இரணியல் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த கொத்தனார்

இரணியல்-ஆளூர் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ராஜீவ் பிணமாக கிடந்தார்.தற்கொலைக்கான காரணம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரணியல் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த கொத்தனார்
Published on

இரணியல் :

வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (வயது 54). இவர் கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வந்தார். தற்பொழுது கேரளாவில் இருந்து ஊருக்கு வந்த ராஜீவ் மீண்டும் கேரளாவிற்கு செல்வதற்கு தயாரானார்.

இதையடுத்து நேற்று மாலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலை இரணியல்-ஆளூர் ெரயி ல்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ராஜீவ் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இட த்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராஜீவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி ப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜீவ் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜீவ் தற்கொலைக்கான காரணம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com