search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜினாமா"

    • தனிப்பட்ட ஆதாயங்களை விரும்புவோர் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என்றார் அகிலேஷ் யாதவ்.
    • பா.ஜ.க.வின் அழுத்தத்தால் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாசல பிரதேசம் என மொத்தம்15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடந்து வருகிறது.

    தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வான மனோஜ் குமார் பாண்டே, கட்சியின் தலைமைக் கொறடா பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறுகையில், தனது கட்சியின் 3 வேட்பாளர்களும் உறுதியாக வெற்றி பெறுவர். தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க. அனைத்து உக்திகளையும் பயன்படுத்தும். தனிப்பட்ட லாபத்தை விரும்பும் தலைவர்கள் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என தெரிவித்தார்.

    • கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன்.
    • எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நர்சாபுரம் எம்.பி. யாக இருப்பவர் ரகு ராமகிருஷ்ண ராஜி. இவர் தனது எம்.பி. பதிவையே ராஜினாமா செய்து முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பினார்.

    நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்வதற்காக கஜினி முகமது போன்று பல்வேறு முயற்சிகளை செய்தீர்கள். அந்த முயற்சிகள் எதுவும் உங்களுக்கு பயன் தரவில்லை. என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த நர்சாபுரம் தொகுதிக்காகவும், தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் போற்றத்தக்க நேர்மையான செயல்களை செய்து இருக்கிறேன்.

    கடந்த 3 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்டேன். இவ்வாறு அவர் தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.பி.க்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகி வரும் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி நேற்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
    • எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என விஜயதாரணி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த கட்சியை விட்டு எதிரணிக்கு தாவி வருகின்றனர்.

    இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்குச் சென்று தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கட்சித்தலைமைக்கு எழுதிய கடிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

    இதையடுத்து, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதாரணியின் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக தகுதிநீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயதாரணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி ஆவார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கொறடாவாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜினாமா கடிதத்தை, மேற்குவங்க முதல்வரிடம் வழங்கியுள்ளார்.
    • தனது தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைமை மீது அதிருப்தி.

    மேற்குவங்க எம்.பியும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மிமி சக்ரபோர்த்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    தனது ராஜினாமா கடிதத்தை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

    தனது தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    ஆனால் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலிடம் இன்னும் ஏற்கவில்லை எனவும் மிமி சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.

    தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி மக்களவை சபாநாயகரிடம் வழங்காமல், மம்தாவிடம் வழங்கியதற்கான காரணம் குறித்து மிமி சக்ரபோர்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த மிமி, " கட்சி மேலிடத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்ததும், ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பேன்" என்றார்.

    • கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
    • புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல்.

    கடந்த 2023ம் ஆண்டு 14ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில், செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

    • அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.

    ஹங்கேரி நாட்டுப் பெண் அதிபராக இருந்தவர் கடாலின் நோவக். இவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபருக்கு மன்னிப்பு வழங்கினார்.

    அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அந்த நிர்வாகிக்கு அதிபர் கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கி இருந்தார். இதற்கு நீதித்துறை மந்திரி ஜூடிட் லர்கா அனுமதி அளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.

    இந்த நிலையில் கடாலின் நோவக் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தொலைக்காட்சியில் கூறும்போது நான் ஒரு தவறு செய்துவிட்டேன். குழந்தைகள் இல்ல நிர்வாகி, துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று நம்பி மன்னிப்பு வழங்க முடிவு செய்தேன்.

    ஆனால் அதில் நான் தவறு செய்துவிட்டேன். இன்று நான் உங்களை அதிபராக சந்திப்பது கடைசி நாள் என்றார்.

    அதேபோல் நீதித்துறை மந்திரி வர்காவும் பதவி விலகினார்.

    • தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.
    • குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

    பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

    குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார்.

    நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    • அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன.
    • விடுமுறை தராத விரக்தியில் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    லக்னோ:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. கோவில் திறப்பு விழா மற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வானது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன. ஒரு சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வேலை நேரத்தில் சலுகைகள் அறிவித்தன.

    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழா நாளன்று விடுமுறை தராததால் வேதனை அடைந்த ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    வேலை பார்த்த நிறுவனத்தின் பொது மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் வேலையை விட்டுவிட்டேன் என அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் பலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.
    • ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வை காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்தனர்.

    அகமதாபாத்:

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் அழைப்பை நிராகரித்ததாக அறிவித்தனர்.

    இதற்கிடையே, ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பலர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரசின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து குஜராத் மாநிலம் மகேஷானா மாவட்டம் விஜாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுடா தனது பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் அவர் ராஜினாமா கடிதம் வழங்கினார்.

    ராமர் கோவில் விவகாரத்தில் தனது கட்சியின் அணுகுமுறை பிடிக்கவில்லை எனக்கூறிய அவர், விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

    • ராஜினாமா கடிதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக தகவல்.
    • ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு.

    ஆந்திர மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.

    இவர் கடந்த 4ம் தேதி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை கடந்த வாரம் அவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

    அண்மையில் கட்சியில் இணைந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
    • பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர் கடந்த 2022-ம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.

    பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர், கடந்த 2022-ம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

    முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொடர்ந்து பணியில் நீடித்து வந்த சண்முகசுந்தரம் ராஜினாமா கடிதத்தை தற்போது அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.

    புதிய தலைமை வழக்கறிஞரை அரசு விரைவில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாண்டிக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
    • ஊராட்சி மன்ற தலைவர் ஒரு தலைபட்சமாகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் பாண்டிக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை முன்வைத்தனர்.அதற்கு அதிகாரிகள் முறையான தீர்வு மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இந்நிலையில் 2-வது வார்டு ஊராட்சிமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, 4 ஆண்டுகள் கடந்தும் தனது வார்டில் எந்த ஒரு மக்கள் பணியும் நடைபெறவில்லை என்றும் இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் முறையான பதில் இல்லையென்று குற்றம் சாட்டினார்.மேலும் ஊாட்சி மன்ற தலைவர் ஒரு தலைபட்சமாகவும், ஊராட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிற ஜனவரி 26-ந்தேதிக்குள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து ராஜினாமா கடிதம் வாபஸ் பெறப்பட்டது.கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் திடீர் ராஜினாமா முடிவால் கூட்டம் பரபரப்பாக கானப்பட்டது.

    ×