search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consumer"

    • நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.
    • மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன், காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை (21-ந் தேதி) பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிகிறார். பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
    • திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    அவிநாசி:

    அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின்கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    இதில், மின்நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா். 

    • தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.
    • சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தமிழகத்தில் 1.48 கோடி வீட்டு வாடிக்கையாளர் உள்ளனர். தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.

    இந்தியன் ஆயிலின் கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளம், மிஸ்டு கால், வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றின் வாயிலாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் சில நேரங்களில், வேலை நிமித்தம் காரணமாக, சிலிண்டர் முன்பதிவு செய்ய மறந்து விடுகின்றனர். இதனால் சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    இதை தவிர்க்க தற்போது, சிலிண்டர் பதிவு செய்வது குறித்து நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    அந்த எஸ்.எம்.எஸ்.,-ல் கடைசி சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட தேதி மற்றும் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டிய மிஸ்டு கால் எண், இணையதள, 'லிங்க்' ஆகியவையும் அனுப்பப்படுகிறது.

    • கடலூர் மாவட்டத்தில் பழவியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பழவியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர். கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அதனை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி, வயிற்றுபோக்கு, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதுடன் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் இருக்கிறது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதுடன் உடனடி அபாரதம் விதிக்கப்படும். மேற்குறிப்பிட்ட குற்றத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யவும். 3 மாத காலம் வரை கடையை சீல் வைத்து வர்த்தகத்தை நிறுத்திவைக்கப்படும்.

    நுகர்வோருக்கு வழங்கப்படும் பழங்கள் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும். மேலும் தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் தெரிவிக்கலாம் எனவும், புகார்தாரரின் விவரங்கள் மற்றும் ரகசியம் பாதுகாக்கப்படுவதுடன் புகார் அளித்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்யப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு பேசினார். 

    • கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
    • கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் சிலிண்டர் எடுத்துச் செல்லக்கூடாது. 5 வருடங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வால்வு, கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கடைகள் ரூ.2 கோடியே 51 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
    • ஏலத்தை ரத்து செய்யக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் நல்லூர் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம் அளித்த மனுவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூ மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகள் ரூ.2 கோடியே 51 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு அதிக தொகை வருவாயாக கிடைக்கும். எக்காரணத்தை கொண்டும் ஏலத்தை ரத்து செய்யக்கூடாது. அவ்வாறு ரத்து செய்தால் பொதுநலன் கருதி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

    இதுபோல் மாநகராட்சி பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் தெரிவித்தார்.

    • மதுரை வடக்கு கோட்டத்தில் வருகிற 3-ந் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின் பகிர்மான செய ற்பொ றியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஸ்கோர்ஸ் சாலை மதுரை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர், மேலமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நு கர்வோர்கள் குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்துக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சமயநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரால் நாளை (6-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சமயநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சமயநல்லூர் கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர் பங்கேற்று மின் விநியோக குறைகளை தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    • நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடியாக திகழ தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • குறைதீர் ஆணைய நீதிபதி தெரிவித்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினருக்கும், நில அளவை பதிவேடுகள் துறையினருக்கும் நுகர்வோர் சட்ட கல்வி பயிற்சி பட்டறை அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கூறியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் இயன்ற வரை அனைவருக்கும் நுகர்வோர் சட்டக் கல்வி பயிற்சி நடத்துவது என்ற அடிப்படையில் இதற்கான திட்டம் தொடங்கப்பட்டு அரசு அலுவலர்களுக்கும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வழங்கல் அலுவலகம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ள வருவாய்த் துறையினரும், நில அளவைகள் நில அளவை பதிவேடு துறையினரும் பொதுமக்கள் சேவை கட்டணம் செலுத்தி கேட்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் பிரச்சனைகள் வழக்குகளாக மாறக்கூடிய நிலை தவிர்க்கப்படும். கடந்த 6 மாதங்களில் அரியலூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வருவாய்த்துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு சில வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    தற்போது அரியலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு எதிராக 15 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. கடந்த 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் அச்சட்டம் நீக்கப்பட்டு 1919 ஆம் ஆண்டு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

    புதிய சட்டத்தின்படி நுகர்வோர் ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தவறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நுகர்வோர் ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு மாற்றப்பட்டன.

    இவ்வாறு நிலுவையில் இருந்த வழக்குகள் 4 வழக்குகளை தவிர அனைத்தும் கடந்த ஆறு மாத காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நுகர்வோர் புகார் தாக்கல் செய்தால் குறைந்தபட்சம் 90 நாட்கள் அல்லது அதிகபட்சம் 150 நாட்களில் தீர்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நுகர்வோரை பாதுகாக்க அரசு ஊழியர்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டோர் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட கல்வியை மேம்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடி மாவட்டமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவக்கப்பட்டது.
    • தி.மு.க. ஆழ்வை மத்திய ஒன்றியசெயலாளர் நவீன் குமார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆரம்பித்து வைத்தார்.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவக்கப்பட்டது.

    இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தால் குருகாட்டூர், கோட்டூர், மேலகடம்பா, கல்லாம்பாரை, தென்திருப்பேரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவை செய்த நெல்லை நேரடியாக கொள்முதல் நிலையத்தில் கொடுத்து பயனடையலாம்.

    தி.மு.க. ஆழ்வை மத்திய ஒன்றியசெயலாளர் நவீன் குமார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆரம்பித்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் கோவில்துரை, நகர செயலாளர் முத்து வீர பெருமாள், கவுன்சிலர் ஆனந்த், நுகர் பொருள் வாணிப கழக பட்டியல் எழுத்தர் இசக்கி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மின்நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
    • செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

    அரியலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை தெற்கு கோட்டத்தில் நாளை மி்ன்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (16-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம், மதுரை பெருநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) அம்சவள்ளி தலைமையில் நடக்கிறது.

    இதில் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்துக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன தெரிவித்துள்ளார்.

    ×