புசெட்டில் குளித்து விட்டு அங்கிருந்த கம்பி கொடிக் கம்பத்தில் துண்டை காய வைத்து விட்டு வீடு திரும்பினார்.

    இந்நிலையில் காலையில் குளிக்க அங்கு சென்றுள்ளார்.

    பின்னர் பம்புசெட்டு அருகே உள்ள கொடிகம்பத்தில் கிடந்த துண்டை எடுத்தார். அப்போது திடீரென மின்சாரம் அவரை தாக்கியது.

    இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் வயலுக்கு சென்ற குமார் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாதால் அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.

    அப்போது தான் அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜேஷ் கன்னா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டைகீழத் தெருகிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.

    இவரது மகன் ரிஷால் ( வயது 20).

    இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.

    அதே போல் இன்றும் கல்லூரிக்கு ரிஷால் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது மன்னார்குடி குருவை மொழி கிராமத்தின் அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த ரிஷால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரிஷால் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாய நிலத்திலிருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி தாலுகா நெகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (55) விவசாயி. சம்பவத்தன்று ரங்கநாதனுக்கு சொந்தமான விவசாய நிலத்திலிருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு 3 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சர்க்கரை ஆலைகளுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான அரவை பருவத்துக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1.45 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    • பலா விவசாயத்துல வெளியில இருந்து வேலை ஆட்கள் தேவையில்லை.
    • எல்லா விவசாயிகளும் பலா மரம் வளர்க்கலாம்.

    பெரும்பாலான விவசாயிகள் கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளில் சிக்கி அதில் இருந்து மீள முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர். இந்த சூழலில் வெறும் 7 ஏக்கர் பலா தோட்டத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை கொண்டு வீடு, கார், நிலம் என செழிப்பான வாழ்வை வாழும் ஒரு விவசாயி குறித்து கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த கருணாகரன் தான் அந்த வெற்றி விவசாயி. பலா பழங்கள் கொத்து கொத்தாக காயத்து இருந்த அவருடைய தோட்டத்திற்கே நேரில் சென்று அவரை சந்தித்தோம். "1988-ல இந்த தோட்டத்துல பலா கன்னு வச்சேன். மொத்தம் 7 ஏக்கர்ல 700 மரம் வச்சுருக்கேன். 4 வருசத்துல இருந்தே வருமானம் வர ஆரம்பிச்சுருச்சு. 1998-க்கு அப்பறம் ஒரு ஏக்கர்ல ஒரு லட்சம்னு 7 ஏக்கருக்கு 7 லட்சம் வருமானம் பார்க்க ஆரம்பிச்சேன்.

    பலாவுக்கு பதிலா கம்பு, கேள்வரகு, வேர்கடலை மாதிரி மற்ற பயிர்கள வச்சா இவ்வளவு வருமானம் வராது. 10 ரூபாய் செலவு பண்ணா 5 ரூபாய் தான் வரும். சுத்தி கம்பேனிங்க வந்துட்டனால எல்லாம் அங்க வேலைக்கு போயிட்றாங்க. விவசாய வேலைக்கு ஆளுங்க கிடைக்குறது ரொம்ப சிரமம்.

    ஆனா, பலா விவசாயத்துல வெளியில இருந்து வேலை ஆட்கள் தேவையில்லை. நான் ஒரே ஆளே 7 ஏக்கரையும் பாத்துக்கிறேன். காய் வெட்றதுக்கு மட்டும் ஒரு ஆள் இருந்தா போதும்." என்றார்.

    தண்ணீர் பயன்பாடு குறித்து கேட்ட போது, "இங்க தென் மேற்கு பருவ மழை ஒரு மூணு மாசமும், வட கிழக்கு பருவ மழை ஒரு மூணு மாசமும் பெய்யும். அதுனால அந்த மாசத்துல தண்ணீ பாய்ச்ச வேண்டிய தேவை இல்ல. மாசி, பங்குனி, சித்திரையில மட்டும் இரண்டு இல்ல மூண்ணு முறை தண்ணீ பாய்ச்சுவேன். பொதுவா பலா மரத்துக்கு அதிகமா தண்ணீயும் தேவை இல்ல.

    விற்பனை செய்யுறதுலயும் பெரிய சவாலாம் இல்ல. வியாபாரியே நேரடியா வந்து வாங்கிட்டு போயிருவாங்க. அப்படி இல்லனா கூட கமிஷன் மண்டிக்கு அனுப்பி வித்துறலாம். அதுனால, காய் விக்கிறதுல எந்த பிரச்சினையும் இல்ல." என கூறியவர் தனது தோட்டத்திலேயே அதிக காய் விளையும் ஒரு தாய் மரத்தை பற்றி பேச ஆரம்பித்தார்.

    "2008-ல ஒரு கின்னஸ் ரெக்கார்ட் பண்ணலாம்னு முயற்சி பண்ணேன். தோட்டக் கலை துறை அதிகாரிங்க முன்னாடியே ஒரு காய எடை போட்டு பார்த்தோம். அந்த காய் 110 கிலோ வந்துச்சு. ஆனா, கொஞ்சம் தாமதமா அப்ளை பண்ணனால ரெக்கார்ட்ல பதிய முடியல.

    இதே போல இந்த மரத்தோட தாய் மரத்துலயும் பழங்கள் பெரிசு பெரிசா வந்துச்சு. அந்த காய வாங்குறது ஆந்திரால இருக்குற நெல்லூர்ல இருந்து ஆள் வருவாங்க. அப்போவே ஒரு காய 300 ரூபாய்க்கு வாங்கிட்டு போனாங்க. அந்த சமயத்துல ஒரு ஏக்கர் நிலத்தோட விலையே 100 ரூபாய் தான்" என கூறி மலைப்பூட்டினார்.

    மேலும், தொடர்ந்த அவர் "3 ஏக்கர் தோட்டத்துல பலாவில இருந்து வந்த வருமானத்த சேமிச்சு வச்சு நிலம் வாங்குனேன். அந்த நிலத்தோட மதிப்பு இப்போ ரூ.3 கோடி வரும். அதேபோல 15 வருசத்துக்கு முன்னாடி 30 லட்சத்துல ஒரு வீடும் கட்டுனேன். அதோட மதிப்பு இப்போ ஒரு கோடி வரும். இது மட்டுமில்லாம 2009-ல ஃபோர்ட் காரும் வாங்குனேன். பலா மரத்துனால நல்லா வருமானம், நிம்மதியான வாழ்க்கை. என்னைய பார்த்து சுத்தி இருக்குற விவசாயிங்க நெறைய பேரு பலா வளர்க்குறாங்க. அதுனால, எல்லா விவசாயிகளும் பலா மரம் வளர்க்கலாம். நல்லா பராமரிச்ச ஏக்கருக்கு வருசத்துக்கு கண்டிப்பா ஒரு லட்சம் வருமானம் பார்க்கலாம்" என உறுதியாக கூறினார் சாதனை விவசாயி திரு. கருணாகரன்.

    மரம் சார்ந்த விவசாயம் குறித்து இலவச ஆலோசனைகள் பெற காவேரி கூக்குரல் இயக்கத்தை 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    ×