search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cylinders"

    • பாளை கே.டி.சி நகரில் செல்லத்துரை என்பவர் சிலிண்டர்களுடன் லாரியை நிறுத்தி இருந்தார்.
    • விசாரணையில் லாரியை தனியார் நிதி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

    நெல்லை:

    பாளை தியாகராஜ நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (50). கியாஸ் சிலிண்டர் லாரி டிரைவர். இவர் நேற்று பாளை கே.டி.சி நகர் தூத்துக்குடி 4 -வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள அரசு பஸ் டெப்போ அருகே சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 342 சிலிண்டர்களுடன் லாரியை நிறுத்தி இருந்தார்.

    பின்னர் செல்லத்துரை வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். இதன் பின்னர் அங்கு சென்று பார்த்தபோது லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லத்துரை பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் லாரியை தனியார் நிதி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் சிலிண்டர்களுடன் லாரியை நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் சிலிண்டர் லாரி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஓட்டல்களில் அதிரடி சோதனை
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டு உபயோகசிலிண்டர்களை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து திருப்பத்தூர், வேலூர் மாவட்ட இந்தியன் ஆயில் விற்பனை மேலாளர் ஜெகதீஷ் தலைமையில் ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் டீ கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. அவ்வாறு பயன்படுத்திய 40 வீட்டு உபயோகசிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் வீட்டிற்கு பயன்படுத் தப்படுத்த கூடிய சிலிண்டர்களை வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது எனவும், அவ்வாறு பயன்படுத்தப்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிக விலைக்கு சிலிண்டர் விற்ற தனியார் கியாஸ் ஏஜென்சிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விட்டது.
    • கேஸ் கம்பெனியின் அதிக வசூல், குறித்து வாடிக்கையாளர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கடந்த ஆண்டு 2019 மே 6-ந் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் ரீபிள் கேட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்தார். கேஸ் ஏஜன்சியினர் சசிகலா பெயரில் ரசீது போட்டு கட்டணம் ரூ.746 என பதிவு செய்துள்ளனர்.

    மே 11-ந் தேதி கேஸ் கம்பெனியினர் சமையல் கேஸ் சிலிண்டரை சசிகலாவின் வீட்டிற்கு கொண்டு வந்து விநியோக புத்தகத்தை வாங்கி கையெழுத்திட்டு, கேஸ் சிலிண்டருக்கு ரூ.800 கட்டணம் கேட்டுள்ளனர். வாடிக்கையாளர் சசிகலா ரசீதில் ரூ.746 என்று தான் உள்ளது. அதை மட்டுமே தருவேன் என்று கூறவே, பணியாளர் ரூ.800 கொடுத்தால் தான் சிலிண்டர் தரமுடியும், இல்லையெனில் நான் திருப்பி எடுத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு சிலிண்டரை எடுத்துச் சென்றுவிட்டார்.

    கேஸ் கம்பெனியின் இத்தகைய அதிக வசூல், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக்குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிக முறையாகும் என சசிகாலா நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் முத்துக்குமார், ரத்தினசாமி ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

    விசாரணை முடிவில், வாடிக்கையாளருக்கு பில் விலையிலேயே கேஸ் சிலிண்டரை விநியோகம் செய்ய கோர்ட் உத்திரவிட்டது. மேலும், சசிகலாக்கு கேஸ் ஏஜென்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மனஉளைச்சல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கின் செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் நல நிதிக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை 2 மாதத்தில் நிறைவேற்றா விட்டால் சசிகலாக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.

    ×