search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டு"

    • கரூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் கடந்த 7-4-2018 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிவசக்தி நகர் வேப்பங்காடு தோட்டம் அருகில் உள்ள முள்காட்டில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 22) என்பவர் கடந்த 7-4-2018 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த முருகன் (33), அவரது உறவினர் பெருமாள் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முருகன், பெருமாள் ஆகிய 2 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த கே.வி.ஆர்.நகர் உதவி கமிஷனர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பத்ரா மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பாராட்டினார். 

    • பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
    • பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் விபத்து ஏற்படுத்தி விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வணங்காமல் போக்குவரத்து துறை காலதாமதம் செய்து வந்துள்ளது. அவ்வாறு நீண்ட நாளா நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புள்ள அரசு பஸ்களை ஜப்தி செய்ய திருப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின்படி இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர். ஜப்தி செய்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சொத்துகள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.
    • அரியலுாரைச் சேர்ந்த மரிய சூசை வியாகுலம் என்பவர் உதவியுடன், போலி ஆவணம் தயாரித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மூலனுாரைச் சேர்ந்தவர் செல்லதுரை (31) ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தில் அவர் பெற்ற கடனுக்காக அவர் ஈடு வைத்த சொத்துகள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.

    இதனையடுத்து செல்லதுரை அரியலுாரைச் சேர்ந்த மரிய சூசை வியாகுலம் என்பவர் உதவியுடன், போலி ஆவணம் ஒன்றை தயாரித்தார். அதில், இசைவு தீர்ப்பாணையத்தில் அந்த சொத்து விவகாரத்தில் சமரசம் செய்து, கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவை நகலை பிரகாஷ், (45) என்பவர் மூலம் தாராபுரம் சப் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். விசாரணையில் இது போலி எனத் தெரிய வந்தது. போலி ஆவணங்கள் மூலம் கோர்ட்டை மோசடி செய்ததாக, சப் கோர்ட் கிளார்க் சுதா, தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக பிரகாஷ் மற்றும் மரிய சூசை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள செல்லதுரையை போலீசார் தேடுகின்றனர்.

    • வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்தவர் ஜமீலா பானு. இவர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வக்கீலா பணியாற்றி வருகிறார் . நேற்று மாலை ஜமீலா பானு அவரது அலுவலகத்தில் இருந்தபோது ரகுமான்கான் என்பவர் அரிவாளால் ஜமீலா பானுவையும், அவரது மகளையும் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ,அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

    • கடந்த 1½ ஆண்டாக இந்த பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது.
    • உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் பிறப்பித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் முதல் மற்றும் 2 வது கூடுதல் மாவட்ட கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இதில் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகப் பணியாற்றிய கோவிந்தராஜ் கோவைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.கடந்த 1½ ஆண்டாக இந்த பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் இக்கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் தாமதமாகி வந்தது.

    தற்போது கும்பகோணம் விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்த பத்மா, திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் பிறப்பித்துள்ளார்.  

    • காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனித்தனி அறைகளில் வழக்குகள் விசாரணை நடந்தது.
    • மாவட்டம் முழுவதும் 2126 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தில் மதியம் 12 மணி வரை 314 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    நாகர்கோவில்:

    கோர்ட்டுகளில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் கோர்ட் டில் இன்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி அருள் முருகன் தலைமை தாங்கி னார். மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி மாய கிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், நீதிபதி நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனித்தனி அறைகளில் வழக்குகள் விசாரணை நடந்தது.

    பூதப்பாண்டி,குழித்துறை, தக்கலை, இரணி யல் கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டம் முழுவதும் 2126 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தில் மதியம் 12 மணி வரை 314 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.இதன் மூலம் ரூ. 4 கோடியே 39 லட்சத்து 60 ஆயிரத்து 460 க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    • ஆட்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம், சாட்சி பாதுகாப்பு என மூன்றும், மனிதரின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பேசப்பட வேண்டிய முக்கிய காரணியாக உள்ளது.
    • உலகெங்கும் நடக்கும் ஆட்கடத்தல் மூலம் மனித உரிமை மீறல், பொருளாதார சுரண்டல் என பெரும் வியாபாரம் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் தொண்டு நிறுவனம், சேவ் அறக்கட்டளை சார்பில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு கூட்ட அரங்கில் ஆள்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி கருத்துரை வழங்கினார்.

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசும்போது, 'ஆட்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம், சாட்சி பாதுகாப்பு என மூன்றும், மனிதரின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பேசப்பட வேண்டிய முக்கிய காரணியாக உள்ளது. அரசு வக்கீல்கள், கூடுதல் அரசு வக்கீல்கள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் பட்டியல் வக்கீல்கள் அனைவரும் இந்த நிகழ்வை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    தமிழ்நாடு அலையன்ஸ் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் பாலமுருகன், உலகெங்கும் நடக்கும் ஆட்கடத்தல் மூலம் மனித உரிமை மீறல், பொருளாதார சுரண்டல் என பெரும் வியாபாரம் நடப்பது குறித்து பேசினார். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய சட்ட உதவி மைய வக்கீல் டேவிட் சுந்தர் சிங், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் குறித்து பேசினார். அரசு வக்கீல்கள் மற்றும் பட்டியல் வக்கீல்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிக விலைக்கு சிலிண்டர் விற்ற தனியார் கியாஸ் ஏஜென்சிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விட்டது.
    • கேஸ் கம்பெனியின் அதிக வசூல், குறித்து வாடிக்கையாளர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கடந்த ஆண்டு 2019 மே 6-ந் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் ரீபிள் கேட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்தார். கேஸ் ஏஜன்சியினர் சசிகலா பெயரில் ரசீது போட்டு கட்டணம் ரூ.746 என பதிவு செய்துள்ளனர்.

    மே 11-ந் தேதி கேஸ் கம்பெனியினர் சமையல் கேஸ் சிலிண்டரை சசிகலாவின் வீட்டிற்கு கொண்டு வந்து விநியோக புத்தகத்தை வாங்கி கையெழுத்திட்டு, கேஸ் சிலிண்டருக்கு ரூ.800 கட்டணம் கேட்டுள்ளனர். வாடிக்கையாளர் சசிகலா ரசீதில் ரூ.746 என்று தான் உள்ளது. அதை மட்டுமே தருவேன் என்று கூறவே, பணியாளர் ரூ.800 கொடுத்தால் தான் சிலிண்டர் தரமுடியும், இல்லையெனில் நான் திருப்பி எடுத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு சிலிண்டரை எடுத்துச் சென்றுவிட்டார்.

    கேஸ் கம்பெனியின் இத்தகைய அதிக வசூல், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக்குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிக முறையாகும் என சசிகாலா நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் முத்துக்குமார், ரத்தினசாமி ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

    விசாரணை முடிவில், வாடிக்கையாளருக்கு பில் விலையிலேயே கேஸ் சிலிண்டரை விநியோகம் செய்ய கோர்ட் உத்திரவிட்டது. மேலும், சசிகலாக்கு கேஸ் ஏஜென்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மனஉளைச்சல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கின் செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் நல நிதிக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை 2 மாதத்தில் நிறைவேற்றா விட்டால் சசிகலாக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.

    • மருத்துவரின் அலட்சியப்போக்கால் கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் காவலர்கள் தவித்து வருகின்றனர்.
    • விரைவாக மருத்துவ சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவச் சான்று வாங்க போலீசார் சென்றனர்.

    ஆனால் இதுவரை மருத்துவ சான்று வழங்கப்படவில்லை. மருத்துவரின் அலட்சியப்போக்கால் கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் காவலர்கள் தவித்து வருகின்றனர். ஒரு கைதியை நீதிமன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டும்.ஆனால் மருத்துவமனையில் மருத்துவ சான்று வழங்குவதில் காலதாமதம் ஆவதால் ஆஜர்படுத்த முடியாமல் தவித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    எனவே விரைவாக மருத்துவ சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர். 

    • 20க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் செய்யப்பட்டது.
    • கோவையை சேர்ந்த யோகினி அனிதா யோகா பயிற்சி அளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில் உலக யோகா தின விழா திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை வரவேற்று பேசினார். திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், யோகா மற்றும் இயற்கை உதவி மருத்துவ அலுவலர் திவான் மைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோவையை சேர்ந்த யோகினி அனிதா யோகா பயிற்சி அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் செய்யப்பட்டது. இதில் தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி, மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் மற்றும் நீதித்துறை நடுவர்கள், கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கூடுதல் மகிளா நீதிபதி கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    உலக சமுதாய சேவா சங்கம், திருப்பூர் மண்டல மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள், தவ மையங்கள் சார்பில் உலக யோகா தின விழா, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் நாகராஜன் தலைமை தாங்கி பேசினார். இதில் திருப்பூர் மண்டல செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா பயிற்சியை ஸ்கை குழும நிர்வாக இயக்குனர் சுந்தரராஜ் தொடங்கிவைத்தார்.

    மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் திருப்பூர் மண்டல தலைவர் கருணாநிதி நன்றி கூறினார். இதில் பலரும் பங்கேற்று யோகா செய்தனர்.

    ×