search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panwarilal purohit"

    • தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.
    • குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

    பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

    குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார்.

    நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    • தமிழக ஆளுநராக பதவி வகித்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது
    • பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது.

    சண்டிகர்:

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், தற்போது பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் லூதியானா வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் முற்றியுள்ளது.

    இது குறித்து பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் 4 ஆண்டுகள் தமிழக ஆளுநராக பணியாற்றினேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் இருந்தது. தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி, 27 துணைவேந்தர்களை நியமித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதனால் பஞ்சாப் அரசு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு அரசு மூன்று முறை எனக்கு கடிதம் அனுப்பியது. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு பங்கு இல்லை என்றால், பதவி நீட்டிப்பு வழங்குவதில் மட்டும் அவருக்கு எப்படி பங்கு இருக்க முடியும்?  மூன்று முறை தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் முழுநேர துணை வேந்தர் நியமனத்திற்கு என்னிடம் ஒப்புதல் பெறப்படவில்லை.

    பஞ்சாப் மாநிலத்தின் வேளாண் பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் தான். தலைமைச் செயலாளர் அல்ல. இந்த விவகாரத்தில் நான் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளேன். அந்தப் பணியை செய்வதில் இருந்து என்னை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழக அமைச்சர்கள் குறித்த ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை கவர்னரிடம் அன்புமணி ராமதாஸ் ஆதாரத்துடன் வழங்கியவர் என கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். #KSAlagiri #Anbumaniramadoss
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் 24-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன.

    2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட 9 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடத்தையும் வாய்ப்பு வழங்குகிற வரலாற்றுப் புகழ்மிக்க ஒப்பந்தம் நேற்று கையொப்பமிடப்பட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டில் தி.மு.கழகத்தோடு தொடங்கிய லட்சியப் பயணம் இடையில் ஓரிரு ஆண்டுகளைத் தவிர, கடந்த 15 ஆண்டுகளாக கொள்கை அடிப்படையில் பீடுநடை போட்டு வருகின்றன.

    2004, 2009 பாராளுமன்றத் தேர்தல், 2011, 2016 சட்ட மன்றத்தேர்தல் என தி.மு.கழகத்தோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு ஒப்பந்தம் வழி வகுத்துள்ளது.

    நெஞ்சை உயர்த்தி நாங்கள் அமைத்திருப்பது கொள்கைக் கூட்டணி, லட்சியக் கூட்டணி என்று கூரை மீது ஏறி நின்று கூவி கூற முடியும். ஆனால் நம்மை எதிர்க்கிற கட்சிகளின் நிலை என்ன ? கொள்கை என்ன ? கடந்த கால அரசியல் அணுகுமுறை என்ன?

    கடந்த டிசம்பர் மாதம் 9-ந் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை ஆதாரத்துடன் வழங்கியவர் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். அந்த ஊழல் பட்டியலில் முதலாவது குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் ஆற்றுமணல் விற்பனையில் ரூபாய் 7.10 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.



    பல்கலைக் கழக துணை வேந்தர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் ரூபாய் 320 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி 24 ஊழல் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது. பட்டியல் வழங்கி 70 நாட்களுக்குள்ளாக எந்த அ.தி.மு.க. மீது ஊழல் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டதோ, அந்த ஊழல் கட்சியோடு கைகோர்த்து இன்றைக்கு பா.ம.க. நிறுவனர் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறார். சந்தர்ப்பவாத அரசியலில் இன்றைக்கு ராமதாஸ் கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்.

    தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து சந்தர்ப்பவாதிகளின் கூடாரம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆனால் மதச்சார்பற்ற, சமூகநீதியில் அக்கறையுடன், தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொள்கை கூட்டணி அமைத்திருக்கின்றன. நமது கொள்கைகளை மக்களிடம் கூறுவோம்.

    அ.தி.மு.க., பா.ம.க.வின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்துவோம்.

    கடந்த 2004-ல் தி.மு.க., காங்கிரசோடு கூட்டணி சேர்ந்த பா.ம.க. 5 இடங்களில் வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் கேபினட் அமைச்சராகவும், ஆர்.வேலு ரெயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார்கள்.

    ஆனால் 2009 பாராளுமன்றத் தேர்தலிலே கூட்டணியிலிருந்து விலகி, அ.தி.மு.க.வோடு சேர்ந்து 6 இடங்களில் பா.ம.க. போட்டியிட்டு அனைத்திலும் படுதோல்வி அடைந்தது.

    அத்தகைய தோல்வியை வருகிற 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் பா.ம.க.வுக்கு வழங்கி உரிய பாடத்தை தமிழக மக்கள் வழங்குவார்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் தேவையில்லை. 2004-ல் மதச்சார்பற்ற கூட்டணி பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்கிற வெற்றியின் இலக்கை நோக்கி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடங்கி விட்டது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #KSAlagiri #Anbumaniramadoss
    தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். #RajnathSingh #PanwarilalPurohit
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு, போலீஸ் தடியடியில் தூத்துக்குடியில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து விசாரித்ததாகவும், அதற்கு கவர்னர், தனது டெல்லி பயணத்தின்போது நேரில் சந்திப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்த தகவலை உள்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.  #RajnathSingh #PanwarilalPurohit
    ×