என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alur Shahnawaz"

    • மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே சொல்வது அலட்சியத்தின் உச்சம்.
    • பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து தொடர்பாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நாடு முழுவதும் ரயில் விபத்துகள் பெரும்பாலும் ரயில்வே துறையின் அலட்சியத்தாலேயே நிகழ்கின்றன. கடலூர் விபத்தும் அப்படியே நடந்துள்ளது. ரயில் வருவதற்கு முன்பே கேட் மூடப்பட வேண்டும் என்னும் போது, ரயில் வரும்போது கேட் எப்படி திறந்திருந்தது?

    Inter Locking System இல்லாத கேட்களில், ஒரு ஸ்டேசனை ரயில் கடந்தவுடன் அடுத்த ஸ்டேசனுக்கு அந்த ஸ்டேசன் மாஸ்டர் தகவல் கொடுக்க வேண்டும் என்னும் போது இந்த விபத்து எப்படி நடந்தது?

    மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே நிர்வாகம் சொல்வது அலட்சியத்தின் உச்சம். கேட் மூடப்படவே இல்லை என்று வேன் ஓட்டுநரும், மாணவரும், மக்களும் சொல்வதை விசாரிக்காமலேயே ரயில்வே நிர்வாகம் ஒரு சார்பு தகவலை சொல்வது அபத்தம்.

    பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது. போதிய பணியாளர்கள் நியமனங்கள் இன்றி ரயில்வே துறை தள்ளாடுகிறது. பணி இடங்களில் மொழி தெரியாதவர்களை நியமிப்பதன் மூலம் சிக்கல் அதிகரிக்கிறது. விபத்துகளை தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் வந்தபிறகும் அவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருக்கிறது.
    • ஜெயலலிதா உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி என்று தர்ம யுத்தம் நடைபெற்றதே.

    இன்று ஒடிசாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது, "ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருக்கிறது. உடல்நலம் குன்றியதற்கு அவரை பின்னால் இருந்து இயக்கும் லாபிதான் காரணம்

    ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்ததும் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதற்கான காரணம் குறித்து தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும்" என்று பேசியுள்ளார்.

    மோடியின் இக்கருத்து ஒடிசாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதில் அளித்து பேசியுள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தான் பூரண நலத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக தேர்தல் பரப்புரையிலும் தான் ஈடுபட்டு வருவதாகவும், பிரதமர் மோடிக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால் எனக்கு போன் செய்து விசாரித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே மோடியின் பேச்சு தொடர்பாக விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி என மோடி பேசியுள்ளார். முதலில் ஜெயலலிதா உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி என்று தர்ம யுத்தம் நடைபெற்றதே அதற்கு மோடி பதில் சொல்வாரா? ஒரு முதலமைச்சருக்கு என்ன நடந்தது என்பது ஒரு பிரதமருக்கு தெரியாதா? ஜெ மரணத்தில் மர்மம் எனில் காரணம் யார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    ×