search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரெயில்வேயில் 2.74 லட்சம் பணியிடங்கள் காலி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலம்
    X

    ரெயில்வேயில் 2.74 லட்சம் பணியிடங்கள் காலி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலம்

    • பாதுகாப்பு பிரிவில் 1.70 லட்சம் இடங்கள் காலியாக உள்ளது.
    • ரெயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே மந்திரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி :

    மத்திய அரசின் ரெயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரெயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதில் அனுப்பியுள்ள ரெயில்வே அமைச்சகம், ரெயில்வே துறையில் 2.74 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளது. இதில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளில் மட்டுமே 1.70 லட்சத்துக்கு அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறியுள்ளது.

    இது தொடர்பாக ரெயில்வே அனுப்பியுள்ள பதிலில், '2023 ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி இந்திய ரெயில்வேயில் குரூப் சி (நிலை-1 உள்பட) பிரிவில் 2,74,580 பணியிடங்கள் காலியாக உள்ளன' என்று கூறியுள்ளது.2023 ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி ரெயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் குரூப் சி (நிலை-1 உள்பட) பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 9,82,037 ஆகும் என கூறியுள்ள ரெயில்வே அமைச்சகம், இதில் 8,04,113 ஊழியர்கள் பணியில் உள்ளதாகவும், 1,77,924 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

    முன்னதாக ரெயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×