search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "subways"

    • 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
    • மழைநீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 29) மாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை காலை வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் மொத்தமாக உள்ள 20 சுரங்கப்பாதைகளில் 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.

     

    மழைநீர் தேக்கம் காரணமாக பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மேலும் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது.

    சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை கிண்டி, வடபழனி, போரூர், தாம்ரம், சைதாப்பேட்டை செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

    • திருப்புவனம் அருகே பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ெரயில்வே சுரங்கபாதை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை பகுதிக்கு செல்ல மதுரை-ராமேசுவ ரம் நான்கு வழிசாலையில் ராமேசுவரம் செல்லும் தண்டவாளத்தை கடக்க ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்றி விட்டு 2 ஆண்டுகள் முன்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.

    இது அமைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுரங்க பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் அதை பயன்படுத்த முடியவில்லை.

    மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடைகளையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்க பாதை அமைக்கும் போதே மழைநீர் வராத அளவிற்கு வடிகால் வசதி செய்யவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க சுரங்க பாதை மீது மேற்கூரை ஏதும் அமைக்காததால் இன்று வரை கட்டி முடிக்கப் பட்டு மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.

    எனவே உடனடியாக ெரயில்வே நிர்வாகம் சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது.
    • அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் ,வீரபாண்டி மெயின் ரோடு வேங்காம்பட்டி அருகே உள்ள ெரயில்வே கேட் பல்வேறு கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக உள்ளது.

    இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள் வந்து

    செல்கின்றன. அதன் வழியாக ெரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சியில் கடந்த 2011 -ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டது .

    மேலும் கடந்த 2021 -ம்

    ஆண்டு மல்லூர் பேரூ ராட்சி பொதுமக்கள் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் வேங்காம்பட்டி ெரயில்வே கேட் முன்பு

    ெரயில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.

    இதற்கிடையே பேரூராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் ஆத்தூர் துணைக்கோட்ட அலு வலகத்திற்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது. அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று நடைபெறவிருந்த ெரயில் மறியல் போராட்டம் தற்கா

    லிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை

    அய்யனார் தெரி வித்துள்ளார். பாலம் அமைப்பதால் அந்த வழியாக போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் அந்த பகுதி மக்கள் மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை அய்யனாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ×