search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஆர்கே பன்னீர்செல்வம்"

    • சென்ற ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்பது பற்றி வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும், உணவு தந்துதவும் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கும் தேவையான திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண்மை நிதி நிலை அறிக்கை அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-2025 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது என்ற பெருமையைத் தவிர, இந்த நிதிநிலை அறிக்கையால் பயனேதும் இல்லை என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இது குறித்து எவ்விதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னை மரத்திலிருந்து 'நீரா' போன்ற பதநீர் இறக்கி விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏதும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது தென்னை விவசாயிகளிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோன்று, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும், கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றிற்கு 4,000 ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே.

    கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மண் வளமே அழியும் அளவுக்கு மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

    இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024-2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்திற்காக, சென்ற ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2,337 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 562 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான பதிலை வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் எடுத்துரைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு அரசு சார்பில் செய்யப்படாததால், அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கான இழப்பீட்டினை வழங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    சென்ற ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா அல்லது கைவிடப்பட்டு விட்டதா என்பது பற்றி வேளாண் துறை அமைச்சர் தனது பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியத்துக்காக ரூ.18 கோடி ஒதுக்கப்படும்.
    • தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    ஊட்டச்சத்து மிகுந்த சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற குறுதானியங்கள் ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால், 25 மாவட்டங்களைக் கொண்டு ஏற்கனவே இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    2023-2024-ஆம் ஆண்டு முதல் 2027-2028-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் இரண்டு மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2024-2025-ஆம் ஆண்டிலும் 65 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    மாநில அளவில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணைய் வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025-ம் ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    2023-2024-ம் ஆண்டு முதல், தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிர்ம விவசாயிக்கான "நம்மாழ்வார் விருது" வழங்கப்பட்டு வருகிறது. 2024-2025-ம் ஆண்டிலும் உயிர்ம விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியத்துக்காக ரூ.18 கோடி ஒதுக்கப்படும்.

    2024-2025-ம் ஆண்டில், பலன் தரும் பருத்தி சாகுபடித் திட்டம் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இதனால், பருத்தி உற்பத்தி தமிழ்நாட்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேல்களாக உயரும்.

    பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் அதிகம் பாதிப்படைந்த தூத்துக்குடி மாவட்டத்தில், மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்காக 14 கோடியே 55 இலட்சம் ரூபாய், 9,988 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக உடனடியாக வழங்கப்பட்டது. 2024-2025-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

    தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    2024-2025-ம் ஆண்டில் 2 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 232 கோடியே 50-லட்சம் ரூபாய் ஒன்றிய நிதியுடன், 54 கோடியே 73 லட்சம் ரூபாய் மாநில நிதியை ஒருங்கிணைத்து 773 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும.

    தோட்டக்கலைப் பயிர்களில் எந்திரங்களின் பயன்பாடு மிகவும் இன்றியமையாததாக உள்ள நிலையில் நிலம் சீர் செய்தல் முதல் அறுவடை பின்செய் மேலாண்மை வரையில் பயன்படுத்தப்படும் கருவிள், எந்திரங்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட, கண்காட்சி ன்று நடத்தப்படும். இதனால் விவசாயிகள், தோட்டக்கலை தொழில் முனைவோர்கள், அலுவலர்கள் ஆகியோர் பயன் அடைவர். இக்கண்காட்சி 10 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில நிதியில் நடத்தப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • கரும்புப் பயிரில் உயர் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து எக்டருக்கு 111 மெட்ரிக் டன் உற்பத்தித்திறனுடன் தமிழ் நாடு, தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
    • நடப்பாண்டில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளுக்கிடையிலும், 114 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அப்போது அவர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் 7,705 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை, 23,237 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும், 3,587 ஏக்கர் பரப்பளவில் பழ மரக்கன்றுகள், மரங்கள் முதலியவையும் நடப்பட்டு, தரிசு நிலங்கள் நிரந்தர சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

    2020-2021-ம் ஆண்டில் 89 லட்சத்து ஆறாயிரம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்றபயிர் பரப்பு, 2022-2023-ஆம் ஆண்டில் 95 லட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

    இயற்கை இடர்ப்பாடுகளினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட, 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 4,436 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் விதைப்பு பொய்த்தல் இனத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 2022-2023, 2023-2024-ம் ஆண்டுகளில் பயிர் இழப்பு ஏற்பட்ட அதே ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    தமிழ்நாட்டில், கடந்த 2022-2023-ம் ஆண்டில், தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, மாண்டஸ் புயல், வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, பருவம் தவறிப் பெய்த மழை, வறட்சி, கடந்த மார்ச் 2023-ல் பெய்த ஆலங்கட்டி மழை ஆகிய இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்கு, 380 கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

    குறுவைப் (காரீப்) பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்பு, மிச்சாங் புயல், மக்காச்சோளப்பயிரில் ஏற்பட்ட மகசூல் இழப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம் விவசாயிகளுக்கு 118 கோடியே 77 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கோடை மழை, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழை குறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, தென் மாவட்டங்களில் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

    2022-2023-ம் ஆண்டு 35 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கராக இருபோகச் சாகுபடிப் பரப்பு உயர்ந்துள்ளது. கரும்புப் பயிரில் உயர் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து எக்டருக்கு 111 மெட்ரிக் டன் உற்பத்தித்திறனுடன் தமிழ் நாடு, தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.

    நடப்பாண்டில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளுக்கிடையிலும், 114 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2023- 2024-ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியினை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ. நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்களை தூர்வார ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.
    • வேளாண் துறைக்கு மட்டும் மொத்தம் ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

    * காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ. நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்களை தூர்வார ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.

    * பசுந்தீவன ஊடுபயிர் செய்து பால் உற்பத்தியை உயர்த்திட 5,000 ஏக்கர் பரப்பிற்கு ரூ.2 கோடி மானியம்.

    * மீன் தீவன ஆலை போன்ற திட்டங்களுக்காக ரூ.4.60 கோடி மானியம்.

    * பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு.

    * தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு.

    * 7 மாவட்டங்களில் வறட்சித் தணிப்பிற்கான சிறப்பு உதவித்திட்டத்திற்கு ரூ.110.59 கோடி நிதி ஒதுக்கீடு.

    * பனை சாகுபடியினை ஊக்குவிக்க, 10 லட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத்துறை மூலம் நடவு செய்யப்படும்.

    * 200 பனைத்தொழிலாளர்களுக்கு பயிற்சி, உரிய கருவிகள் வழங்க ரூ.1.14 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

    * வேளாண் துறைக்கு மட்டும் மொத்தம் ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • இணைய வழி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
    • 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகளை நடத்த 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * 100 விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * இணைய வழி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    * வேளாண் வணிக மேம்பாட்டிற்காக 770 தீவிர விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

    * பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு

    * பண்ணை வழி வர்த்தகத்தை ஊக்கப்படுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு.

    * 100 சேமிப்பு கிடங்குகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

    * புத்தாக்க நிறுவனங்களை ஊக்கப்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

    * 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகளை நடத்த 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

    * விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை இனி விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை என பெயர் மாற்றம்.

    * கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு.

    * பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு.

    * ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
    • 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரியில் 2 கோடி மதிப்பீட்டில் சூரியத்தோட்டம் அமைக்கப்படும்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

    தென்காசி மாவட்டத்தில 1 கோடி மதிப்பீட்டில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்.

    உதகையில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்ய ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு.

    முந்திரி சாகுபடிப் பரப்பை அதிகரிக்க ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.

    மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    மிளகாய்ப் பயிர் ஊக்குவிப்புத் திட்டம் ரூ.3.67 கோடி நிதி ஒதுக்கீடு.

    மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு.

    10 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நேரடி விற்பனை மையங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி.

    26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு.

    பவர் டில்லர்களின் மானியத் தொகை ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

    207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.32.9 கோடி நிதி ஒதுக்கீடு.

    தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலி உருவாக்க ரூ.50 லட்சம் நிதி.

    புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.28.82 கோடி நிதி ஒதுக்கீடு.

    10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    மழை நீர் சேகரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    வேளாண் இயந்திரங்களை பரவலாக்குவதற்கான தொழில்நுட்பக் கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    10 மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடமாடும் உலர்த்திகள் வாங்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு.

    நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் குறித்து செயல்விளக்கம் அளிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

    5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்கள், 8 மஞ்சள் வேகவைக்கும் இயந்திரங்கள் அமைக்க ரூ.2.12 கோடி நிதி

    பெரம்பலூரில் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும்.

    100 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளை புதுப்பிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.

    10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
    • விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * உற்பத்தி திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.

    * நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பரிசளிக்க ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் விவசாயிகளுக்கு பரிசு.

    * மாற்றுப்பயிர் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட ரூ.12 கோடி மானியம்.

    * 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 2,482 ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள் உருவாக்கிட ரூ.2.48 கோடி நிதி ஒதுக்கீடு.

    * பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

    * விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீடு.

    * விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு.

    * புதிய கரும்பு ரக விதைகளை மானியத்தில் வழங்கிட ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு.

    * சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் உயர்த்த ரூ.12.40 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.

    * ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு.

    * கன்னியாகுமரியில் 2 கோடி மதிப்பீட்டில் முல்லைப்பூங்கா அமைக்கப்படும்.

    * தஞ்சாவூரில் 2 கோடி மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • 100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
    • சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * சீவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.

    * உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * விவசாயிகள் கூடுதல் லாபம் பெற 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

    * பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 2482 ஊராட்சிகளை அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த ரூ.200 கோடி நிதி.

    * பயறு பெருக்குத் திட்டம், 4.75 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்திட ரூ.40.27 கோடி நிதி ஒதுக்கீடு.

    * துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

    * எண்ணெய் வித்துப்பயிர்களின் சாகுபடியை 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்கம் செய்திட, ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

    * எள் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் 25,000 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

    * சூரியகாந்தி சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டம் 12,500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

    * வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி பரப்பு விரிவாக்கத்திட்டத்திற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.

    * நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில் 50,000 ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

    * ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15,280 கிராமங்களில் அறிமுகம்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
    • ஆடாதொடா, நொச்சி தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    * கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    * தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழை பயிர் சேதத்திற்கு விரைவில் 208.20 கோடி நிதி வழங்கப்படும்.

    * 2023-24ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    * முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" 2024-25ம் ஆண்டில் இந்த திட்டம் 22 இனங்களுடன், 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

    * 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண் புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்

    * நிரந்தர மண்புழு உரத்தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம்.

    * மண்வளம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழ் மண்வளம் இணைய தளம் வாயிலாக உரப்பரிந்துரை வழங்கப்படும்.

    * 37,500 ஏக்கர் களர், அமில நிலங்களைச் சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள், 2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

    * ஆடாதொடா, நொச்சி தாவர வகைகளை நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தியை மேற்கொள்ள ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    • கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சர்க்கரை ஆலைகளுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான அரவை பருவத்துக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1.45 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    • மகளிர் உரிமைச் சட்டம் வருமா? வராதா? என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்பொழுது தொடங்கப்பட உள்ளது.
    • கலைஞரின் மகன் முதலமைச்சராகி மகளிர் உரிமைத் திட்டத்தினை வழங்க உள்ளார்.

    தருமபுரி:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாமினை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வருகிற 24-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்று வரும் விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழா நடைபெறும் மேடை, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும் அரசு பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதன் முறையாக தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாமை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    மகளிர் உரிமைச் சட்டம் வருமா? வராதா? என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்பொழுது தொடங்கப்பட உள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழுவை முதன்முதலாக தருமபுரி மாவட்டத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். தருமபுரியில் விதைத்த விதை தமிழ்நாடு முழுவதும் தற்போது ஆலமரம் போல் வளர்ந்து விருட்சமாகி உள்ளது.

    தற்பொழுது கலைஞரின் மகன் முதலமைச்சராகி மகளிர் உரிமைத் திட்டத்தினை வழங்க உள்ளார். அந்த விண்ணப்ப படிவங்கள் வழங்கி, பதிவேற்றம் செய்யும் முகாமினை தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலாக வருகிற 24-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில்தருமபுரிமாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    ×