search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt.Bus"

    • பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வேகத்தடையில் பட்டு சேதமடைந்ததாக தெரிகிறது.
    • கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் கொசு தொல்லையால் அவதி அடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசியில் இருந்து நெல்லைக்கு பாவூர்சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    வேகத்தடை

    பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடம் அருகே பஸ் வந்த போது சாலையின் நடுவே இருந்த வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியது.

    அப்போது பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வேகத்தடையில் பட்டு சேதமடைந்ததாக தெரிகிறது. இதனால் அந்த வழியே பயணிகள் ஏறவோ, இறங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இதனால் ஆலங்குளம் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மாற்று பஸ்கள் இல்லாததால் வெகு நேரம் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தின் முன்பு காத்திருந்தனர்.

    இதில் பெண்கள் மற்றும் கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் கொசு தொல்லையால் மிகவும் அவதி அடைந்தனர். நள்ளிரவு நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். இது குறித்து தென்காசி பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 1½மணி நேரத்திற்கு பின்னர் வந்த மாற்று பஸ் ஆனது பயணிகளை ஏற்றிக் கொண்டு நெல்லை நோக்கி சென்றது.

    சமீப காலமாக அரசு பஸ்களில் ஏற்படும் பழுதுகளை முறையாக சரிசெய்யாமலும், பராமரிப்பு பணியை மேற்கொள்ளாமலும் சம்பந்தப்பட்ட பணிமனை ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    நெல்லை- தென்காசி இடையே இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில் மேற்கூரைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் இயக்கப்பட்டு வருவதாகவும் மழை காலங்களில் பஸ் முழுவதும் தண்ணீர் ஒழுகுவதால் குடையுடனையே பயணிகள் பயணம் செய்யும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    • கயிறு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.
    • அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.

    தாராபுரம் :

    அசாம் மாநிலம் கோக்ரஜ்ஹர் பகுதியை சேர்ந்தவர் திரெளபத் நர்ஜாரி(வயது 42). அதே பகுதியை சேர்ந்த வர்புரஞ்ஜய் நர்ஜாரி(29),சந்த்ரி நர்ஜாரி(38) . இவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மணக்கடவு அருகே உள்ள கயிறு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு 3பேரும் மொபட்டில் தாராபுரத்தில் இருந்து மணக்கடவு நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆச்சியூர் பிரிவு அருகே சென்றபோது ஒட்டன்சத்திரத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திரௌபத் நர்சாரி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
    • பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் விபத்து ஏற்படுத்தி விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வணங்காமல் போக்குவரத்து துறை காலதாமதம் செய்து வந்துள்ளது. அவ்வாறு நீண்ட நாளா நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புள்ள அரசு பஸ்களை ஜப்தி செய்ய திருப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின்படி இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர். ஜப்தி செய்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 5A மற்றும் பேருந்து எண் 13 ஆகிய 2 பேருந்துகள் மூலம் கடந்த 2019 வரை அப்பகுதியினர் பயணம் மேற்கொண்டு வந்தனர்.
    • பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ள் நிறுத்தப்பட்ட 2 பேருந்துகளையும் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியம் இடையர்தவணை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் சுரண்டை, தென்காசி,பாவூர்சத்திரம், வீ.கே. புதூர், செங்கோட்டை, குற்றாலம் போன்ற நகரங்களுக்கு பேருந்து எண் 5A மற்றும் பேருந்து எண் 13 ஆகிய 2 பேருந்துகள் மூலம் கடந்த 2019 வரை பயணம் மேற்கொண்டு வந்தனர்.

    ஆனால் தற்பொழுது போக்குவரத்து துறையில் ஆள் பற்றாக்குறை என்ற காரணத்தை கூறி இரண்டு பேருந்துகளும் இடையர்தவணை பகுதிக்கு இயக்கப்படாமல் இருப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் சுரண்டை,தென்காசி, பாவூர்சத்திரம், வீ.கே.புதூர், செங்கோட்டை, குற்றாலம் போன்ற நகரங்களுக்கு சென்று வருவதற்கு தனியார் வாகனங்களில் அதிக அளவு பணம் கொடுத்து சென்று வருவதாக கூறுகின்றனர்.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக தென்காசி அரசு போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் நிறுத்தப்பட்ட 2 பேருந்துகளையும் இடையர்தவணை பகுதிக்கு மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்காசி மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரம்மநாயகம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×