search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே"

    • இரணியல்-ஆளூர் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ராஜீவ் பிணமாக கிடந்தார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரணியல் :

    வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (வயது 54). இவர் கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வந்தார். தற்பொழுது கேரளாவில் இருந்து ஊருக்கு வந்த ராஜீவ் மீண்டும் கேரளாவிற்கு செல்வதற்கு தயாரானார்.

    இதையடுத்து நேற்று மாலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலை இரணியல்-ஆளூர் ெரயி ல்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ராஜீவ் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இட த்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராஜீவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி ப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜீவ் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜீவ் தற்கொலைக்கான காரணம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • கஞ்சா, போதை புகையிலை பொருட்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை கடத்தியாக 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • போலி ஏஜெண்டுகளை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து நடப்பாண்டு ஆகஸ்டு வரையிலான ஓராண்டு காலத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் , கரூர் உள்பட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையங்களில் விதி மீறிய குற்ற செயல்களுக்காக 5,317 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர்களிடம் இருந்து விதி மீறலுக்காக ரூ. 41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில்வே பொருட்களை திருடியதாக 70 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 4.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.

    சேலம் கோட்டம் வழியாக சென்ற ரெயில்களில் கஞ்சா, போதை புகையிலை பொருட்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை கடத்தியாக 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் முறைகேடாக டிக்கெட் புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் போலி ஏஜெண்டுகளை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் முறைகேடு டிக்கெட் புக்கிங் தொடர்பாக வந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதில் 68 போலி டிக்கெட் ஏஜெண்டுகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26.51 லட்சம் மதிப்புள்ள ரெயில் டிக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

    போலியாக பல ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகளை வைத்து கொண்டு பல்வேறு பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்றதாக ஓராண்டில் இந்த 68 பேரும் கைதாகி உள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

    • தெற்கு ெரயில்வே தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் பொறுப்பேற்றார்.
    • பல்வேறு பயிற்சிகளை பெற்றுள்ளார்.

    மதுரை

    தெற்கு ெரயில்வே முதன்மை தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1989-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரியான ஸ்ரீகுமார் மெட்ராஸ் ஐ.ஐ.டி, காரக்பூரில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தெற்கு ெரயில்வே மற்றும் தென்மேற்கு ெரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.

    முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளராக சேர்வதற்கு முன்பு, பிலாஸ்பூ ரில் உள்ள தென்கிழக்கு மத்திய ெரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக இருந்தார். அதற்கு முன், தெற்கு ெரயில்வேயின் தலைமை போக்குவரத்து திட்ட மேலாளராகவும், தெற்கு ெரயில்வேயின் தலைமை சரக்கு போக்குவரத்து மேலாளராகவும், தென் மண்டலத்தின் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் தலைமை பொது மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

    ஜெர்மனியின் ஹாம்பர்க் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து, பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமு கத்தில் சரக்கு போக்குவரத்து குறித்த பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • நாகர்கோவில் ரெயில் நிலையம் அதிக வருவாய் கிடைக்கும் ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ரெயில் நிலையம் அதிக வருவாய் கிடைக்கும் ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், கோவை, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருவதால் கூட்டம் எப்பொழுதும் அதிகமாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வேலைக்கு செல்பவர்கள் ரெயில்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக உள்ள ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்லும்.

    இந்த ரெயில் நிலையத்தில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் பயணம் செய்து வருகி றார்கள். ஆனால் ஆரல்வா ய்மொழி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    பிளாட்பாரங்களில் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். முட்பு தருக்குள் விஷ ஜந்துக்கள் இருந்தால் கூட தெரியாத அளவிற்கு வளர்ந்து காணப்படுகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக ஆரல்வாய்மொழி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ரெயில் பயணிகளையும் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்க மாகவும் அதிக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவ னந்தபுரத்திற்கு காலை நேரங்களில் பாசஞ்சர் ரெயிலும் செல்கிறது. இந்த ரெயில்களை வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மார்க்கமாக உள்ள ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுவதாக ரெயில் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இரணியல், பள்ளியாடி, குழித்துறை ரெயில் நிலை யத்தில் அதிக அளவு முட்பு தர்கள் உள்ளது. அதை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பாதுகாப்பு பிரிவில் 1.70 லட்சம் இடங்கள் காலியாக உள்ளது.
    • ரெயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே மந்திரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி :

    மத்திய அரசின் ரெயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரெயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதில் அனுப்பியுள்ள ரெயில்வே அமைச்சகம், ரெயில்வே துறையில் 2.74 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளது. இதில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளில் மட்டுமே 1.70 லட்சத்துக்கு அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறியுள்ளது.

    இது தொடர்பாக ரெயில்வே அனுப்பியுள்ள பதிலில், '2023 ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி இந்திய ரெயில்வேயில் குரூப் சி (நிலை-1 உள்பட) பிரிவில் 2,74,580 பணியிடங்கள் காலியாக உள்ளன' என்று கூறியுள்ளது.2023 ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி ரெயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் குரூப் சி (நிலை-1 உள்பட) பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 9,82,037 ஆகும் என கூறியுள்ள ரெயில்வே அமைச்சகம், இதில் 8,04,113 ஊழியர்கள் பணியில் உள்ளதாகவும், 1,77,924 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

    முன்னதாக ரெயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • விஷ்ணு நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
    • மதுபோதையில் யாரேனும் அங்கு நுழைந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை-நாகர்கோவில் ரெயில்வே வழித்தடத்தில் நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ரெயில்வே கேட் உள்ளது.

    நெடுங்குளம், தாழை குளம், உண்ணங்குளம், அம்பலம், மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர்.

    இந்த ரெயில்வே கேட்டில் கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்பவர் கீப்பராக பணியாற்றி வருகிறார். நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் இந்த வழியாக செல்வதால் இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதும், ரெயில்கள் சென்ற பிறகு திறக்கப்படுவதும் வழக்கம்.

    இந்நிலையில் இன்று அதிகாலை விஷ்ணு பணியில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி கேட் கீப்பர் இருந்த அறைக்குள் புகுந்துள்ளனர். அப்போது விஷ்ணுவை அவதூறாக பேசி தாக்க முயன்றதால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனையடுத்து மர்ம நபர்கள் அந்த அறையில் இருந்த 2 தொலைபேசிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கையில் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை அந்த அறையில் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக தீ பற்றாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனே அங்கு விரைந்த ரெயில்வே போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்களை கவிழ்ப்பதற்காக இந்த செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபோதையில் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து ரெயில்வே கேட் கீப்பர் அறைக்குள் தெரியாமல் நுழைந்து விட்டேன். என் மீது வழக்கு போட்டு விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் மதுபோதையில் யாரேனும் அங்கு நுழைந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்த வாலிபரை பிடிப்பதற்காக போலீசார் சாத்தான்குளம் விரைந்து உள்ளனர்.

    • நாடு முழுவதும் ரெயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
    • ரெயில்கள் செல்லும் போது தண்டவாளம் உள்ளிழுத்து அசைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

    திருப்பூர் :

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல்திருப்பூர் - ஊத்துக்குளி ரெயில் வழித்தடத்தில், தண்டவாளங்களை தாங்கி பிடிக்கும், கான்கிரீட் சிலாப்புகளின் கீழ் ஜல்லிக்கற்கள் நிரப்பும் பணி நேற்று துவங்கியது.அதிநவீன பிளஸ்சர் எந்திரம் தண்டவாளங்களை அலாக்காக தூக்கி சிலாப் கற்களை தாங்கி பிடிக்க, எந்திரங்கள் சிலாப் கற்களுக்கு கீழ் ஜல்லிகளை நிரப்பின. ரெயில் தண்டவாளத்தில் சிலாப் கற்களின் கீழ் நிரப்பப்படும் ஜல்லிக்கற்கள் தொடர்ந்து இயங்கும் ரெயில்கள் அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட நாட்களில் உடைந்து பொடியாகி விடும்.

    ரெயில்கள் செல்லும் போது தண்டவாளம் உள்ளிழுத்து அசைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பை உறுதி செய்ய புதியதாக பெரிய ஜல்லிகற்கள் சிலாப் கற்களுக்கு கீழ் நிரப்பப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரெயிலில் பயணியின் உடைமை திருட்டு போனால் ரெயில்வே பொறுப்பு ஆகாது.
    • அது ரெயில்வேயின் சேவை குறைபாடும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் போலா என்ற தொழில் அதிபர். இவர் காசிவிஸ்வநாத் ரெயிலில் 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று டெல்லிக்கு பயணம் செய்தார்.

    ரெயில் பயணத்தின்போது அவரது இடுப்பு பெல்ட்டின் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மறுநாள் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். மேலும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் ஒரு வழக்கு தொடுத்தார்.

    அந்த வழக்கில் அவர், தனது ரெயில் பயணத்தின்போது இடுப்பு பெல்ட் ரூ.1 லட்சம் பணத்துடன் திருட்டு போய்விட்டதால் அந்த இழப்பை ரெயில்வே ஈடுசெய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

    வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அவருக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரெயில்வே மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் விக்ரம்நாத், அசனுதீன் அமானுல்லா ஆகியோர் விசாரித்தனர்.

    விசாரணை முடிவில், சுரேந்தர் போலாவுக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

    அந்தத் தீர்ப்பில், ரெயில் பயணத்தின்போது, தனது உடைமையை பயணி பாதுகாத்துக் கொள்ள முடியாமல் திருட்டு போனால், அதற்கு ரெயில்வே பொறுப்பு ஆகாது. பயணியர் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவில்லை எனில், அதற்கு ரெயில்வே நிர்வாகம் எப்படி பொறுப்பாகும்? ரெயில் பயணத்தில் திருட்டு போனால் அது ரெயில்வேயின் சேவை குறைபாடும் இல்லை என தெரிவித்துள்ளது.

    • 2020-ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.
    • மூத்த குடிமக்கள் பயணம் மூலம் கிடைக்கும் வருவாய் சீராக உயர்ந்து வருகிறது.

    புதுடெல்லி :

    60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரெயில்களில் 40 சதவீத கட்டண தள்ளுபடியும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு 50 சதவீத கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட்டு வந்தது.

    ரெயில்களில் பல்வேறு பிரிவினருக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டண சலுகைகளில் மூத்த குடிமக்களுக்கான சலுகை மட்டும் 80 சதவீத இடத்தை பிடித்தது.

    இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி, மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. ரெயில் சேவை முழுமையாக சீரடைந்த போதிலும், அந்த சலுகை இன்னும் வழங்கப்படவில்லை.

    மீண்டும் கட்டண சலுகை வழங்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில், மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள் பயணத்தால் கிடைத்த வருவாய் குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

    அதற்கு ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. ரெயில்வே கூறியிருப்பதாவது:-

    மூத்த குடிமக்கள் பயணம் மூலம் கிடைக்கும் வருவாய் சீராக உயர்ந்து வருகிறது. 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை 7 கோடியே 31 லட்சம் மூத்த குடிமக்கள், ரெயிலில் பயணம் செய்தனர்.

    அவர்கள் மூலம் ரூ.3 ஆயிரத்து 464 கோடி வருவாய் கிடைத்தது. கட்டண சலுகையை அளித்திருந்தால், ரூ.1,500 கோடி குறைவாகத்தான் கிடைத்திருக்கும். சலுகையை ரத்து செய்ததன் மூலம், ரூ.1,500 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது.

    அதுபோல், 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை ரெயில்களில் பயணித்த மூத்த குடிமக்கள் மூலம் ரூ.5 ஆயிரத்து 62 கோடி வருவாய் கிடைத்தது.

    இதில், கட்டண சலுகையை ரத்து செய்ததால் கிடைத்த ரூ.2 ஆயிரத்து 242 கோடி கூடுதல் வருவாயும் அடங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்புவனம் அருகே பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ெரயில்வே சுரங்கபாதை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை பகுதிக்கு செல்ல மதுரை-ராமேசுவ ரம் நான்கு வழிசாலையில் ராமேசுவரம் செல்லும் தண்டவாளத்தை கடக்க ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்றி விட்டு 2 ஆண்டுகள் முன்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.

    இது அமைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுரங்க பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் அதை பயன்படுத்த முடியவில்லை.

    மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடைகளையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்க பாதை அமைக்கும் போதே மழைநீர் வராத அளவிற்கு வடிகால் வசதி செய்யவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க சுரங்க பாதை மீது மேற்கூரை ஏதும் அமைக்காததால் இன்று வரை கட்டி முடிக்கப் பட்டு மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.

    எனவே உடனடியாக ெரயில்வே நிர்வாகம் சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    • இனி மாற்றுத்திறனாளிகளின் ரெயில் பயணம் சுகமாகும், எளிதாகும்.

    புதுடெல்லி :

    எல்லோரும் தொலைதூர பயணத்துக்கு ரெயில்களைத்தான் விரும்புகின்றனர். மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு நடு படுக்கை (மிடில் பெர்த்) அல்லது மேல் படுக்கை (அப்பர் பெர்த்) ஒதுக்கப்படுகிறபோது அவர்கள் அவற்றைப் பயன்படுத்த சிரமப்படுகின்றனர்.

    இனி அந்த பிரச்சினை இல்லை. இனி மாற்றுத்திறனாளிகளின் ரெயில் பயணம் சுகமாகும், எளிதாகும்.

    மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் மாற்றத்திறனாளிகளுக்கு கீழ்படுக்கைகளை (லோயர் பெர்த்) ஒதுக்க முன்னுரிமை வழங்க ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுடன் செல்கிற உதவியாளர்களுக்கு நடு படுக்கைகள் (மிடில் பெர்த்) ஒதுக்கப்படும்.

    இதுதொடர்பாக ரெயில்வே மண்டல அலுவலகங்களுக்கு ரெயில்வே வாரியம் உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளது.

    அந்த உத்தரவில், "மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் சிலிப்பர் கிளாஸ்சில் (எஸ்-பெட்டி) 2 கீழ் படுக்கை மற்றும் 2 நடு படுக்கை ஒதுக்கப்பட வேண்டும். மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கை, ஒரு நடுபடுக்கையும், மூன்றடுக்கு எகனாமி ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கையும், ஒரு நடு படுக்கையும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் பயணங்களில் கட்டண சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.

    ஈரோடு:

    கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை உடனடியாக கைவிட வேண்டும். நாடு முழுவதும் விரைவு ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ராமாயண யாத்திரை என்ற பெயரில் டெல்லி-நேபால் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி-க்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும். பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரெயில்கள் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.

    உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஈரோடு கிளை சார்பில் இன்று கறுப்பு தினமாக கடைபிடித்து ஈரோடு ரெயில்வே பணிமனையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வினோத்குமார், செயலாளர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிர்வாகிகள் முனிச்சந்த் மீனா, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×