search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே நிறுத்தப்பட்ட 2 அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
    X

    பாவூர்சத்திரம் அருகே நிறுத்தப்பட்ட 2 அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    • 5A மற்றும் பேருந்து எண் 13 ஆகிய 2 பேருந்துகள் மூலம் கடந்த 2019 வரை அப்பகுதியினர் பயணம் மேற்கொண்டு வந்தனர்.
    • பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக ள் நிறுத்தப்பட்ட 2 பேருந்துகளையும் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியம் இடையர்தவணை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் சுரண்டை, தென்காசி,பாவூர்சத்திரம், வீ.கே. புதூர், செங்கோட்டை, குற்றாலம் போன்ற நகரங்களுக்கு பேருந்து எண் 5A மற்றும் பேருந்து எண் 13 ஆகிய 2 பேருந்துகள் மூலம் கடந்த 2019 வரை பயணம் மேற்கொண்டு வந்தனர்.

    ஆனால் தற்பொழுது போக்குவரத்து துறையில் ஆள் பற்றாக்குறை என்ற காரணத்தை கூறி இரண்டு பேருந்துகளும் இடையர்தவணை பகுதிக்கு இயக்கப்படாமல் இருப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் சுரண்டை,தென்காசி, பாவூர்சத்திரம், வீ.கே.புதூர், செங்கோட்டை, குற்றாலம் போன்ற நகரங்களுக்கு சென்று வருவதற்கு தனியார் வாகனங்களில் அதிக அளவு பணம் கொடுத்து சென்று வருவதாக கூறுகின்றனர்.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக தென்காசி அரசு போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் நிறுத்தப்பட்ட 2 பேருந்துகளையும் இடையர்தவணை பகுதிக்கு மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்காசி மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரம்மநாயகம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×