search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே"

    • ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை?
    • இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது

    மோடியின் ஆட்சியில் ரயில்வேதுறை சுய விளம்பரத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. மோடியின் 3டி செல்ஃபி பாயின்ட்கள் மற்றும் வந்தே பாரத் நிகழ்வின் பச்சைக் கொடிகளை காட்டி வேண்டுமென்றே ரெயில்வே துறையை சீரழித்துள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ரயில்வே துறை பற்றிய 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    1. ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை? இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் இடஒதுக்கீடு பெறக்கூடிய SC, ST, OBC, EWS மக்களுக்கு பாஜக எதிரானதா?

    2. 2013-14 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரயில் பயணத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பயணியின் சராசரி விலை 0.32 பைசாவில் இருந்து 2023ல் 0.66 பைசாவாக இருமடங்காக உயர்ந்தது ஏன் ?

    3. 2017 மற்றும் 2021 க்கு இடையில் 1,00,000 க்கும் மேற்பட்ட ரயில் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 300 பேரின் விலைமதிப்பற்ற உயிரைப் பறித்த கொடிய ஒடிசா ரெயில் விபத்து (2023) இந்த பட்டியலில் இல்லை. ரெயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் தடுக்கக்கூடிய எதிர்ப்பு தொழில்நுட்பம் ரெயில்வே நெட்வொர்க்கில் 2.13% மட்டுமே உள்ளது என்பது உண்மையல்லவா?

    4. கொரோனா பொது முடக்கத்தான் போது , மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சலுகைகளை மோடி அரசு ஏன் திரும்பப் பெற்றது? இதன் மூலம் ஒரே ஆண்டில் ₹2242 கோடியை மோடி அரசு கொள்ளையடித்தது.

    5. CAG அறிக்கையின் படி, ₹58,459 கோடியில் 0.7% நிதி மட்டுமே ரெயில்வே பாதை புதுப்பித்தலுக்கு செலவிடப்பட்டது ஏன்? இதுவே, மோடி அரசாங்கத்தால் கூறப்படும் 180 கிமீ வேகத்திற்குப் பதிலாக, வந்தே பாரத் அதிவேக ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 83 கி.மீ. தான்.

    6. ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் உடன் இணைக்கும் நடவடிக்கை என்பது பின் வாசல் வழியாக அதன் நிதியை குறைப்பதற்கான ஒரு வழியாகும் என்பது உண்மையல்லவா ?

    7. இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது உண்மையல்லவா ? மோடி அரசின் தேசிய ரெயில்வே திட்டத்தின் (2021) படி, அனைத்து சரக்கு ரெயில்களும் 2031க்குள் தனியார்மயமாக்கப்படும் என்றும் 750 ரெயில் நிலையங்களில் 30 சதவீதம் தனியார்மயப்படுத்தப்படும் என்று பாஜக அரசு அறிவித்துள்ளது.

    லாபம் ஈட்டும் அனைத்து ஏசி பெட்டிகளும் தனியார் மயமாக்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரெயில்கள் மட்டுமே ரயில்வேயிடம் விடப்படும். இன்னும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிர்நாடியாக ரயில்வே உள்ளது.

    ஆனால் மோடி அரசு ரெயில்வே துறையின் நிதி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலையில் மக்கள் பயன்படுத்தும் வசதியை அழித்துவிட்டது.

    2012-13ல் 79% ஆக இருந்த மெயில் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை 2018-19ல் 69.23% ஆக குறைந்ததில் ஆச்சரியமில்லை.

    காங்கிரஸ் கட்சி ரயில்வே துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது
    • 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்

    மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் இந்தியன் ரெயில்வே ₹5,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியன் ரெயில்வே பதில் அளித்துள்ளது.

    அதில், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் மார்ச் 20, 2020 முதல் ஜனவரி 31, 2024 வரை ரெயில்வே துறைக்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது.

    இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

    ரயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்.

    அதன்படி, கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு, ரெயில் கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீத சலுகையும் ரெயில்வே வழங்கியது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் பிரிவில் சுமார் 13 கோடி ஆண்களும், ஒன்பது கோடி பெண்களும் மற்றும் 33,700 திருநங்கைகள் மொத்தமாக 13,287 கோடி பணம் செலுத்தி ரெயில் டிக்கெட் பெற்றுள்ளனர்.

    • ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
    • பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாகர்கோவில்:

    ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது.

    மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.

    அவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவது மட்டுமின்றி, மத்திய-மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர், ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    இதன்மூலம் தென்னக ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பையும் அவர் பெற்றிருக்கிறார். நாகர்கோவிலை சேர்ந்த அவரது பெயர் சிந்து. வாழ்க்கையில் உயர கல்வியே முக்கியம் என்பதை உறுயியாக நம்பிய சிந்து, பி.லிட் தமிழ் இலக்கியம் படித்தார்.

    பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு தெற்கு ரெயில்வேயில் பணியில் சேர்ந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியாற்றிய அவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு பணி மாறுதலாகி வந்தார். மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினார்.

    இந்நிலையில் ஒரு சிறிய விபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப பிரிவில் சிந்துவால் பணியாற்ற முடியவில்லை. தொழில்நுட்பம் இல்லாத பணியில் தொடர முடியுமா என்று அவரிடம் ரெயில்வே துறையினர் கேட்டனர்.

    அதற்கு அவர் சம்மதித்தது மட்டுமின்றி, டிக்கெட் பரிசோதகராக பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தார். அதன்பேரில் திருநங்கை சிந்து, திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் பரிசோதகராக அவர் பணியில் சேர்ந்தார்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த தான், டிக்கெட் பரிசோதகராகி இருப்பது சிந்துவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிந்து கூறியதாவது:-

    டிக்கெட் பரிசோதகராக பணியில் சேர்ந்திருப்பது எனது வாழ்நாளில் மறக்க முடியாக நிகழ்வு. நான் டிக்கெட் பரிசோதகராக பணியாற்ற சில சவால்கள் இருந்தன. ஆனால் அது எனது கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நனவாகிவிட்டது.

    இது எனக்கு மட்டுமல்ல. திருநங்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று நான் மிகவும் கவலைப் பட்டேன். இருப்பினும் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியனும், அதன் அலுவலக பணியாளர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.

    என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். திருநங்கையான எனது சாதனைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்ததை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். தற்போது பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
    • புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    சென்னை:

    ரெயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கோரிக்கையை நிராகரித்து, கடந்த டிசம்பர் 19-ந்தேதி உத்தரவிட்டது.

    இந்த 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 20-ந்தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவர்களை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் கும ரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 202 ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால், அது இந்த வழக்கை பயனற்றதாக்கி விடும் என்பதால், புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே நிர்வாகம் தரப்பில், மனுதாரர் சங்க உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதில் நியமிக்கப்பட உள்ளவர்களின் தேர்வு நடவடிக்கைகள் 2023-ம் ஆண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால், அவர்களை நீக்கி விட்டு, புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்களுக்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரெயில்வே நிர்வாகம் மீறியுள்ளதாக கூறினர்.

    பின்னர், புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், அந்த இடங்களில், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மறுநியமனம் வழங்கினால், அதன் மூலம் அவர்களுக்கு எந்த உரிமையும் கோர முடியாது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

    • தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா?

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பிரித்திங்கா ( வயது 15).

    இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இருந்து மதியம் 1 மணி அளவில் வீட்டுக்கு செல்வதாக, சக மாணவிகளிடம் கூறிவிட்டு சென்றார்.

    நேற்று மாலை நீண்ட நேரமாகியும் பிரித்திங்கா வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர் எங்கும் அவர் கிடைக்கவில்லை.

    குருநாதபுரம் ரெயில் தண்டவாளம் அருகே மாணவியின் புத்தகப் பை மற்றும் செருப்பு உள்ளிட்டவை கிடந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், விரைந்து சென்று அவற்றை பறிமுதல் செய்து தேடி வந்தனர்.

    மேலும் குடியாத்தம் டவுன் போலீசில், மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை குடியாத்தம்-மேல்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே மாணவி பிரித்திங்கா பள்ளி சீருடையில் ரெயிலில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை.
    • ரெயில்வே இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என வெங்கடேசன் எம்.பி. பதிவிட்டுள்ளார்.

    மதுரை:

    ரெயில்வே அதிகாரியான ரூப் நாராயண் ஷங்கர் நேற்று மதுரையில் இருந்து வெளியூர் செல்ல பயணம் மேற்கொண்டார். அப்போது

    அவர பயணிக்க வேண்டிய ரெயில் ஐந்தாம் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது.

    அதிகாரி என்பதால், ரெயில்வே நிர்வாகம் 4ம் பிளாட்பாரத்தில் அவர் பயணிக்க தனி ரெயிலை இயக்கியது. அத்துடன், 5வது பிளாட்பாரத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பயணிகளை 5வது பிளாட்பாரத்துக்கு அலைக்கழித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ரெயில்வே நிர்வாகம் விளக்கம் உரிய அளிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில். அவர் அடுத்த நடைமேடைக்கு ஏறி இறங்காமல் வசதியாக பயணிக்க 1000 பயணிகளை அடுத்த நடைமேடைக்கு அலைகழிக்க வைத்த கொடுமை.

    மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை. ரெயில்வே இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • சென்ட்ரலில் இருந்து 7 லட்சம் பேர் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு பயணம்.
    • வியாழன், வெள்ளி மற்றும் இன்று காலை வரை மொத்தம் 12 லட்சம் பேர் பயணம்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ரெயிலில் 12 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து 7 லட்சம் பேர் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

    இதேபோல், எழும்பூரில் இருந்து 5 லட்சம் பேர் தென் மாவட்டங்களுக்கு ரெயிலில் பயணம் செய்துள்ளதாக ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

    வியாழன், வெள்ளி மற்றும் இன்று காலை வரை மொத்தம் 12 லட்சம் பேர் சென்னையில் இருந்து ரெயில்களில் பயணம் செய்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார் பில் அரசடி ரெயில்வே மைதானம் முன்பு, மக்கள் நிலத்தை பாதுகாப்போம் என்ற நோக்கத்தில் பல்லாயி ரக்கணக்கான மக்கள் மற்றும் விளையாட்டு வீரர் கள் பயன்படுத்திவரும் பொது சொத்தான மதுரை ரெயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரெயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கையெ ழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். இதில் மாநக ராட்சி துணை மேயர் நாகரா ஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர் எம்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற் றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்ற னர்.

    தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில், ரெயில்வே மைதானத்தை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மதுரையின் நுரையீரலாக பெரும் மாசுவை தடுத்து நிறுத்தும் ஒரு இடமாக ரெயில்வே மைதானம் உள்ளது. இதை தனியார் கார்ப்பரேட் முத லாளிகளிடம் வழங்கி விட் டால் இப்பகுதியில் சுகாதா ரம் என்பதை பாதுகாக்க முடியாது.

    ஏற்கனவே காற்று மாசு பெருவாரியாக ஏற்பட்டு வரும் நிலையில் காற்றில் மாசினை குறைப்பதற்கு ரெயில்வே காலனி பெரும் பங்கு வகிக்கின்றது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மரங்களை விட இங்கு 50 சதவீதத்திற்கு மேல் மரங்கள் உள்ளது. எனவே மதுரையில் நுரையீ ரலாக இருக்கக்கூடிய ரெயில்வே மைதானத்தை தனி யார் பெரும் முதலாளிக ளுக்கு மத்திய அரசு தாரை வார்க்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்று ரெயில்வே மைதானம் பாது காப்பு கையெழுத்து இயக் கத்தை துவக்கி வைக்கிறோம் என்றார்.

    • விஜய்வசந்த் எம்.பி.தகவல்
    • வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது:- குழித்துறை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கிராசிங் எண் 14-ல் ரெயில் போகும் சமயங்களில கேட் நீண்ட நேரமாக அடைத்து வைப்பதின் காரணமாக இருபுறம் அதிகமான வாகன போக்குவரத்து காரணமாக நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    மேலும் தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நடைக்காவு, சூழால், விளாத்துறை, ஊரம்பு, பைங்குளம், மங்காடு, நித்திரவிளை, முன்சிறை, புதுக்கடை, ஐரேனிபுரம், கொல்லஞ்சி, காரவிளை போன்ற இடங்களில் உள்ள பொதுமக்கள் மார்த்தாண்டம் ரெயில் நிலையம் மற்றும் மார்த்தாண்டம் பஸ் நிலையம் வந்து செல்ல போக்குவரத்து நெருக்கடி காரணமாக சரியான நேரத்திற்குவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் குழித்துறை ரெயில் நிலையம் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    விஜய்வசந்த் எம்.பி. ரெயில்வே அதிகாரிகளையும், ரெயில்வே அமைச்சரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பாராளுமன்றத்தில் பேசியதின் மூலமாக ரெயில்வே நிர்வாகம் அந்த இடத்தை ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து முழு செலவையும் ஏற்று ரூ.45 கோடி செலவில் புதிய பாலம் அமைக்க முன்வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சீராகுவது மட்டுமல்லாது அப்பகுதி விரைவில் வளர்ச்சி பெறும். அதுபோல நீண்ட நாட்களாக விரிகோடு பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங் கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களும், வாகன ஓட்டிகளும் மார்த்தாண்டம், நாகர்கோவில், திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி நீண்ட நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர்.

    மாற்று இடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைத்தால் விரிகோட்டை சுற்றியுள்ள மக்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் பேசி முழு முயற்சி எடுத்து வருகிறேன். எனவே அப்பகுதி மக்களின் விருப்பத்தின் படி அவர்களின் கோரிக்கை ஏற்றவாறு விரிகோட்டில் விரைவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
    • இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் அய்யானாபுரம் நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் செயலாளர் வக்கீல் வெ.ஜீவக்குமார் விளக்க உரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில், தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே அனுமதிக்கப்பட்டுள்ள, இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்-அரியலூர் புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    நவக்கிரக தலங்கள், சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சென்னையை போல், தஞ்சாவூர் ரெயில் நிலையங்களில் முதியோர்களை அழைத்துச் செல்லும் பேட்டரி காருக்கான கட்டணத்தை ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைக்க வேண்டும்.

    விரைவு ரெயில் என்ற பெயரில் கட்டணங்களை உயர்த்தியுள்ள ரயில்வே நிர்வாகம், கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது போல் பயணிகள் ரெயில் என்ற பெயரில் இயக்கி உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தரமாக நடைபெற ெரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    நடைபெறும் வேலைகள் குறித்து அறிவிப்பு பலகையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சங்க நிர்வாகிகள் கண்ணன், பேராசிரியர் திருமேனி, வக்கீல்கள் உமர்முக்தர், பைசல் அகமது, உழவர் செல்ல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
    • இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுகிறது.

    இரணியல்:

    திங்கள்நகர்-நெய்யூர்-அழகிய மண்டபம் செல்லும் சாலையில் இரட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி கட்ட பணியாக பக்கவாட்டு சுவர் எழுப்பும் வேலை நடைபெறுவதால் இரட்டை ரெயில்வே மேம்பால பணிகள் நடை பெறும் இடத்தை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் கடந்த 26-ந்தேதி பார்வை யிட்டு வாகனங்கள் மாற்று பாதையில் செல்லவும் பணிகளை சுமார் 40 நாட்களில் விரைந்து முடிக்கவும் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், ரெயில்வே துணை முதன்மை பொறியாளர் பமிலா, குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    இந்நிலையில் நாளை (30-ந் தேதி) முதல் சுமார் 40 நாட்களுக்கு போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, திங்கள் நகரில் இருந்து திருவிதாங்கோடு, அழகிய மண்டபம் செல்லும் வாகனங்கள் திங்கள்நகர் ரவுண்டானா, இரணியல் சந்திப்பு, ஆழ்வார்கோவில், தக்கலை வழியாகவும், அழகிய மண்டபம், திரு விதாங்கோட்டில் இருந்து திங்கள்நகர் செல்லும் வாகனங்கள் திரு விதாங்கோடு, வட்டம், ஆழ்வார் கோவில், இரணி யல் சந்திப்பு திங்கள் நகர் வழியாகவும் செல்லும்படி ஒருவழி போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டு நாளை முதல் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்ப டுகிறது. ஆகவே பொது மக்கள் போக்குவரத்து காவல்துறைக்கும், ரெயில்வே நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தந்து மாற்று பாதையில் செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலகதரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது.
    • ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ரெயில்வே தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ. 6,080 கோடியை சாதனை அளவாக ஒதுக்கியுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலக தரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.

    தமிழ்நாட்டு மக்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடி தங்கள் மீது கொண்டுள்ள அன்புக்காகவும் திருநெல்வேலி-மதுரை-சென்னை மற்றும் சென்னை விஜயவாடா இடையே இரண்டு வந்தே பாரத் ரெயில் சேவைகளை மாநிலத்துக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.

    ×