search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாட்பாரங்கள்"

    • ரெயில்கள் பராமரிப்பை கன்னியாகுமரி, ஊட்டுவாழ்மடத்திற்கு மாற்ற பரிசீலனை
    • நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தொடங்கப்படுமா?

    நாகர்கோவில், ஆக.10-

    நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரெயில் நிலையத்தில் போதுமான பிளாட்பார வசதி இல்லாததால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 3 பிளாட்பாரங்கள், 3 பிட்லைன்கள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 2 பிட்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில்களை பராமரிக்கவும் இரண்டு தண்டவாளங்கள் உள்ளது. இடநெருக்கடி காரணமாக ரெயில் பராமரிப்பை கன்னியாகுமரிக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார் கள்.

    இந்தநிலையில் இரட்டை ரெயில் பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையேதுரிதமாக நடந்து வருகிறது.

    இரட்டை ரெயில் பாதை பணியை முடிக்கும் பட்சத்தில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 4-வது, 5-வது பிளாட்பாரங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 4 மற்றும் 5-வது பிளாட்பாரத்தை தற்பொழுது ரெயில்கள் நிறுத்தி பராமரிக்கும் இடத்தை பிளாட்பாரங்களாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அந்த பகுதிகள் மணல் நிரப்பி பிளாட்பாரங்களாக மாற்ற திட்டமிடப் பட்டுள் ளது. தற்பொ ழுது ரெயில்கள் நிறுத்தப்பட்டு பரா மரிக்கப்படும் இடம் பிளாட்பாரமாக மாற்றும் பட்சத்தில், ரெயில்களை பராம ரிக்க நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போதுமான இடவசதி இருக்காது. எனவே அந்த ரெயில்களை பராமரிப்பதற்கான இடத்தை ஊட்டுவாழ் மடம் பகுதியில் அமைக்கலாமா? என்பது குறித்து ரெயில்வே அதிகாரி கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அதற்காக ஊட்டுவாழ்மடம் பகுதியில் இரண்டு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணியை மேற்கொள்ளலாமா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 3 தண்டவாளங்கள் உள்ளது. அங்கு தற்போது இரண்டு தண்டவாளங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு தண்டவாளத்திலும் ரெயில்களை பராமரிக்க ஏற்பாடு செய்வது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் ரெயில்வே மேம்பாட்டு பணிக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகளை பிரதமர் மோடி காணொலி மூலமாக தொடங்கி வைத்துள்ளார். இந்த மேம்பாட்டு பணிகள் நிறைவடையும் பட்சத்தில், நாகர்கோ வில் ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும்.

    நாகர்கோவில் டவுன் ரெயில் நிலை யத்தில் ஏற்கனவே இரண்டு தண்டவா ளங்கள் உள்ளது. அங்கு வளர்ச்சி பணி களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

    தற்போது சென்னையிலிருந்து நாகர்கோவில் டவுன் வழியாக கொல்லத்திற்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் அதிகமான பயணிகள் செல்வதால் டவுன் ரெயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்தவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    குழித்துறை மற்றும் இரணியல் ரெயில் நிலையங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். எனவே சென்னை செல்லும் ரெயில்களில் தினமும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சென்னைக்கு கூடுதலாக ரெயில் இயக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    சென்னையில் இருந்து நெல்லை வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    வந்தே பாரத் ரெயிலும் நாகர்கோவில் வரை வந்து செல்லும் பட்சத்தில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மேலும் இடநெருக்கடிக்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக 4 மற்றும் 5-வது பிளாட்பாரம் அமைப்பதற்கான பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • நாகர்கோவில் ரெயில் நிலையம் அதிக வருவாய் கிடைக்கும் ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ரெயில் நிலையம் அதிக வருவாய் கிடைக்கும் ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், கோவை, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருவதால் கூட்டம் எப்பொழுதும் அதிகமாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வேலைக்கு செல்பவர்கள் ரெயில்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக உள்ள ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்லும்.

    இந்த ரெயில் நிலையத்தில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் பயணம் செய்து வருகி றார்கள். ஆனால் ஆரல்வா ய்மொழி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    பிளாட்பாரங்களில் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். முட்பு தருக்குள் விஷ ஜந்துக்கள் இருந்தால் கூட தெரியாத அளவிற்கு வளர்ந்து காணப்படுகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக ஆரல்வாய்மொழி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ரெயில் பயணிகளையும் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்க மாகவும் அதிக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவ னந்தபுரத்திற்கு காலை நேரங்களில் பாசஞ்சர் ரெயிலும் செல்கிறது. இந்த ரெயில்களை வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மார்க்கமாக உள்ள ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுவதாக ரெயில் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இரணியல், பள்ளியாடி, குழித்துறை ரெயில் நிலை யத்தில் அதிக அளவு முட்பு தர்கள் உள்ளது. அதை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×