search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhi"

    • அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன.
    • விடுமுறை தராத விரக்தியில் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    லக்னோ:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. கோவில் திறப்பு விழா மற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வானது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன. ஒரு சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வேலை நேரத்தில் சலுகைகள் அறிவித்தன.

    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழா நாளன்று விடுமுறை தராததால் வேதனை அடைந்த ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    வேலை பார்த்த நிறுவனத்தின் பொது மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் வேலையை விட்டுவிட்டேன் என அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் பலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டனர்.

    • 21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது.
    • இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.

    21-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெற்றது.

    இந்த விழாவில் இந்த ஆண்டு போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் தோழில், விக்ரம் சுகுமாரனின் இராவண கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டது.



    இதில் சிறந்த படமாக தேர்வான அயோத்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக தேர்வான உடன்பால் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.


    பிரீத்தி அஸ்ரானி

    மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக பிரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.

    ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கும் ‘அயோத்தி’ படத்தின் முன்னோட்டம்.
    பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். 'அயோத்தி' என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 22-ம் தேதி (இன்று) தொடங்கவுள்ளது.

    மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று மந்திர மூர்த்தி கூறினார்.

    படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், "எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. கதையை கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்," என்றார்.

    சசிகுமார்
    சசிகுமார்

    மதுரை, ராமேஸ்வரம் பின்னணியில் உருவாகும் திரைப்படத்துக்கு ‘அயோத்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “இந்த படத்திற்க்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது,” என்றார் அவர். 

    'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
    ×