என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: எக்ஸ்பிரஸ் ரெயில் ஏ.சி. குழாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட 150 மதுபாட்டில்கள் - சிக்கியது எப்படி?
    X

    VIDEO: எக்ஸ்பிரஸ் ரெயில் ஏ.சி. குழாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட 150 மதுபாட்டில்கள் - சிக்கியது எப்படி?

    • ஏசி டெக்னீசியன் நடுவழியில் அதை பழுது பார்க்க வந்துள்ளார்.
    • ஏசி டக்ட்-ஐ திறந்து பார்த்த போது அதில் மதுபாட்டிகள் பேப்பரில் சுற்றப்பட்டு மறைந்து வைக்கப்பட்டிருந்தன.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து பீகாரின் பெகுசாராய் பகுதிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று இயங்கி வருகிறது.

    கடந்த செவாய்க்கிழமை இந்த ரெயிலின் ஏசி பெட்டியில் பயணித்த பயணிகள் ஏசி குறைந்த கூலிங்கில் இயங்குவதாக புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஏசி டெக்னீசியன் நடுவழியில் அதை பழுது பார்க்க வந்துள்ளார்.

    அப்போது ஏசி டக்ட்-ஐ (குழாயை) திறந்து பார்த்த போது அதில் மதுபாட்டிகள் பேப்பரில் சுற்றப்பட்டு மறைந்து வைக்கப்பட்டிருந்தன. மொத்த பெட்டியையும் இவ்வாறு சோதனை செய்ததில் 150க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் இவ்வாறு சட்டவிரோத மதுபான கடத்தல் நடந்து வந்துள்ளது.

    முன்னதாக கடந்த மே மாதம் ரெயிலில் இதுபோல மறைத்து வைக்கப்பட்ட 700 பாக்கெட் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் ரெயில் பவர் கார் ஊழியர் ஒருவரும் பிடிபட்டார்.

    Next Story
    ×