search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "whip"

    • தனிப்பட்ட ஆதாயங்களை விரும்புவோர் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என்றார் அகிலேஷ் யாதவ்.
    • பா.ஜ.க.வின் அழுத்தத்தால் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாசல பிரதேசம் என மொத்தம்15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடந்து வருகிறது.

    தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் சிலர் கட்சி மாறி வாக்களிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வான மனோஜ் குமார் பாண்டே, கட்சியின் தலைமைக் கொறடா பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் கூறுகையில், தனது கட்சியின் 3 வேட்பாளர்களும் உறுதியாக வெற்றி பெறுவர். தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க. அனைத்து உக்திகளையும் பயன்படுத்தும். தனிப்பட்ட லாபத்தை விரும்பும் தலைவர்கள் பா.ஜ.க.வுக்குச் செல்லலாம் என தெரிவித்தார்.

    • இதுதொடர்பாக பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • ஒவ்வொரு ஆண்டும் இந்த சடங்கில் முதல்வர் பங்கேற்பார் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜஜாங்கிரி மற்றும் கும்ஹாரி ஆகிய இரண்டு கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்கிற பாரம்பரிய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சாட்டையால் அடிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த வழிபாட்டின்போது சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மணிக்கட்டில் சாட்டையால் பலமுறை சவுக்கடி வாங்கினார்.

    கௌரி- கௌரா வழிபாட்டின் போது சவுக்கடி வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகவும், தீமை விலகியோடும் என்றும் நம்பப்படுகிறது என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதுதொடர்பாக பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    மாநிலம் செழிக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் இந்த சடங்கில் முதல்வர் பங்கேற்பார் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×