என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் பட்ஜெட்"

    • புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும்.
    • பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ரூ.495 கோடியில் 3.30 லட்சம் மெட்ரிக் கடன் கொள்ளளவு கொண்ட 130 நவீன சேமிப்பு தளங்கள்.

    * ரூ.331 கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    * 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்பட உள்ளன.

    * பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    * 5 ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம். பனையில் குட்டை ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி நடைபெறுகிறது.

    * விவசாயிகளுக்காக 24 சேவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட உழவர் செயலியை இதுவரை 20 லட்சம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    * வெள்ளக்காலங்களில் நெல்மணிகள் வீணாவதை தடுக்க ரூ.495 கோடியில் 130 நவீன சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளது.

    * புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும்.

    * பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    * பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * 5 ஆண்டுகளில் அரசு மீன் பண்ணைகள் மூலம் 48 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    * அலைகள் திட்டம் மூலம் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நுண் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    * விபத்தில் உயிரிழக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கான மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு பண்ணை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    * தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 ஆண்டு காலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

    சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை பேரிடருக்காக ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 25.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.

    * 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

    * புதிதாக 2 லட்சம் விவசாயிகளின் நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

    * நுண்ணீர் பாசனத்திட்டத்தை பயன்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

    * 5 ஆண்டுகளில் குளிர் பதனிடும் கிடங்குகளுக்காக 27 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

    * 5 ஆண்டு காலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    * இ-வாடகை செயலி மூலம் 3,816 வேளாண் இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டது.

    * கடந்த 5 ஆண்டுகளில் 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    * உழவர் சந்தைக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் அளவு தினமும் அதிகரித்து வருகிறது.

    * உழவர் சந்தைகளில் சுமார் 4 லட்சம் மக்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

    * புவிசார் குறியீட்டுக்காக 41 விலைப்பொருட்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

    * ஒன்பது பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

    * கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.

    * நாகை, சிவகங்கை, கரூரில் புதிதாக அரசு வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

    * 30 ஆயிரம் நபர்களுக்கு தேனீ வளர்ப்பு மதிப்பு கூட்டு இயந்திரங்களை இயக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    * 150 விவசாயிகள் அயல் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    * இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களை உருவாக்க தனியாரிடமிருந்து 176 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

    * பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3002 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1320 வேளாண் இயந்திர வாடகை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஐந்தாண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு அரசின் வேளாண் காடுகள் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

    * 496 பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    * 4150 சூரிய சக்தி பம்பு செட்கள் வாங்க 83 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    * 1320 வேளாண் இயந்திர வாடகை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    * 10 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    * மிளகாய், ஏலக்காய், சாதிக்காய் சாகுபடி 22,950 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    * 8400 ஏக்கரில் முந்திரி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ரூ.12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    * தக்காளி, வெண்டை, கத்திரிக்காய் சாகுபடி பரப்பளவை 1 லட்சம் ஏக்கரில் விரிவாக்கம் செய்ய 1.68 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    * 5 ஆயிரம் புதிய பம்பு செட்கள் 7 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ளன.

    * 2021-22ம் ஆண்டு முதல் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * ஐந்தாண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    * கடந்த 5 ஆண்டுகளில் 80 கோடி மதிப்பிலான பனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    * 650 மகளிர்க்கு பனை ஓலை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    * பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியின் மூலம் 1.45 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    * 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    * 2025-26ம் ஆண்டில் குறுவை பருவத்தில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    * சூரிய சக்தி பம்பு செட்டு போன்ற உயர்மதிப்பு திட்டம்- ஆதி திராவிடர் பழங்குடியினர் பிரிவு சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    * ரூ.1600 கோடி மதிப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • 2025-26-ம் ஆண்டில் 12.45 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 58 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.

    * உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    * உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    * கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண்மை குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

    * 10,588 சிறு பாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * நெல் ஜெயராமன் திட்டத்தில் 900 மெ.டன் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    * மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 21.35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

    * 70 ஆயிரம் விவசாயிகளுக்கு நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    * 482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

    * மரங்களை வெட்டி எடுத்துச்செல்லும் விதிகளை தளர்த்தும் வகையில் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.

    * 2025-26-ம் ஆண்டில் 12.45 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    * கடந்த ஆண்டை விட 3 லட்சம் ஏக்கர் கூடுதலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    * வேளாண் துறையில் இளைஞர்களை தொழில் முனைவோராக்க ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன.

    * உரம் விதைகளை வழங்க ஆயிரம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    * எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * பாரம்பரிய உணவுகளை காக்க 20.80 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    * கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு.

    * விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறையை சரி செய்ய 77,000-க்கும் மேற்பட்ட வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு தரப்பட்டுள்ளது.

    * பழம், காய்கறி பரப்பு சாகுபடியை விரிவாக்கம் செய்ய அரசு ஊக்குவிக்கிறது.

    * கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கம்பு சாகுபடி பரப்பளவு 1.33 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    * தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.175 கோடி நிதி பெற்றுள்ளனர்.

    * துவரை சாகுபடி விரிவாக்க இயக்கம் மூலம் ரூ.66 கோடியில் 2.55 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்.
    • பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,

    வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,

    முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,

    புதிய தொழில்நுட்பங்கள்,

    சிறு குறு விவசாயிகள் நலன்,

    மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,

    டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,

    வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி

    எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 



    • இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.
    • திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.

    கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக?

    பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?

    நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார். 



    • தமிழகத்தில் கரும்பு மற்றும் நெல் உற்பத்தி குறைந்து விட்டது.
    • இருபோக சாகுபடி பரப்பை உயர்த்துவதற்கு தி.மு.க. அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

    2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

    * ஒன்றே முக்கால் மணி நேரம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது தான் சாதனையே தவிர, பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

    * விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்பது போலி தோற்றம் என நிரூபணம் ஆகி உள்ளது.

    * வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் இல்லை, ஏமாற்றம் மட்டுமே.

    * பல துறைகளை ஒன்றாக இணைத்து அவியல் கூட்டு போல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    * தவறு செய்வதற்கு வசதியான திட்டங்களை தவிர வேறு எந்த திட்டமும் இல்லை.

    * பட்ஜெட்டில் கூறியபடி சாகுபடி பரப்பு எதுவும் அதிகரிக்கவில்லை, குறைந்துதான் போய் உள்ளது. சாகுபடி பரப்பு 1.2 சதவீதம் குறைந்துள்ளது, அதிகரிக்கவில்லை.

    * இருபோக சாகுபடி பரப்பை உயர்த்துவதற்கு தி.மு.க. அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

    * தமிழகத்தில் கரும்பு மற்றும் நெல் உற்பத்தி குறைந்து விட்டது.

    * ஜெயலலிதா ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் வேளாண் பட்ஜெட்டில் உள்ளதே தவிர புதிய திட்டங்கள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயற்கை மேலாண்மை பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
    • நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:

    இயற்கை மேலாண்மை பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு.

    உழவர்களுக்காக இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக ரூ.8,186 கோடி ஒதுக்கீடு

    வேளாண் துறைக்கு இந்த ஆண்டு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு

    பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.10,346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன.

    நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை சுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்களில் தாக்கல் செய்தார்.

    • பருத்தி சாகுபடி திட்டம் 2021-2022-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 2025-2026-ம் ஆண்டில் 35 லட்சம் ஏக்கரிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், ரூ.841 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:

    தமிழ்நாட்டில் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளதால் பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க பருத்தி சாகுபடி திட்டம் 2021-2022-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-2026-ம் ஆண்டிலும் "பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்" ரூ.12 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    இயற்கைச் சீற்றங்களால் விளையும் பயிர் சேதங்களினால் ஏற்படும் வருவாய் இழப்புகளில் இருந்து பாதுகாத்து, உழவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2025-2026-ம் ஆண்டில் 35 லட்சம் ஏக்கரிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், ரூ.841 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல் ஈரப்பதத்தை அளவிட 2500 டிஜிட்டல் கருவிகள் வழங்கப்படும்.
    • மீனவர் மற்றும் மீன் வளர்ப்போருக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.

    2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:

    * சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகம் அமைக்க ரூ.6.16 கோடி நிதி ஒதுக்கீடு.

    * வரும் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,427 கோடி நிதி ஒதுக்கீடு.

    * பாசனத்திற்கு கடைமடை வரை நீர் செல்ல ரூ.120 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    * 2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரின் டன் கொண்ட நெல் சேமிப்பு மையம் அமைக்கப்படும்.

    * நெல் ஈரப்பதத்தை அளவிட 2500 டிஜிட்டல் கருவிகள் வழங்கப்படும்.

    * மண்புழு உரம் தயாரிக்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    * நெல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு ரூ.525 கோடி நிதி ஒதுக்கீடு.

    * உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உணவு மானியத்திற்கு ரூ.12,500 கோடி நிதி ஒதுக்கீடு.

    * கால்நடை இனப்பெருக்க திறனை மேம்படுத்த ரூ.5.25 கோடி ஒதுக்கீடு.

    * 5 ஆயிரம் பேருக்கு சிறிய அளவிலான பால் பண்ணைகள் அமைக்க கடன் வழங்கப்படும்.

    * மீன் குஞ்சு உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    * மீனவர் மற்றும் மீன் வளர்ப்போருக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும்.
    • வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.

    2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:

    * கூட்டுறவு பயிர் கடனுக்கு ரூ.17000 கோடி ஒதுக்கீடு

    * தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர ரூ.8 கோடி ஒதுக்கீடு

    * இணைய வர்த்தகம் மூலம் உழவர் சந்தை காய்கறிகள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற வேளாண் பட்ஜெட்டில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.

    * புவிசார் குறியீட்டுடன் கூடிய பொருட்களின் சந்தை தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.20 கோடியில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.

    * வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.

    * 500 பேரை தேர்ந்தெடுத்து ரூ.50 லட்சம் செலவில் ஏற்றுமதியை ஊக்குவிக்க பயிற்சி அளிக்கப்படும்.

    * ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும்.

    * புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி ஒதுக்கப்படும்.

    * உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திறந்தவெளி பாசன கிணறுகளுக்கு சுற்றுசுவர் கட்ட மானியம் அளிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.
    • 300 கிராமப்புற இளைஞர்களுக்கு இயந்திரங்களை கையாள பயிற்சி வழங்கப்படும்.

    2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:

    * சி, டி பிரிவு வாய்கால்களை தூர்வார ரூ.13.80 கோடி நிதி ஒதுக்கீடு.

    * சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    * சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * மின் மோட்டார் பம்பு செட்டுகள் ரூ.15000 வரை மானியமாக வழங்கப்படும்.

    * நீர் பற்றாக்குறையை போக்க ரூ.2.75 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    * வேளாண் பணிகளில் இயந்திரமயமாக்கலை கொண்டு வர உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும். இதற்காக ரூ.3.55 கோடி ஒதுக்கீடு.

    * காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு, வடிநிலப்பகுதிகளிலும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளிலும் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * திறந்தவெளி பாசன கிணறுகளுக்கு சுற்றுசுவர் கட்ட மானியம் அளிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 300 கிராமபுற இளைஞர்களுக்கு இயந்திரங்களை கையாள பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    * வேளாண் பொருட்களை பதப்படுத்த, மதிப்பு கூட்டுதலுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×