search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தருமபுரியில் மகளிர் உரிமை தொகை திட்ட முகாம்- வேளாண் துறை அமைச்சர் ஆய்வு
    X

    விழா மேடையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் ஆய்வு செய்து பார்வையிட்டபோது எடுத்த படம்

    தருமபுரியில் மகளிர் உரிமை தொகை திட்ட முகாம்- வேளாண் துறை அமைச்சர் ஆய்வு

    • மகளிர் உரிமைச் சட்டம் வருமா? வராதா? என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்பொழுது தொடங்கப்பட உள்ளது.
    • கலைஞரின் மகன் முதலமைச்சராகி மகளிர் உரிமைத் திட்டத்தினை வழங்க உள்ளார்.

    தருமபுரி:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாமினை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வருகிற 24-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்று வரும் விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழா நடைபெறும் மேடை, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும் அரசு பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதன் முறையாக தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாமை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    மகளிர் உரிமைச் சட்டம் வருமா? வராதா? என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்பொழுது தொடங்கப்பட உள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழுவை முதன்முதலாக தருமபுரி மாவட்டத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். தருமபுரியில் விதைத்த விதை தமிழ்நாடு முழுவதும் தற்போது ஆலமரம் போல் வளர்ந்து விருட்சமாகி உள்ளது.

    தற்பொழுது கலைஞரின் மகன் முதலமைச்சராகி மகளிர் உரிமைத் திட்டத்தினை வழங்க உள்ளார். அந்த விண்ணப்ப படிவங்கள் வழங்கி, பதிவேற்றம் செய்யும் முகாமினை தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலாக வருகிற 24-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில்தருமபுரிமாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×